சீட் பெல்ட் போடைலனா கத்தோ கத்துனு கத்தும்... இன்விக்டோவின் ஆரம்ப நிலை தேர்வில் சேர்க்கப்பட்ட சூப்பரான அம்சம்!
மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகப்படுத்திய இன்விக்டோ (Invicto) கார் மாடலில் கூடுதலாக பாதுகாப்பு அம்சம் ஒன்றை புதிதாக சேர்த்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சேர்க்கப்பட்டு இருப்பது என்ன அம்சம் என்கின்ற தகவலையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம் இந்தியாவில் சமீபத்தில் விற்பனைக்குக் கொண்டு வந்த கார் மாடலாக இன்விக்டோ (Invicto) இருக்கின்றது. இது ஓர் எம்பிவி ரக காராகும். இன்விக்டோ எனும் பெயர் உங்களுக்கு புதிதாக தென்படாலாம். ஆனால், இந்த கார் ஏற்கனவே நம் அனைவருக்கும் பரீட்சையமான மாடலே ஆகும்.

டொயோட்டாவின் இன்னாவோ ஹைகிராஸ் கார் மாடலின் ரீ-பேட்ஜ் செய்யப்பட்ட மாடலே இன்விக்டோ ஆகும். இந்த கார் மாடலிலேயே மாருதி சுஸுகி நிறுவனம் கூடுதலாக புதிய பாதுகாப்பு அம்சத்தை சேர்த்து இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆரம்ப நிலை வேரியண்டான இன்விக்டோவின் ஜெட்டா பிளஸ் ட்ரிம்மில் சீட் பெல்ட் ரிமைண்டர் சேர்க்கப்பட்டு இருக்கின்றது.
இதற்கு முன்னதாக இந்த அம்சம் வழங்கப்படாத நிலையில் தற்போது அதனை மாருதி சுஸுகி வழங்கி இருக்கின்றது. இந்த அம்சத்தைச் சேர்த்ததன் காரணத்தினால் அதன் விலையும் லேசாக உயர்ந்திருக்கின்றது. 3 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்தப்பட்டு இருக்கின்றது. விலை உயர்வால் அதன் விலை தற்போது ரூ. 24.82 லட்சமாக உயர்ந்திருக்கின்றது. இது டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும்.

முன்னதாக சீட் பெல்ட் ரிமைண்டர் அம்சம் இன்விக்டோவின் உயர் நிலை தேர்வான ஆல்ஃபா பிளஸ்-இல் மட்டுமே வழங்கப்பட்டது. ஆனால், இந்த அம்சம் தற்போது அனைத்து கார்களிலும் இடம் பெற வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதன் அடிப்படையிலேயே மாருதி சுஸுகி இன்விக்டோவின் அனைத்து ட்ரிம்களிலும் சீட் பெல்ட் ரிமைண்டரை சேர்த்திருக்கின்றது.
மாருதி சுஸுகி ஜீட்டா பிளஸ் வேரியண்டை 7 சீட்டர் மற்றும் 8 சீட்டர்கள் தேர்வுகளில் வாங்கிக் கொள்ள முடியும். இதுதவிர நவீன கால அம்சங்கள் நிரம்பிய தேர்வாகவும் இது காட்சியளிக்கின்றது. 8 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், ஒயர்டு ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ, ஆறு ஸ்பீக்கர்கள் முதலான அம்சங்களை இந்த தேர்வில் மாருதி சுஸுகி வாரி வழங்கி இருக்கின்றது.
அதுதவிர மேனுவல்லி அட்ஜஸ்ட் செய்யக் கூடிய ஐஆர்விஎம், ஆறு ஏர் பேக்குகள், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், மும்முனை சீட் பெல்ட் (அனைத்து பயணிகளுக்கும்) உள்ளிட்ட அம்சங்களையும் மாருதி சுஸுகி இந்த காரில் வழங்கி உள்ளது. ஆனால், இந்த அம்சம் போதாது. இதைவிட அதிக சிறப்பம்சங்களைக் கொண்ட இன்விக்டோ எங்களுக்கு வேண்டும் என நினைப்பவராக நீங்கள் இருந்தால் உங்களுக்கான சிறந்த தேர்வாக ஆல்ஃபா பிளர் இருக்கின்றது.
இந்த தேர்வில் பெரிய இன்ஃபோடெயின்மென்ட் திரை, பனோரமிக் சன்ரூஃப், பவர்டு டெயில்கேட், வெண்டிலேட் வசதிக் கொண்ட இருக்கைகள், எலெக்ட்ரிக்கல்லி அட்ஜஸ்டபிள் டிரைவல் இருக்கை, ஒயர்லெஸ் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ, டிபிஎம்எஸ், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா மற்றும் ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார், விண்டோ டிஃபாக்கர், ஆன்டி தெஃப்ட் அலாரம் உள்ளிட்ட அம்சங்களைக் கூடுதலாகக் காண முடியும்.
இதுபோன்று பல்வேறு தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே பலர் இன்விக்டோவின் உயர்நிலை அதிகம் விரும்புகின்றனர். இந்த கார் டொயோட்டா இன்னோவா ஹைகிராஸின் ரீபேட்ஜ் செய்யப்பட்ட மாடலாக இருந்தாலும், மாருதி சுஸுகி மேற்கொண்டிருக்கும் சில மாற்றங்கள் அக்காரை இன்விக்டோவிடம் இருந்து லேசாக மாறுபட்டுக் காட்சியளிக்கச் செய்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி சுஸுகி இன்விக்டோ ஓர் ரீ-பேட்ஜ் செய்யப்பட்ட மாடலாக இருந்தாலும், அதற்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே ஆரம்ப நிலை தேர்வில் மாருதி சுஸுகி சீட் பெல்ட் ரிமைண்டர் அம்சத்தை சேர்த்து இருக்கின்றது. இது இக்காருக்கு கிடைத்துக் கொண்டிருக்கும் வரவேற்பை இரட்டிப்பாக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








