இன்னும் கொஞ்ச நாள்ல ரோடு ஃபுல்லா இந்த கார் தான் ஓடும் போல! தினம் 700 பேர் இந்த காரை புக் பண்ணுறாங்க...
மாருதி சுஸூகி நிறுவனம் இந்தியாவில் ஜிம்னி 5 டோர் காரை அறிமுகப்படுத்திய பிறகு ஏராளமான மக்கள் அந்த காரை புக்கிங் செய்து வருகின்றனர். இதுவரை 16,500 பேர் புக் செய்துவிட்டனர். தினமும் சராசரியாக 700 புக்கிங் குவிகிறது. இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.
இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பாளரான மாருதி சுஸூகி நிறுவனம் இந்தியாவில் பிரத்தியேகமான ஆஃப்ரோடர் எஸ்யூவி காராக ஜிம்னி 5 டோர் காரை கடந்த மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் வெளியிடப்பட்டது. கடந்த ஜனவரி 12ம் தேதி வெளியிடப்பட்ட இந்த காருக்கான புக்கிங் அதே நாளே துவங்கியது. இந்த காருக்கு பொதுமக்கள் மத்தியில் பயங்கரமான எதிர்பார்ப்பு இருந்த நிலையில் பலர் வரிசையாக இந்த காரை புக் செய்யத் துவங்கினர்.

புக்கிங்!
தற்போது மாருதி நிறுவனம் இந்த ஜிம்னி காருக்கு சராசரியாக ஒரு நாளுக்கு 700 கார்கள் வரை புக்கிங் பெறுகிறது. தற்போது புக்கிங் 16,500ஐ தாண்டிவிட்டது. ஜிம்னி காருக்கான புக்கிங் துவங்கியது முதல் தொடர்ந்து குறையாமல் வந்து கொண்டே இருக்கிறது. கிட்டத்தட்ட டெலிவரி துவங்கும் முன்பே இந்தியாவில் இந்த கார் மிகப்பெரிய ஹிட்டான கார் என்றே வைத்துக்கொள்ளலாம்.
மாருதி நிறுவனத்தின் இந்த ஜிம்னி 5 டோர் காரை பொருத்தவரை இந்த ரக காரை மாருதி நிறுவனம் 3 டோர் காராக இந்தியாவில் கடந்த 2018ம் ஆண்டு முதல் தயாரித்து வருகிறது. ஆனால் இந்த கார்கள் வெளிநாட்டிற்கு மட்டுமே விற்பனையாகி வந்தது. இந்தியாவில் இந்த காரை 5 டோராக மாற்றும் போது 3 டோர் காரின் அதே லுக்கில் அதிக வீல் பேஸை மட்டும் வைத்து வடிவமைத்துள்ளனர். இதன் மூலம் 2 டோர்களை அதிகப்படுத்தியுள்ளனர்.

ஜிம்னி காரில் வெளிப்புற தோற்றம் ஒரு பாக்ஸி லுக்கில் இருக்கிறது. மாருதி நிறுவனத்தின் கார்கள் பொதுவாக இப்படியான டிசைன் இருக்காது. ஆனால் இந்த கார் ஆஃப்ரோடிற்காக பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்ட வாகனம் என்பதால் இதைச் செய்துள்ளது. இந்த காரின் அந்நிறுவனம் புதிய ஆல்கிரிப் ப்ரோ தொழிற்நுட்பம் உள்ளது. இது 2H, 4H மற்றும் 4L லோ-ரேஞ்ச் டிரான்ஸ்பர் கியர் ஆகியவற்றை வழங்குகிறது.
அளவுகள்
இந்த ஜிம்னி காரை பொருத்தவரை 3 டோர் வெர்ஷனை வீல் பேஸை அதிகரித்து 5 டோர் வெர்ஷனாக மாற்றியுள்ளனர். இதன் மூலம் காருக்கு அதிகமான பிராக்டிக்கல் அம்சம் கிடைக்கும் எனச் செய்துள்ளனர். இந்த காரின் அளவுகளைப் பொருத்தவரை 3985 மிமீ நீளம், 1645 மிமீ அகலம், 1720 மிமீ உயரம், 210 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் ஆகிய அம்சங்கள் இந்த காரில் இருக்கிறது. இது போக இந்த கார் ஆஃப்ரோடு எஸ்யூவி என்பதால் இதன் ஆங்கிள்கள் முக்கியமானது 36 டிகிரி அப்ரோச் ஆங்கிள், 24 டிகிரி ரேம்ப் பிரேக்-ஓவர், மற்றும் 50 டிகிரி டிப்பார்சர் ஆங்கிள் ஆகியன உள்ளன.

இன்ஜின்
ஜிம்னி காரை பொருத்தவரை மாருதியின் பிரபலமான 1.5 லிட்டர் 4 சிலிண்டர் நேச்சுரலி அஸ்பயர்டு கே15சி டூயல் ஜெட் இன்ஜினை பொருத்தியுள்ளது. இந்த இன்ஜின் தான் அப்டேட் செய்யப்பட்ட எர்டிகா, எக்ஸ்எல்6 மற்றும் புதிய பிரெஸ்ஸா ஆகிய கார்களில் உள்ளன. இதில் மைல்டு ஹைபிரிட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கார் 104.8 பிஎஸ் பவரையும் 134.2 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த இன்ஜின் 4 ஸ்பீடு டார்க் கண்வெர்டர் அல்லது 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் ஆஃப்ரோடிற்காக பிரத்தியேகமாக டிசைன் செய்யப்பட்டுள்ளது.
வேரியன்ட்
இந்த கார் மொத்தம் ஆல்ஃபா மற்றும் ஸிட்டா என்ற 2 வேரியன்ட்களில் விற்பனையாகிறது. ஆல்ஃபா வேரியன்டைபொருத்தவரை ஆல்ஃபா வேரியன்டில் சில முக்கியமான டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இது ஸ்மார்ட்பிளே சிஸ்டமாக இருக்கிறது. இதில் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே இணைப்புகளைச் செய்ய முடியும்.

பாதுகாப்பு அம்சங்கள்
இது போக இந்த காரில் பாதுகாப்பு அம்சங்களாக 6 ஏர்பேக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. பிரேக்கில் லிமிடெட் ஸ்லிப் டிஃப்ரென்ஸியல், இஎஸ்பி, ஹில் ஹோல்டு அசிஸ்ட், ஹில் டிசெண்ட் கண்ட்ரோல், ரியர் வியூ கேமரா, இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் ஆகிய அம்சங்கள் இந்த காரில் இருக்கிறது.
இந்த ஜம்னி காரை இந்திய ராணுவத்திற்கும் மாருதி நிறுவனம் வழங்கவுள்ளது. அதற்காக இந்த காரில் ஸ்பெஷல் கஸ்டமைஸ் செய்யவுள்ளது. இந்திய ராணுவத்திற்கு 3 டோர் வெர்ஷன் காரையும் சாஃப்ட் டாப் உடன் விற்பனை செய்யவுள்ளது. இதற்கான அனுமதியை மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் வழங்கியுள்ளார். இந்த கார் குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications
