டாடா, மஹிந்திரா எல்லாம் கலங்கி போய் நிக்குறாங்க! அடிமடியில கை வைக்குற மாதிரி அறிவிப்பை வெளியிட்ட மாருதி!

மாருதி நிறுவனம் தனது 3.0 கொள்கையை அறிவித்துள்ளது. அதன்படி அடுத்த சில ஆண்டுகளில் இந்நிறுவனம் 6 புதிய எலெக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்தப்போகிறது. இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களுக்கான் மவுசு அதிகமாகி வரும் நிலையில் இந்த முடிவை மாருதி நிறுவனம் அறிவித்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

மாருதி நிறுவனம் கடந்த 2022-23ம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையை சமீபத்தில் சமர்பித்தது. இந்த அறிக்கையை அந்நிறுவனம் மாருதி சுஸூகி 3.0 என்ற பெயரில் வெளியிட்டது. இந்த அறிக்கையின் மூலம் மாருதி நிறுவனம் தனது 3வது பரிணாமத்தை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி பல புதிய தயாரிப்புகளை வெளியிடவுள்ளது.

maruti suzuki 3.0

இந்த மாருதி சுஸூகி 3.0 திட்டம் குறித்து அந்நிறுவனத்தின் சேர்மன் ஆர்சி பர்கவா கூறும் போது: "எங்கள் நிறுவனம் ஒரு பப்ளிக் என்டர்பிரைஸஸாக மாறும் போது முதல் பரிணாமத்தை அடைந்தோம். கடந்த கொரோனா காலகட்டத்துடன் எங்களது 2வது பரிணாமம் முடிவடைத்துவிட்டது. தற்போது 3வது பரிணாமத்தில் இருக்கிறோம்.

ஆண்டிற்கு 20 லட்சம் கார்களை தயாரிக்கும் அளவிற்கு நாங்கள் வளர 40 ஆண்டுகள் ஆகியுள்ளது. சுஸூகி நிறுவனம் இதில் மிகப்பெரிய பங்கை வகிக்கிறது. ஆனால் அடுத்த 20 லட்சம் கார்களை 9 ஆண்டுகளில் எட்டி விட்டோம்." என கூறினார். மாருதி நிறுவனம் ஆண்டிற்கு 20 ஆயிரம் கார்களை தயாரித்ததில் துவங்கி தற்போது ஆண்டிற்கு 20 லட்சம் கார்களை தயாரிக்கிறது.

maruti suzuki 3.0

மாருதி நிறுவனத்திடம் தற்போது 2.7 கோடி வாடிக்கையாளர்கள் இந்தியா மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள 100 நாடுகளில் இருக்கின்றனர். இந்நிறுவனம் கடந்தாண்டு மட்டும் மொத்தம் 2.59 லட்சம் கார்களை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்துள்ளது. இது 2030-31ம் நிதியாண்டில் 7.5 லட்சம் முதல் 8 லட்சமாக இருக்கும் என கணக்கிடப்படுகிறது.

மாருதி நிறுவனம் இந்த புதிய மாடல் மற்றும் தொழிற்நுட்பங்கள் மூலம் கார்களுக்கான புதிய மாடல்கள், தொழிற்நுட்பம், கார்பன் வெளியேற்றத்தை குறைப்பது, தயாரிப்பை அதிகப்படுத்துவது உள்ளிட்டவைகளை செய்து வருகிறது. இந்த கொள்கையின் படி மாருதி நிறுவனம் 2030-31ம் நிதியாண்டில் 15 லட்சம் எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்வதை இலக்காக வைத்துள்ளது.

maruti suzuki 3.0

தற்போது நிறுவனம் 2030ம் ஆண்டிற்கும் 28 விதமான வாகனங்களை வைத்து ஆண்டிற்கு 40 லட்சம் வாகனங்களை தயாரிக்க வேண்டும் என்ற கொள்கையை கையில் எடுத்துள்ளது. இதில் 15-20 சதவீதம் பிஇவி, மற்றும் ஹைபிரிட் கார்களாக இருக்க வேண்டும் என திட்டமிட்டுள்ளது. அதாவது தற்போது உள்ள விற்பனையை இருமடங்காக்க முடிவு செய்துள்ளது.

மொத்தம் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ள 40 லட்சம் வாகனங்களில் இந்தியாவில் 32 லட்சம் வாகனங்களையும், மீதியை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.ஒட்டு மொத்த தயாரிப்பில் 40 சதவீதம் எலெக்ட்ரிக் மற்றும் ஹைபிரிட் கார்களாக இருக்க வேண்டும் என திட்டமிட்டுள்ளது. இதனால் வருங்காலத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களின் வருகை அதிகமாவது உறுதியாகியுள்ளது.

மாருதி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் காராக இவிஎக்ஸ் என்ற கார் களம் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் ஜனவரி மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டது. இந்த கார் தயாராகி தற்போது ஐரோப்பாவில் டெஸ்ட் செய்யப்பட்டு வருகிறது. இந்த கார் இந்தியா, ஜப்பான், ஐரோப்பா, உள்ளிட்ட நாடுகளில் விற்பனைக்கு வருகிறது.

மாருதி நிறுவனம் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்களுக்கான பிரத்தியேக பிளாட்ஃபார்மை உருவாக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது போக மாருதி நிறுவனம் ஸ்டிராங்க் ஹைபிரிட் மற்றும் சிஎன்ஜி கார்களையும் அதிகம் களம் இறக்கலாம் என்றும், இது போக எத்தனால் மற்றும் கம்பிரஷ்டு பயோ கேஸ் மூலம் இயங்கும் வாகனங்களை தயாரிக்கவும் யோசித்து வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி நிறுவனத்தின் இந்த 3.0 அவதாரம் தொடர்ந்து தன்னை இந்தியாவில் அதிக கார்களை தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனமாக நிலை நிறுத்தும். எலெக்ட்ரிக் கார் பக்கம் மாருதி பெரியதாக கவனம் செலுத்தவில்லை என்ற பேச்சை இந்த திட்டம் தவிடுபொடியாக்கும். இனி மாருதியின் ஆட்டம் ஆரம்பம் தான்!

More from DriveSpark

Article Published On: Monday, August 7, 2023, 16:32 [IST]
English summary
Maruti suzuki 3 0 business strategy unveiled six electric vehicles on the horizon
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X