மாருதி 800 காரின் இந்த வேரியண்ட்டை பார்ப்பது ரொம்ப கஷ்டம் - மார்க்கெட்டில் கொஞ்ச காலம் தான் இருந்தது!!

மாருதி சுஸுகி 800 (Maruti Suzuki 800) காரை பெரும்பாலானோர் நேரில் பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன். ஆனால் 800 ஆட்டோமேட்டிக் காரை பற்றி கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? இருக்காது. ஏனென்றால் 800 மேனுவல் கார்களே அதிக காலம் உற்பத்தி செய்யப்பட்டன. ஆதலால் மிகவும் அரிதான காராக விளங்கும் மாருதி 800 ஆட்டோமேட்டிக் குறித்து இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவை இனி பார்க்கலாம்.

இந்தியாவில் அதிகளவில் மக்களால் வாங்கப்பட்ட கார்களுள் ஒன்று மாருதி சுஸுகியின் 800 ஆகும். இன்னும் சொல்லப்போனால், ஒரு சமயத்தில் சாலையெங்கும் மாருதி 800 கார்களே உலாவந்து கொண்டிருந்தன. காரில் பொருத்தப்பட்ட 800சிசி என்ஜினின் காரணமாக இந்த காருக்கு இவ்வாறான பெயர் சூட்டப்பட்டது.

maruti suzuki 800 automatic car

இப்போதும் சிலர் 800 காரை வைத்துள்ளனர். இதனாலேயே மாருதி 800 கார் குறித்த வீடியோக்களை பரவலாக இணையத்தில் பார்க்க முடிகிறது. இந்த வரிசையில், ஆட்டோலாக் இந்தியா என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிரே நிறத்திலான 800 கார் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. எல்லா மாருதி 800 காரை போலதானே இந்த 800 காரும், இந்த காரை மட்டும் ஏன் ஸ்பெஷலாக இந்த செய்தியில் பார்க்கிறோம் என்ற கேள்வி உங்களுக்குள் எழலாம்.

ஆனால் விஷயம் இருக்கிறது... ஏனென்றால் இது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸை கொண்ட மாருதி 800 கார் ஆகும். வீடியோவின் துவக்கத்தில், காரின் வெளிப்பக்கம் காட்டப்படுகிறது. பின்னர் கேமராவை காருக்குள் கொண்டு செல்லும்போதுதான், மேனுவல் கியர்பாக்ஸ் இருக்க வேண்டிய இடத்தில் 3-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இருப்பது நமக்கு தெரிய வருகிறது. ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் 800 ஹேட்ச்பேக் காரை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்துள்ளதா? என நீங்கள் ஆச்சிரியப்படலாம்.

maruti suzuki 800 automatic car

இதற்கு பதில், ஆம் என்பதாகும். ஆட்டோமேட்டிக் கார்களுக்கு உலகளவில் நல்ல தேவை உருவாகி கொண்டிருந்த சமயத்தில் 800 காரை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. 800 ஆட்டோமேட்டிக் கார் நகர்புற பயன்பாட்டிற்கு ஏற்றதாக விளங்கியது. ஆனால், போதிய கஸ்டமர்ஸ் விரும்பாதது மற்றும் உற்பத்தியில் இருந்த இடர்பாடுகள் உள்ளிட்ட காரணங்களினால் 800 ஆட்டோமேட்டிக் காரின் விற்பனையை விரைவாக நிறுத்த வேண்டிய கட்டாயம் மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு ஏற்பட்டது.

மாருதி 800 ஆட்டோமேட்டிக் கார்கள் உற்பத்தி செய்யப்பட்டது மிகவும் குறைவான காலத்திற்கே. அந்த சமயத்திலும், குறைவான நபர்களே 800 ஆட்டோமேட்டிக் காரை வாங்கினர். இதன் காரணமாகவே இந்தியாவில் மிகவும் அரிதாக கிடைக்கக்கூடிய/ காணக்கூடிய கார்களுள் ஒன்றாக 800 காரின் ஆட்டோமேட்டிக் வேரியண்ட் விளங்குகிறது. மொத்தமாக எத்தனை 800 ஆட்டோமேட்டிக் கார்கள் விற்பனை செய்யப்பட்டன என்ற விபரங்களை கூட நம்மால் பெற முடியவில்லை, அந்த அளவிற்கு குறைவானது.

maruti suzuki 800 automatic car

தோற்றத்தை பொறுத்தவரையில் எந்த மாற்றமும் இல்லை. 800 மேனுவல் காரின் அதே தோற்றத்தில்தான் ஆட்டோமேட்டிக் வேரியண்ட்களும் வடிவமைக்கப்பட்டன. இந்த வேரியண்ட்டில் 0.8-லிட்டர் என்ஜின் உடன் வழங்கப்பட்ட 3-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் போதுமான செயல்படுதிறனை வழங்கக்கூடியதாக விளங்கியது. இருப்பினும், இதன் விற்பனையை மாருதி சுஸுகி விரைவாகவே நிறுத்தியதை அடுத்து, தற்போது இந்த காரை அரிதான கார்களுள் ஒன்றாக பார்க்கின்றோம்.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: மேனுவல் கார்களையே அதிகம் பேர் வாங்குகின்றனர் என்றாலும், ஆட்டோமேட்டிக் கார்களை வாங்குவதற்கும் தனியாக ஓர் கூட்டம் உள்ளது. இந்த கூட்டம் குறிப்பாக நகர்புறங்களில்தான் பரவலாக உள்ளது. அத்தகையவர்களை கவர்வதற்காகவே ஆட்டோமேட்டிக் தேர்வில் 800 காரை மாருதி சுஸுகி அறிமுகப்படுத்தியது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, நினைத்த அளவிற்கு 800 ஆட்டோமேட்டிக் கார்கள் விற்பனையாகவில்லை.

More from DriveSpark

Article Published On: Monday, June 26, 2023, 15:26 [IST]
English summary
Maruti suzuki 800 automatic car rarely seen video
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X