ரொம்ப வருஷமா எதிர்பாத்த கார்! ஜிம்னியை களத்தில் இறக்கியது மாருதி! மஹிந்திரா தாரை ஓரங்கட்ட போகுது!

மாருதி நிறுவனத்திடம் மக்கள்நீண்ட ஆண்டுகளாக எதிர்பார்த்த மாருதி ஜிம்னி காரை இந்தியாவில் அந்நிறுவனம் 5 டோர் காராக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

மாருதி நிறுவனத்திற்கு இந்தியாவில் அறிமுகமே தேவையில்லை. இந்தியாவில் கார் வாங்க நினைக்கும் பலருக்கு முதல் கார் மாருதி காராக தான் இருக்கும். இந்தியர்களின் தேவையை அறிந்து அதற்குத் தகுந்தார் போல கார்களை வடிவமைத்து விற்பனைக்குக் கொண்டு வருவதில் மாருதிக்கு நிகர் மாருதியே, மாருதி நிறுவனம் இந்தியாலேயே அதிகமாக கார்களை தயாரித்து விற்பனைக்குக் கொண்டு வரும் நிறுவனம். என்னதான் இந்த நிறுவனம் நம்பர் இடத்திலிருந்தாலும் எஸ்யூவி செக்மெண்டில் இந்த நிறுவனம் பெரிய அளவில் ஜெயிக்கவில்லை.

ரொம்ப வருஷமா எதிர்பாத்த கார்! ஜிம்னியை களத்தில் இறக்கியது மாருதி! மஹிந்திரா தாரை ஓரங்கட்ட போகுது!

பிரெஸ்ஸா காரையும் தற்போது கிராண்ட் விட்டாரா காரையும் இந்த செக்மெண்டில் மாருதி நிறுவனம் கொண்டு வந்திருந்தாலும் போட்டி நிறுவனங்களின் கார்கள் தான் இந்த செக்மெண்டில் சிறப்பான விற்பனையைப் பெற்று வருகிறது. இந்நிறுவனம் தற்போது எஸ்யூவி செக்மெண்டிலும் தனது ஆதிக்கத்தைச் செலுத்த முடிவு செய்துள்ளது. அதன்படி தற்போது மாருதி நிறுவனம் ஆட்டோ எக்ஸ்போவின் இரண்டாம் நாளான இன்று 2 புதிய எஸ்யூவி கார்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதில் முக்கியமாக மக்கள் அதிகமாக எதிர்பார்த்தது மாருதி ஜிம்னி கார் தான். இந்த காரை மாருதி நிறுவனம் பொது பார்வைக்காக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஜிம்னி கார்இந்தியாவில் தயாரித்து வெளிநாட்டிற்கு ஏற்றுமதியாகி வந்தாலும் அது 3 டோர் ஜிம்னி கார் தான். இந்நிலையில் மாருதி நிறுவனம் இந்த காரை 5 டோர் காராக மாற்றி இந்தியா மற்றும் உலக சந்தைக்காகக் கொண்டு வரவுள்ளது.

ரொம்ப வருஷமா எதிர்பாத்த கார்! ஜிம்னியை களத்தில் இறக்கியது மாருதி! மஹிந்திரா தாரை ஓரங்கட்ட போகுது!

ஜிம்னி ஒன்று புதிய கார் எல்லாம் கிடையாது. இந்த கார் 1970களிலேயே வெளியானது. அப்பொழுது முதல் ஆஃப்ரோடுக்கு ஏற்ற சிறப்பான காராக இந்த கார் வடிவமைக்கப்பட்டது. இதனால் பல நாடுகளில் ராணுவத்தில் கூட இந்த கார் வாங்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டது. பல சூழ்நிலைகளில் மீட்பு பணிகளில் கூட இந்த ஜிம்னி கார் பயன்படுத்தப்பட்டது. இந்த கார் பின்னர் பல தலைமுறைகளாக மாற்றியமைக்கப்பட்டது. கடைசியாகக் கடந்த 2018ம் ஆண்டு 4ம் தலைமுறை கார் வெளியிடப்பட்டது.

அப்பொழுது இந்த கார் 3 டோர் காராகவே அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது அதுவே 5 டோர் காராக அஅப்டேட் செய்யப்பட்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த கார் லைஃப் ஸ்டைல் ஆஃப்ரோடு எஸ்யூவி ரக காராகும். ஆஃப்ரோடு பயன்பாட்டிற்குத் தகுந்தார் போல இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதற்காகவே இந்த காரின் மிக முக்கியமான அம்சமாக கிரவுண்ட் கிளியரன்ஸ் 210 மிமீ அளவில் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் ஆங்கிள் கிளியரன்ஸூம் அதிகமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. வீல் பேஸை பொருத்தவரை 2590 மிமீ வழங்கப்பட்டுள்ளது. இதில் 4 பேர் தாராளமாகப் பயணிக்கலாம்.

ரொம்ப வருஷமா எதிர்பாத்த கார்! ஜிம்னியை களத்தில் இறக்கியது மாருதி! மஹிந்திரா தாரை ஓரங்கட்ட போகுது!

இந்த காரின் இன்ஜினை பொருத்தவரை 1.5 லிட்டர் கே15பி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் இந்த காரில் ஆஃப் ரோடிற்காக ட்யூன் செய்யப்பட்டுள்ளது. இது தனது ஸ்ராங்கான டார்க்கை வழங்குகிறது. இது அதிகபட்சமாக 104.8 பிஎஸ் பவரை 6000 ஆர்பிஎம்மிலும் டார்க்கை பொருத்தவரை 134.2 என்எம் டார்க் திறனை 4000 ஆர்பிஎம்மிலும் வழங்குகிறது. இந்த கார் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 4 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர் ஆப்ஷன்களுடன் வருகிறது. மிக முக்கியமாக இந்த காரில் ஆல் கிரிப் ப்ரோ அம்சம் இருக்கிறது. அதாவது அனைத்து வீல்களுக்கு கிரிப்களை வழங்குகிறது. இதில் காரின் ஓட்டி ஓட்டிக்கொண்டிருக்கும் போதே 2Hல் இருந்து 4Hக்கு மாற்றும் ஆப்ஷன் இருக்கிறது. இதன் மூலம் அதிக டார்க் மற்றும் டிராக்ஷன் கிடைக்கிறது. இதனால் எந்த விதமாக கரடு முரடான சாலைகள், மணல்கள், பனிகள் எதிலும் இந்த காரை எடுத்த செல்லலாம்.

இந்த காரில் 3 லிங்க் ரிஜ்ஜிட் ஆக்ஸில் சஸ்பென்சன் வழங்கப்பட்டுள்ளது. இதற்காகக் காயில் ஸ்பிங் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த காரின் சேஸிஸை பொருத்தவரை லேடர் ஃப்ரேம் சேஸிஸ் பொருத்தப்பட்டுள்ளது. இந்த காரின் வீயூவை பொருத்தவரை கமண்டிங் வியூவிற்காக இந்த காரின் ஏ பில்லர் சற்று வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் பிராக்கைப் பொருத்தவரை முன் வீல்களுக்கு வென்டிலேட்டட் டிஸ்க் மற்றும் பின் வீல்களுக்கு டிரம் பிரேக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த காரின் பம்பர் பகுதியைப் பொருத்தவரை சிலமாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. பம்பரில் டஃப் டெக்ஸர் பிளாக் மெட்டிரியல் பயன்படுத்தப்பட்டுள்ளது.இதனால் ஆஃப்ரோட பயணத்தில் ஏற்படும் தடைகளை இந்த பம்பர்கள் தாராளமாகத் தாங்கிக்கொள்ளும் திறன் இந்த காருக்கு இருக்கிறது. இந்த காரின் ரூஃப் பகுதியில் பிராக்டிக்கல் டிரிப் ரயில் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் மழை நேரங்களில் தண்ணீரை விரைவாக கீழே தள்ள உதவும்,

இந்த காரின் ஹெட்லைட்டை பொருத்தவரை எல்இடி ஹெட்லைட்கள் பொருத்தப்பட்டுள்ளது. அதும் வாஷர்கள் உள்ளது. ஆஃப்ரோடங் செய்யும் போது ஏதாவது சகதி அல்லது தூசு வந்து ஹெட்லைட்டில் படிந்து அதன்பவரை குறைந்தால் வாஷர் மூலம் அதைச் சுத்தப்படுத்தி ஹெட்லைட்டை பிரகாசமாக்கலாம்.

இந்த காரின் உட்புறத்தைப் பொருத்தவரை ஸ்கிராட்ச் ரெஸிஸ்டண்ட் கொண்ட சர்ஃபேஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் உட்புறம் டெக்ஸர் ரிஃப்லெக்ஷன் இல்லாதவாறு இருக்கிறது. காருக்குள் கேமராவை வைத்து புகைப்படம் எடுக்கும் போது இது டிஸ்டர்ப் செய்யாமல் இருக்க இப்படி டிசைன் செய்யப்பட்டுள்ளது. இந்த காரின் பட்டன் மற்றும் டச் ஸ்கிரீன் எளிதாகப் பயன்படுத்தும்படி வழங்கப்பட்டுள்ளது. சீட்கள் பயணிகளுக்கு வசதியாக இருக்கும் படி வழங்கப்பட்டுள்ளது.

இந்த காரின் பாதுகாப்பு அம்சங்களைப் பொருத்தவரை 6 ஏர்பேக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இது போக ஹில் டிசென்ட் கண்ட்ரோல், ஹில் ஹோல்டு அசிஸ்ட், பிரேக் லிமிட்டெட் ஸ்லிப் டிஃப்ரென்ஸியல் வழங்கப்பட்டுள்ளது. இந்த காரின் பூட் வசதி அதிகமாக வழங்கப்பட்டுள்ளது. சாதாரணமாக 208 லிட்டர் மற்றும் பின்வரிசை சீட்டை மடித்தால் 332 லிட்டர் பூட்டிற்கான இட வசதி வழங்கப்பட்டுள்ளது. இது போக காரில் பாட்டில் வைப்பது, யூஎஸ்பி சார்ஜர்கள், எனப் பல பிராக்டிகல் அம்சங்களும் ஆஃப்ரோடிற்கு தேவையான படி செய்யப்பட்டுள்ளது.

இந்த கார் மொத்தம் இரண்டு விதமான வேரியன்களில் வருகிறது. ஸெட்டா, ஆல்ஃபா என்ற வேரியன்ட்களில் வருகிறது. இந்த இரண்டு வேரியன்டிலும் மேனுவல் மற்றும் ஆட்டோ மெட்டிக் கியர் ஆப்ஷன்கள் உள்ளன. இதில் ஆல்ஃபா டாப் எண்ட் வேரியன்டாக இருக்கிறது. இதில் ஆல்ஃபா வேரியன்டில் ஸெட்டா வேரியன்டில் இல்லாத சில ஆப்ஷன்களாக அலாய் வீல், ஆட்டோட ஹெட்லைட், ஹெட்லைட் வாஷர், எல்இடி ஹெட்லைட், ஃபாக் லைட்கள், டார்க் கிரீன் கிளாஸ், எலெக்ட்ரிக் ஓஆர்வியும்மில் ரிடிராக்டபிள் வசதி ஆகியன இருக்கின்றன.

இது போக புக் ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன், க்ரூஸ் கண்ட்ரோல், லெதர் வேர்ப்டு ஸ்டிரிங் வீல்கள், ஆட்டோமெட்டிக் கிளைமேட் கண்ட்ரோல் ஆகிய ஆப்னுகுள் இருக்கிறது. அடுத்தாக ஆல்ஃபாவேரியன்வில் ஸ்மார்ட் பிளே ப்ரோ +க்காக 22.86 செ.மீ டச் ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது. இது ARKAMYS சரவுண்ட் சவுண்ட் சிஸ்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. ஸெட்டா வேரியன்டில் 17.78 செ.மீ டச் ஸ்கிரீன் ஸ்மார்ட் ப்ளே ப்ரோவுடன் வழங்கப்பட்டுள்ளது. மார்கெட்டில் இந்த ஜிம்னி காருக்கு போட்டியாக இருப்பது மஹிந்திர தார் கார் தான். ஜிம்னியின் வருகைக்கு பிறகு மஹிந்திரா தார் காரின் விற்பனையில் சரிவு ஏற்படும் என தெரிகிறது.

இந்திய மக்கள் நீண்ட நாள் எதிர்பார்த்த இந்த கார் தற்போது பொது பார்வைக்கு வந்துவிட்டது. இந்த கார் மாருதியின் நெக்ஸா ஷோரூம்களில் விற்பனைக்கு வருகிறது. மாருதி நிறுவனம் இன்று முதல் இந்த ஜிம்னி காருக்கான புக்கிங்கை துவங்கியுள்ளது. இந்த காரின் விலை மற்றும் எப்பொழுது விற்பனைக்கு வரும் என்ற விபரங்களை இந்நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை. புக்கிங் துவங்கியுள்ளதால் வரும் ஏப்ரல் மாதத்திற்குள் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, January 12, 2023, 11:21 [IST]
English summary
Maruti makes global debt of Jimny 5 Door in auto expo 2023
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+