மாருதி ஆல்டோ கார் இது என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டங்க!! இப்படியொரு காரை நீங்களும் உருவாக்கலாம் - ஆனால்...
மாருதி ஆல்டோ கே10 (Maruti Alto K10) காரில் ஆற்றல்மிக்க ஸ்கோடா குஷாக் 1.5 லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்டு உள்ளது. இந்த ஆற்றல்மிக்க என்ஜின் உடன் மாருதி ஆல்டோ கே10 கார் எவ்வாறு உள்ளது? காரில் கிடைக்க பெறும் அதிகப்பட்ச இயக்க ஆற்றல் எவ்வளவு என்பது குறித்த விபரங்களை இனி பார்க்கலாம்.
இந்தியாவில் குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய கார்களுள் ஒன்று மாருதி ஆல்டோ கே10 ஆகும். நடைமுறையிலும் சரி, எரிபொருளை பயன்படுத்தும் அளவிலும் சரி ஆல்டோ கே10 சந்தைக்கு ஏற்ற காராக விளங்குகிறது, இத்தகைய பட்ஜெட் விலை கார் மாடிஃபை செய்யப்பட்டதை பலமுறை நமது செய்தித்தளத்தில் பார்த்துள்ளோம்.

ஆனால் அவற்றில், மாருதி கே10 கார் ஸ்போர்ட்ஸ் காராக விளங்கினால் எவ்வாறு இருக்கும்? என்பதை யோசித்து பார்த்தது இல்லை. இதனை பல்வேறு ஆஃப்டர் கார் மெக்கானிக் ஷாப்கள் நிஜமாக்கி வருகின்றன. அந்த வகையில், மாருதி ஆல்டோ கே10 காரில் ஸ்கோடா குஷாக் காரின் 1.5 லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்டு உள்ளது.
இந்த ஆல்டோ கார் மாடிஃபிகேஷன் செய்யப்பட்டது இந்தியாவில் இல்லை, இலங்கையில் ஆகும். ஸ்கோடா காரின் என்ஜினை கொண்ட இந்த ஆல்டோ கே10 காரில் 0-இல் இருந்து 100kmph வேகத்தை வெறும் 6.5 வினாடிகளில் எட்டிவிடலாம். என்ஜினில் இருந்து இருந்து இந்த மாடிஃபை ஆல்டோ கே10 காரில் அதிகப்பட்சமாக 140 எச்பி மற்றும் 150 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை பெறலாம்.

இத்தகைய இயக்க ஆற்றலை பெறுவதற்காக ஹைப்ரீட் டர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு உள்ளது. அத்துடன், எக்ஸாஸ்ட் வாயு மறுசுழற்சி, கோல்டு ஏர் இண்டேக், புதிய ஏர் ஃபில்டர், புதிய ஏர் இண்டேக் மானிஃபோல்டு, ரீசோனெட்டர் உடன் கூல்டு எக்ஸாஸ்ட், இண்டர்கூலர், ரீகாலிபிரேட்டட் இசியூ, வளையாத இரும்பினால் ஆன ஆயில் கேட்ச் கேன், ஜப்பானிய பியரிங் உடன் ரீபில்டு கியர்பாக்ஸ், புதிய கிளட்ச், ஆயில் & நீர் வெப்ப நிலைகளை அறிய புதிய டிஸ்பிளே, அழுத்தம் & மற்ற முக்கியமான பாராமீட்டர்களும் வழங்கப்பட்டுள்ளன.
இவை மட்டுமின்றி, இரிடியம் பிளக்குகள், கஸ்டம் பாடி கிட், எல்இடி விளக்குகள் மற்றும் புதிய பெயிண்ட் உள்பட ஏகப்பட்ட அம்சங்களையும் இந்த மாடிஃபை ஆல்டோ கே10 கார் கொண்டுள்ளது. இவை எல்லாவற்றையும் விட முக்கிய அப்கிரேட்கள் காரின் என்ஜினில் தான் கொண்டுவரப்பட்டு உள்ளன. இந்த மாடிஃபை செய்யப்பட்ட மாருதி ஆல்டோ கார் 2013ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது அகும்.

கிட்டத்தட்ட 1.2 லட்ச கிமீ தொலைவிற்கு இந்த கார் இயக்கப்பட்டு உள்ளது. இத்தகைய காரில் ஸ்கோடா குஷாக் காரின் என்ஜின் பொருத்தப்பட்டு இருப்பதன் மூலம், கிடைக்கும் இயக்க ஆற்றல் மற்றும் காரின் எடையை பொறுத்தவரையில், ஹோண்டா சிவிக் டைப்-ஆர் கார் உடன் இந்த மாடிஃபை ஆல்டோ கே10 கார் ஒத்துக் காணப்படுகிறது.
இத்தகைய கார் மாடிஃபிகேஷன் நம் நாட்டில் சட்டத்திற்கு உட்பட்டவை என எந்த இடத்திலும் நாங்கள் கூறவில்லை. காரின் என்ஜினில் மாற்றங்கள் செய்யப்படுவது நம் இந்தியாவை பொறுத்தவரையில் தண்டனைக்குரிய குற்றம் ஆகும். போலீஸாரின் அபராதத்தில் இருந்து தப்பிக்க, இத்தகைய மாடிஃபை கார்களுக்கு ஆர்டிஓ-இல் அனுமதி பெறுவது அவசியம். ஆர்டி அலுவலகத்திற்கு சென்று, மாடிஃபிகேஷன் குறித்த முறையான விபரங்களை தெரிவித்தால், அந்த வாகனத்திற்கான பதிவு சான்றிதழை பெறலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவ்வாறான மாடிஃபிகேஷன்களை இந்தியாவில் மேற்கொள்ள முடியாது. ஒரு காரை மாடிஃபிகேஷன் செய்தாலும், அதனை சட்டப்பூர்வமாக நம் நாட்டில் ஓட்ட முடியாது. ஆதலால் இத்தகைய மாடிஃபிகேஷன்களை இலங்கையில் மேற்கொள்ளலாம். 140 பிஎச்பி வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய இந்த மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காரை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்.


Click it and Unblock the Notifications









