விடிஞ்சதும் சொல்ல போறாங்க! மாருதி ஜிம்னி காரின் விலை இவ்ளோதானா! சந்தோஷத்துல இன்னைக்கு நைட்டு தூக்கம் வராதே!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று மாருதி சுஸுகி ஜிம்னி (Maruti Suzuki Jimny). இது ஆஃப் ரோடு எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். மாருதி சுஸுகி ஜிம்னி காரை நாம் ஏற்கனவே பார்த்து விட்டோம்.

அத்துடன் மாருதி சுஸுகி ஜிம்னி காரை டிரைவ்ஸ்பார்க் குழு ஏற்கனவே பரிசோதனை செய்து விட்டது. ஆனால் இந்த காரின் விலை (Price) எவ்வளவு? என்பது மட்டும் இன்னும் நமக்கு தெரியவில்லை. இதற்கு இன்னும் நாம் நீண்ட காலம் எல்லாம் காத்திருக்க வேண்டியதில்லை.

Maruti Jimny

இன்னும் சில மணி நேரங்கள் மட்டும் காத்திருந்தால் போதுமானது. ஆம், மாருதி சுஸுகி ஜிம்னி காரின் விலை நாளை (ஜூன் 7) அறிவிக்கப்பட்டு, முறைப்படி விற்பனைக்கு கொண்டு வரப்படவுள்ளது. இது நடப்பு 2023ம் ஆண்டில் நடைபெறவுள்ள மிகப்பெரிய கார் அறிமுகங்களில் ஒன்றாகும்.

எனவே வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவிலான எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. மாருதி சுஸுகி ஜிம்னி காரின் விலை எவ்வளவு? என்பது தெரிவதற்கு முன்பாகவே, 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகள் (Bookings) குவிந்து விட்டன. எனவே விலை மட்டும் சரியான அளவில் நிர்ணயம் செய்யப்பட்டு விட்டால், மாருதி சுஸுகி ஜிம்னி நிச்சயமாக மிகப்பெரிய வரவேற்பை பெறும்.

Maruti Jimny Side Design

நாளைதான் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றாலும் கூட, மாருதி சுஸுகி ஜிம்னி காரின் ஆரம்ப விலை வெறும் 9 அல்லது 10 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி சுஸுகி ஜிம்னி கார் மொத்தம் 2 வேரியண்ட்களில் (Variants) கிடைக்கும்.

அவை ஆல்பா மற்றும் ஜெட்டா ஆகியவை ஆகும். மாருதி சுஸுகி ஜிம்னி காரின் செயல்திறனை பொறுத்தவரையில், 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 6,000 ஆர்பிஎம்மில் 103 பிஹெச்பி பவரையும், 4,000 ஆர்பிஎம்மில் 134.2 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.

இந்த இன்ஜினுடன், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படவுள்ளன. அதே நேரத்தில் மாருதி சுஸுகி ஜிம்னி காரின் 2 வேரியண்ட்களிலும், ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் ஸ்டாண்டர்டாக இடம்பெற்றுள்ளது. இது உண்மையிலேயே மிகவும் சிறப்பான ஒரு விஷயம் ஆகும்.

இந்திய சந்தையை பொறுத்தவரையில், மஹிந்திரா தார் (Mahindra Thar) எஸ்யூவி கார்தான், மாருதி சுஸுகி ஜிம்னி காரின் நேரடி போட்டி மாடல் ஆகும். மஹிந்திரா தார் எஸ்யூவி காரில், டீசல் இன்ஜின் ஆப்ஷனும் இருக்கிறது. ஆனால் மாருதி சுஸுகி ஜிம்னி காரில் டீசல் இன்ஜின் ஆப்ஷன் இல்லை. இது மாருதி சுஸுகி ஜிம்னி காரின் குறைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டீசல் இன்ஜின் ஆப்ஷன் இல்லை என்றாலும் கூட, மஹிந்திரா தார் எஸ்யூவி காருக்கு, மாருதி சுஸுகி ஜிம்னி விற்பனையில் மிக கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தலாம் என்பது எங்கள் கருத்து. விலை தெரிவதற்கு முன்பே 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாருதி சுஸுகி ஜிம்னி காரை முன்பதிவு செய்திருப்பது, இதை மிகவும் தெளிவாக உணர்த்துகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, June 6, 2023, 23:13 [IST]
English summary
Maruti jimny launch tomorrow expected price engine variants full details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+