புக் செய்துவிட்டு 2 மாதம் வரையில் கட்டாயம் வெயிட் பண்ணனும்!! மாருதியின் இந்த பிரபலமான காருக்கே இந்த நிலைமையா!

மாருதி சுஸுகி ஆல்டோ கே10 (Maruti Suzuki Alto K10) காரை முன்பதிவு செய்துவிட்டு, வாடிக்கையாளர்கள் காத்திருக்க வேண்டிய கால அளவானது சுமார் 8 வாரங்கள் வரையில் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்தும், இந்த மாருதி சுஸுகி கார் குறித்தும் விரிவாக இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

மாருதி சுஸுகியின் பிரபலமான கார் மாடல்களுள் ஒன்றாக ஆல்டோ விளங்குகிறது. சுமார் 20 ஆண்டுகளாக உற்பத்தி செய்யப்பட்டு வரும் ஆல்டோ கார்களில் ஆல்டோ 800 மிக பிரபலமானது. 800சிசி என்ற சிறிய அளவிலான என்ஜின் உடன் விற்பனை செய்யப்பட்டு வந்த ஆல்டோ 800 காரின் விற்பனையை சில மாதங்களுக்கு முன்னர் தான் மாருதி சுஸுகி நிறுவனம் நிறுத்தியது. இதனால், தற்போதைக்கு ஆல்டோ கே10 கார் மட்டுமே விற்பனையில் உள்ளது.

maruti alto k10 waiting period

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார்களாக மாருதி சுஸுகி கார்கள் விளங்குகின்றன. இதற்கு முக்கிய காரணங்களாக, மாருதி சுஸுகி கார்களின் அதிக மைலேஜ், எளிதில் கிடைக்கக்கூடிய பராமரிப்பு சேவைகள் மற்றும் உதிரிபாகங்களை சொல்லலாம். இவை மட்டுமின்றி, மாருதி சுஸுகி கார்களை விரைவாக டெலிவிரி பெற்றுவிடலாம் என்கிற கருத்தும் மக்களிடையே உள்ளது.

குறிப்பாக, ஆல்டோ போன்ற அளவில்-சிறிய கார்களை பெரும்பாலான நேரங்களில் முன்பதிவு செய்த நாள் அல்லது அதற்கடுத்து நாளிலேயே டெலிவிரி பெற்றுவிட முடியும். ஆனால் தற்போதைய சூழலில், ஆல்டோ கே10 காரையும் முன்பதிவு செய்து 6இல் இருந்து 8 வாரங்கள் வரையில், அதாவது 2 மாதங்கள் வரையில் கூட காத்திருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. இது காரின் வேரியண்ட்டை பொறுத்து வேறுப்பட கூடியது.

maruti alto k10 waiting period

அதாவது, ஆல்டோ கே10 காரின் ஒரு சில வேரியண்ட்டை 6 வாரங்களிலேயே டெலிவிரி பெற்றுவிடலாம். ஆனால் ஒரு சில வேரியண்ட்களுக்கு 8 வாரங்கள் வரையில் கூட ஆகலாம். ஆல்டோ கே10 கார் 4 விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. ஸ்டாண்டர்ட், எல்.எக்ஸ்.ஐ, வி.எக்ஸ்.ஐ மற்றும் வி.எக்ஸ்.ஐ பிளஸ் என்பன அந்த 4 வேரியண்ட்களாகும். இவற்றை பெட்ரோல் அல்லது சிஎன்ஜி என்ஜின் தேர்வில் வாங்க முடியும்.

இதில் 1.0 லிட்டர், 3-சிலிண்டர், நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் ஆனது அதிகப்பட்சமாக 66 பிஎச்பி மற்றும் 89 என்எம் டார்க் திறன் வரையில் இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. மறுப்பக்கம், சிஎன்ஜி தேர்வில் இதே பெட்ரோல் என்ஜின் மூலம் 56 பிஎச்பி மற்றும் 82 என்எம் டார்க் திறன் வரையில் மட்டுமே இயக்க ஆற்றலை பெற முடியும்.

maruti alto k10 waiting period

ஆனால் சிஎன்ஜி தேர்வில் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வு கிடைக்காது. ஆல்டோ கே10 காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.4 லட்சத்தில் இருந்தே ஆரம்பிக்கின்றன. அதிகப்பட்சமாக ரூ.5.96 லட்சம் வரையில் இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் உள்ளன. ஆல்டோ கே10 காரை சாலிட் வெள்ளை, சில்கி சில்வர், கிரானைட் கிரே, ஸ்பீடி நீலம், சிஸிலிங் சிவப்பு, எர்த் கோல்டு அல்லது பேர்ல் மிட்நைட் கருப்பு நிறத்தேர்வில் பெறலாம்.

இதில் பேர்ல் மிட்நைட் கருப்பு நிறத்தேர்வு சமீபத்தில்தான் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆல்டோ கே10 காருக்கு ஜூலை மாத சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, இந்த ஜூலை மாதத்தில் ஆல்டோ கே10 காரை வாங்குவோர் ரூ.59,000 வரையிலான பணத்தை சேமிக்கலாம். ஏற்கனவே கூறியதுபோல், ஆல்டோ 800 காரின் உற்பத்தி நிறுத்தப்பட்டு விட்டது. இருப்பினும், ஸ்டாக்கில் இருக்கும் ஆல்டோ 800 காரையும் இந்த ஜூலை மாதத்தில் சலுகைகள் உடன் வாங்கலாம்.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: மாருதி சுஸுகி பிராண்டை பலர் தேடி வருவதற்கு முக்கிய காரணமே, இந்த பிராண்டின் கார்களை உடனடியாக டெலிவிரி பெற்றுவிடலாம் என்பதினாலேயே. ஆனால் ஆல்டோ கே10 போன்ற காரின் வெயிட்டிங் பிரீயட் 8 வாரங்கள் வரையில் தற்சமயம் இருப்பது சற்று அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. ஆல்டோ கே10 காரின் வெயிட்டிங் பிரீயட் குறித்து இன்னும் தெளிவாக அறிய அருகில் உள்ள மாருதி சுஸுகியின் அரேனா டீலர்ஷிப் மையத்தை அணுகவும்.

Article Published On: Monday, July 24, 2023, 21:41 [IST]
English summary
Maruti suzuki alto k10 waiting period 6 8 weeks
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X