திகட்டுற அளவுக்கு மைலேஜ் கொடுக்கும் கார் வேணுமா? மாருதி புதுசா ஒரு காரை இந்தியால களமிறக்கியிருக்கு!
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மாருதி சுஸுகி பிரெஸ்ஸா சிஎன்ஜி (Maruti Suzuki Brezza S-CNG) காருக்கான புக்கிங் பணிகள் நேற்றைய தினம் தொடங்கப்பட்டநிலையில், இன்று (மார்ச் 17) அக்காரை சுஸுகி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது. இந்த காரின் விலை மற்றும் மைலேஜ் உள்ளிட்ட முக்கிய விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
மாருதி சுஸுகி (Maruti Suzuki)யின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிரெஸ்ஸா சிஎன்ஜி (Brezza CNG) கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. பிரெஸ்ஸா எஸ்-சிஎன்ஜி (Brezza S-CNG) எனும் பெயரில் அது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது. இதுவே இந்தியாவின் முதல் காம்பேக்ட் எஸ்யூவி ரக சிஎன்ஜி கார் ஆகும்.

இதுபோன்று இன்னும் பல்வேறு சிறப்புகளை தாங்கி வாகனமாகவே பிரெஸ்ஸா எஸ்-சிஎன்ஜி விற்பனைக்குக் களமிறக்கப்பட்டு இருக்கின்றது. குறிப்பாக பன்முக பிரீமியம் தர அம்சங்களைத் தாங்கிய வாகனமாக பிரெஸ்ஸா எஸ்-சிஎன்ஜி விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது. எலெக்ட்ரிக் சன்ரூஃப், அலாய் வீல்கள், 7 அங்குல ஸ்மார்ட் ப்ளே ப்ரோ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் என எக்கசக்க அம்சங்கள் அதில் வழங்கப்பட்டு உள்ளன.
இதுமட்டுமில்லைங்க மைலேஜையும் இந்த கார் வாரி வாரி வழங்கும் என மாருதி சுஸுகி தனது அதிகாரப்பூர்வ அறிக்கை வாயிலாகத் தெரிவித்திருக்கின்றது. ஒரு கிலோ சிஎன்ஜிக்கு பிரெஸ்ஸா எஸ்-சிஎன்ஜி 25.51 கிமீட்டருக்கும் அதிகமான மைலேஜை வழங்கும். ஏற்கனவே மாருதி சுஸுகி நிறுவனத்தின்கீழ் எக்கசக்கமான சிஎன்ஜி கார்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன.

அவற்றின் வரிசையிலேயே புதிதாக பிரெஸ்ஸா எஸ்-சிஎன்ஜி சேர்க்கப்பட்டு இருக்கின்றது. இதனுடன் சேர்த்து நிறுவனத்தின்கீழ் தற்போது 14 சிஎன்ஜி கார் மாடல்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. பிரெஸ்ஸா எஸ்-சிஎன்ஜி ஒட்டுமொத்தமாக நான்கு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். முன்னதாக இந்த வாகனம் ஐந்துக்கும் அதிகமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும் என கூறப்பட்டது.
ஆனால், எல்எக்ஸ்ஐ எஸ்-சிஎன்ஜி (LXi S-CNG), விஎக்ஸ்ஐ எஸ்-சிஎன்ஜி (VXi S-CNG), இசட்எக்ஸ்ஐ எஸ்-சிஎன்ஜி (ZXi S-CNG) மற்றும் இசட்எக்ஸ்ஐ எஸ்-சிஎன்ஜி டூயல் டோன் (ZXi S-CNG Dual Tone) இந்த நான்கு விதமான தேர்வுகளிலேயே பிரெஸ்ஸா எஸ்-சிஎன்ஜி கிடைக்க இருக்கின்றது.

ரூ. 9.14 லட்சம் தொடங்கி ரூ. 12.05 லட்சம் வரையில் இந்த காருக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. அடுத்த தலைமுறை கே-சீரிஸ் 1.5 லிட்டர் டூயல் ஜெட், டூயல் விவிடி எஞ்ஜினே பிரெஸ்ஸா எஸ்-சிஎன்ஜி காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
இந்த மோட்டார் அதிகபட்சமாக 64.6 கிலோவாட் பவரை 5,500 ஆர்பிஎம்மிலும், 121.5 என்எம் டார்க்கை 4,200 ஆர்பிஎம்மிலும் வெளியேற்றும். 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மட்டுமே இந்த மோட்டாருடன் வழங்கப்பட இருக்கின்றது. இதேபோல், இரட்டை நிற தேர்வு இந்த காரில் வழங்கப்படும். அது இசட்எக்ஸ்ஐ தேர்வில் மட்டுமே கிடைக்கும்.

இந்தியர்களின் மிகவும் பிரியமான காம்பேக்ட் எஸ்யூவி ரக காராக பிரெஸ்ஸா இருக்கின்றது. இதில் மாருதி சுஸுகி சிஎன்ஜி தேர்வை விற்பனைக்குக் கொண்டு வந்திருப்பது ஒட்டுமொத்த சிஎன்ஜி கார் பிரியர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கின்றது. அதிலும், இது அதிக மைலேஜை வழங்கும் என கூறப்பட்டிருப்பது பலரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications









