மாருதி கிட்ட இந்த விஷயத்துல டாடாவால கூட நெருங்க முடியாது! மக்கள் ஆதரவு மாருதிக்குத்தான் இருக்குது!
மார்ச் மாதம் துவங்கிய நிலையில் ஒவ்வொரு கார் தயாரிப்பு நிறுவனங்களாக தங்கள் விற்பனை விபரங்களை வெளியிட்டுள்ளனர். அதன்படி மாருதி நிறுவனம் தனது விற்பனை விபரத்தை வெளியிட்டுள்ளது. அதில் அந்நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் விற்பனையில் 10 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
மாருதி நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் பயணிகள் வாகன விற்பனையில் மொத்தம் 1,47,467 கார்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்தாண்டு பிப்ரவரி மாதம் மொத்தம் 1,33,948 கார்களை விற்பனையைச் செய்திருந்தது. இது 10 சதவீத வளர்ச்சியாகும். இதுவே கடந்த ஜனவரி மாத விற்பனையா 1,47,348 என்ற எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது 0.08 சதவீத வளர்ச்சியாகும். இது மாருதி நிறுவனத்திற்கு வழக்கமான ஒரு வளர்ச்சி தான்.

இது நிதியாண்டு கணக்கைப் பார்க்கும் போது கடந்த 2022 ஏப்ரல் மாதம் முதல் 14,74,107 கார்களை விற்பனை செய்துள்ளது. இதுவே அதற்கு முந்தைய நிதியாண்டான 2021 ஏப்ரல் முதல் 2022 பிப்ரவரி வரை மொத்தம் 11,97,697 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. அதை ஒப்பிடும் போது இந்த நிதியாண்டில் மாருதி ஒரு நல்ல வளர்ச்சியைப் பெற்றுள்ளது என்றே சொல்ல வேண்டும்.
மாருதி நிறுவனம் செக்மெண்ட் வாரியான விற்பனை விபரங்களையும் வெளியிட்டுள்ளது. அதன் மினி செக்மெண்டில் ஆல்டோ மற்றும் எஸ்பிரெஸ்ஸோ ஆகிய கார்கள் உள்ளன. அந்த செக்மெண்டில் கடந்த பிப். மாதம் 21,875 கார்கள் விற்பனையாகியுள்ளன இதுவே கடந்தாண்டு பிப்., மாதம் வெறும் 19,691 கார்கள் விற்பனையாகியுள்ளது.

காம்பேக்ட் செக்மெண்டில் அதிகம் விற்பனையாகும் பலேனோ, செலிரியோ, டிசையர், இக்னீஸ், ஸ்விஃப்ட், டூர் எஸ், வேகன் ஆர் ஆகிய கார்கள் உள்ளன இந்த செக்மெண்டில் கடந்த பிப். மாதம் 79,898 கார்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்தாண்டு பிப்., மாதம் வெறும் 77,795 கார்கள் மட்டுமே விற்பனையாகியிருந்தது.
அடுத்தாக மிட் சைஸ் செக்மெண்டில் மாருதி நிறுவனத்திடம் சியாஸ் கார் மட்டுமே இருக்கிறது. இந்த கார் கடந்த பிப்., மாதம் 792 கார்கள் விற்பனையாகியுள்ளது. ஆனால் கடந்தாண்டு பிப்., மாதம் 1912 கார்கள் விற்பனையாகியிருந்தது. இந்த காரின் விற்பனை கணிசமாகக் குறைந்துள்ளது.
யூட்டிலிட்டி செக்மெண்டில் இந்நிறுவனம் பிரெஸ்ஸா, எர்டிகா, எஸ்கிராஸ், எக்ஸ்எல்6, கிராண்ட் விட்டாரா ஆகிய கார்களை விற்பனை செய்து வருகிறது. இந்த கார்கள் கடந்த பிப்., மாதம் மொத்தம் 33,550 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு பிப் மாதம் 25,360 கார்கள் தான் விற்பனையாகியிருந்தது. இந்த செக்மெண்டி ஓராண்டில் சிறப்பான வளர்ச்சியைப் பெற்றுள்ளது.

வேனில் இந்நிறுவனம் ஈக்கோ என்ற ஒரே தயாரிப்பை மட்டுமே விற்பனை செய்து வருகிறது. இந்த கார் கடந்த பிப்., மாதம் மொத்தம் 11,352 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு பிப்., மாதம் 9190 கார்கள் மட்டுமே விற்பனையாகியிருந்தது. கணிசமான வளர்ச்சி இந்த செக்மெண்டில் கிடைத்துள்ளது.
அடுத்தாக லைட் கமர்ஷியல் வெஹிகில் செக்மெண்டில் சூப்பர் கேரி என்ற வாகனத்தை மட்டுமே விற்பனை செய்து வருகிறது. இந்த கார் கடந்த பிப்., மாதம் மொத்தம் 3356 கார்கள் விற்பனையாகியுள்ளது. கடந்தாண்டு பிப். மாதம் மொத்தம் 3659 கார்கள் விற்பனையாகியுள்ளது. இது கொஞ்சம் குறைந்துள்ளது.
மாருதி நிறுவனம் தன் நிறுவன தயாரிப்பு போக மற்ற நிறுவனங்களுக்காகவும் கார்களை தயாரித்து வழங்குகிறது. இந்த செக்மெண்டில் கடந்த பிப்.மாதம் மொத்தம் 4291 கார்களை தயாரித்துக் கொடுத்துள்ளது. இதுவே கடந்தாண்டு பிப்., மாதம் வெறும் 2428 கார்களை தான் தயாரித்துள்ளது. இது கணிசமாக வளர்ந்துள்ளது.

மாருதி நிறுவனம் இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் கார்களை ஏற்றுமதி செய்து வருகிறது. அதில் கடந்த பிப். மாதம் மொத்தம் 17,207 வாகனங்களை ஏற்றுமதி செய்திருந்தது. ஆனால் கடந்தாண்டு பிப்., மாதம் 24021 வாகனங்களை ஏற்றுமதி செய்திருந்தது. கடந்த மாதம் ஏற்றுமதியில் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.
ஒட்டு மொத்தமாக மாருதி நிறுவனம் கடந்த பிப்., மாதம் 1,72,321 வாகனங்களை உள்நாட்டு விற்பனை மற்றும் வெளிநாட்டு ஏற்றுமதியில் விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்தாண்டு பிப். மாதம் வெறும் 1,64,056 வாகனங்களை மட்டும் தான் விற்பனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications









