மாருதி பலேனோ காரை யாரும் இனி தகர டப்பானு சொல்ல மாட்டாங்க.. விலை ஏற்றாமலே புதிய பாதுகாப்பு கருவி சேர்ப்பு!
மாருதி சுஸுகி அதன் புகழ்பெற்ற பலேனே கார் மாடலில் புத்தம் புதிய பாதுகாப்பு அம்சத்தை சேர்த்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த அம்சத்தை சேர்த்ததற்காக நிறுவனம் அக்காரின் விலையை உயர்த்தவில்லை என கூறப்படுகின்றது. இதுபற்றிய கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.
மாருதி சுஸுகி நிறுவனத்தின் புகழ்பெற்ற கார் மாடல்களில் பலேனோவும் ஒன்று. இது ஓர் பிரீமியம் தர ஹேட்ச்பேக் ரக கார் மாடலாகும். இந்த கார் மாடலிலேயே மாருதி சுஸுகி ஓர் புத்தம் புதிய பாதுகாப்பு அம்சத்தை சேர்த்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மும்முனை சீட் பெல்டையே மாருதி சுஸுகி பலேனோவில் சேர்த்திருக்கின்றது. இதுவே பலேனே கார் வரலாற்றில் மும்முனை சீட் பெல்ட் சேர்க்கப்படுவது முதல் முறையாகும். பலேனோ வரலாற்றில் மட்டும் இல்லைங்க ஹேட்ச்பேக் கார் வரலாற்றிலும் மும்முனை சீட் பெல்ட் இதுவே முதல் முறையாகும்.
மாருதி சுஸுகி நிறுவனத்தின் பெஸ்ட் செல்லிங் ஹேட்ச்பேக் ரக காராக பலேனோ (2023 Maruti Suzuki Baleno) இருக்கின்றது. இந்த காரில் மும்முனை சீட் பெல்ட் வசதியை மாருதி சுஸுகி அறிமுகம் செய்திருப்பது அந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

பயணத்தின்போது பாதுகாப்பை வழங்குவதில் முக்கிய பங்கினை வகிக்கின்றது சீட் பெல்ட். அதிலும், மும்முனை சீட் பெல்ட் அதீத பாதுகாப்பை வழங்கக் கூடியதாக இருக்கின்றது. மார்பகம், இடுப்பு மற்றும் தோள்பட்டை ஆகியவற்றிற்கு அதீத பாதுகாப்பை வழங்கக் கூடியதாக இந்த மும்முனை சீட் பெல்ட் இருக்கின்றது.
இந்த அம்சத்தையே நிறுவனம் எந்தவொரு விலை உயர்வையும் செய்யாமல் வழங்கி இருக்கின்றது. இது கூடுதல் ஆச்சரியமளிக்கும் வகையில் அனைவருக்கும் அமைந்திருக்கின்றது. மும்முனை சீட் பெல்ட் மட்டுமின்றி அட்ஜெஸ்டபிள் ஹெட்ரெஸ்ட் பின்னிருக்கைக்கு வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த அம்சமும் இந்த காரில் வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

மாருதி சுஸுகி வழங்கி இருக்கும் இந்த அம்சங்கள் விரைவில் டொயோட்டா கிளான்ஸா காரிலும் இடம் பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவில் வாகன பாதுகாப்பு விதிகள் தொடர்ச்சியாக மேம்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த நிலையிலேயே தன்னுடைய காரை அதிக பாதுகாப்பு வசதிகள் கொண்டதாகவும், பிரீமியம் தரம் கொண்டதாகவும் மாருதி சுஸுகி மாற்றி இருக்கின்றது.
மாருதி சுஸுகியின் தயாரிப்புகள் பெரும்பாலும் பாதுகாப்பு விஷயத்தில் தரம் குறைந்தவையாக இருக்கின்றன. ஆகையால், ஒரு சிலர் சோப்பு டப்பா என குறிப்பிடுவதை நம்மால் கேட்க முடிகின்றது. இதுபோன்று இகழ்பவர்களின் வாயை அடைக்கும் வகையிலேயே மாருதி சுஸுகி புதிய பாதுகாப்பு அம்சத்தை சேர்த்திருக்கின்றது.
பலேனோ காரில் ஏற்கனவே பலதரப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்படுகின்றன. 360 டிகிரி கேமிரா, ஹில் ஹோல்டு அம்சத்துடன் கூடிய இஎஸ்பி, டிரைவர் மற்றும் கோ-டிரைவர்களுக்கான ஏர் பேக்குகள், சைடு மற்றும் கர்டைன் ரக ஏர்பேக் உள்ளிட்ட அம்சங்களை மாருதி சுஸுகி வழங்கி இருக்கின்றது.
அதுதவிர, ரியர் வியூ கேமிரா, ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், ஹை ஸ்பீடு அலர்டு சிஸ்டம், சீட் பெல்டு ரிமைண்டர், பிரேக் அசிஸ்ட், சீட் பெல்ட் ப்ரீ டென்சனர், ஃபோர்ஸ் லிமிடர் மற்றும் சிறுவர்களுக்கான ஐசோஃபிக்ஸ் இருக்கைகள் என எக்கசக்க அம்சங்கள் பலேனோவில் வழங்கப்படுகின்றன.
இந்த பாதுகாப்பு அம்சங்களுடனேயே புதிதாக மும்முனை இருக்கை பெல்டை மாருதி சுஸுகி பலேனோவில் சேர்த்து இருக்கின்றது. இந்த கார் இந்தியாவில் ரூ. 6.61 லட்சம் தொடங்கி ரூ. 9.88 லட்சம் வரையிலான விலையில் விற்கப்படுகின்றது. இது சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி சுஸுகி பலேனோ காரில் மும்முனை சீட் பெல்ட் பாதுகாப்பு அம்சம் புதிதாக சேர்க்கப்பட்டு இருப்பது அதன் பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. எனவே எதிர்காலத்தில் இந்த காரின் விற்பனை எண்ணிக்கை இன்னும் பலமடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications
