மாருதி சுஸுகி ஜிம்னி காரின் விலைகள் அறிவிப்பு.. இந்த விலையில் 5 டோர் வெர்ஷனா! தார் இருந்த இடம் தெரியாம போகுது!

மாருதி சுஸுகி அதன் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜிம்னி (Maruti Suzuki Jimny) காரின் விலைகளை அறிவித்து இருக்கின்றது. ஆரம்ப விலையாக 12.74 லட்சம் ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து வேரியண்டுகளின் விலையும் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்த கார் மாடல்களில் மாருதி சுஸுகி ஜிம்னியும் ஒன்று. இந்த காருக்கான புக்கிங் பணிகள் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்தே இந்தியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. சமீபத்தில் வெளியாகிய தகவல்கள் இந்த காருக்கு 30 ஆயிரத்திற்கும் அதிகமான புக்கிங் கிடைத்துவிட்டதாக தெரிவிக்கின்றன.

Maruti suzuki jimny front beauty

விலைகள் அறிவிக்கப்படுவதற்கு முன்னரே கிடைத்த புக்கிங் இதுவாகும். இந்த மாதிரியான சூழலில் இப்போது மாருதி சுஸுகி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக மாருதி சுஸுகி ஜிம்னி காரின் விலைகளை அறிவித்திருக்கின்றது. ஆரம்ப நிலை வேரியண்டிற்கு அறிமுக விலையாக 12.74 லட்ச ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும்.

ஜிம்னி ஒட்டுமொத்தமாக ஆறு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். அவை, ஜீட்டா எம்டி (Zeta MT), ஆல்ஃபா எம்டி (Alpha MT), ஆல்ஃபா எம்டி டூயல் (Alpha MT Dual Tone), ஜீட்டா ஏடி (Zeta AT), ஆல்ஃபா ஏடி (Alpha AT) மற்றும் ஆல்ஃபா ஏடி டூயல் டோன் (Alpha AT Dual Tone) ஆகும்.

Maruti suzuki jimny front seat

இவற்றின் விலைகளும் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. ஆல்ஃபா எம்டிக்கு ரூ. 13.69 லட்சமும், ஆல்ஃபா எம்டி டூயல் டோன்-க்கு ரூ. 13.85 லட்சமும், ஜீட்டா ஏடிக்கு ரூ. 13.94 லட்சமும், ஆல்ஃபா ஏடிக்கு ரூ. 14.89 லட்சமும் மற்றும் ஆல்ஃபா ஏடி டூயல் டோன்-க்கு ரூ. 15.05 லட்சமும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

இவையும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. மாருதி சுஸுகி நிறுவனம் அதன் ஜிம்னியை, மஹிந்திரா தார் காருக்கு போட்டியாகவே இந்திய சந்தையில் விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது. இந்த கார் ரூ. 10.54 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்தே விற்பனைக்குக் கிடைக்கின்றது.

Maruti suzuki jimny water wading

ஆனால், இதைவிட 2 லட்ச ரூபாய் வரை அதிக விலையிலேயே ஜிம்னி விற்பனைக்கு வந்திருக்கின்றது. இந்த அதிக விலைக்கு அதிக பிரீமியம் அம்சங்களும், ஐந்து கதவுகள் அமைப்பே காரணமாக இருக்கின்றன. மஹிந்திரா தார் காரின் மூன்று கதவுகள் கொண்ட வெர்ஷனே இப்போது இந்திய சந்தையில் விற்பனையில் இருக்கின்றது.

இதன் ஐந்து கதவுகள் வெர்ஷன் விரைவில் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், இதன் வருகையை மஹிந்திரா அடுத்த ஆண்டிற்கு ஒத்தி வைத்துவிட்டது. இதன் அறிமுகம் தள்ளி போனதற்கான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை. மாருதி சுஸுகி நிறுவனம் ஜிம்னியை அதன் நெக்ஸா ஷோரூம் வாயிலாக விற்பனைக்கு வழங்க இருக்கின்றது.

Maruti suzuki jimny 5 door launched

ஆஃப்-ரோடு பயணங்களுக்கு ஏற்ற வாகனமாக இதனை மாருதி சுஸுகி தயார் செய்திருக்கின்றது. மாருதி சுஸுகி நிறுவனம் இன்று இதன் விலையை மட்டும் அறிவிக்கவில்லை. அதன் டெலிவரி பணிகளையும் தொடங்கி வைத்திருக்கின்றது. இந்த காரில் த்ரில்லான ஆஃப்-ரோடு பயணத்தை வழங்க வேண்டும் என்பதற்கு பல புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டு இருக்கின்றன.

3 லிங்க் ரிஜிட் ஆக்ஸில் சஸ்பென்ஷன், லேடர் ஃப்ரேம் ரக சேஸிஸ் மற்றும் ஆல்கிரிப் ப்ரோ (4 வீல் டிரைவ் சிஸ்டம்), ஆகியவையே இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இவை மிகக் கடுமையான ஆஃப்-ரோடில்கூட மிகவும் சுவாரஷ்யமான பயண அனுபவத்தை வழங்கும் திறன் கொண்டவை.

Maruti suzuki rear profile

குறிப்பாக, இதன் ஆல்கிரிப் ப்ரோ அம்சம் 2எச் 2-வீல் டிரைவில் இருந்து 4எச் 4வீல் டிரைவ்க்கு மிக சுலபமாக மாறிக் கொள்ள உதவுகின்றது. இதுதவிர, மலை ஆடைபோலே கரடு-முரடான பாதையில் இயங்கிக் கொள்ளவும் இந்த சிஸ்டமே உதவுகின்றது. இந்த அம்சம் மட்டுமில்லைங்க நவீன கால அம்சங்கள் சிலவும் இந்த காரில் இடம் பெற்றிருக்கின்றன.

அந்தவகையில், ஸ்மார்ட் ப்ளே ப்ரோ பிளஸ், ஒயர்லெஸ் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ ஆகிய இணைப்பு வசதிக் கொண்ட 9 அங்குல திரை இந்த காரில் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. இது ஓர் உயர் ரக திரை ஆகும். இத்துடன், ஆர்கேமிஸின் பிரீமியம் தர சவுண்ட் சிஸ்டம் சூப்பரான சரவுண்ட் சென்ஸ் உடன் வழங்கப்பட்டு இருக்கின்றது.

பாதுகாப்பு அம்சங்களும் இந்த காரில் மிக தாராளமாக வழங்கப்பட்டு இருக்கின்றது. அந்தவகையில், ஜிம்னியின் அனைத்து வேரியண்டுகளிலும் 6-ஏர் பேக்குகள் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதுதவிர, ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் பிரேக் ஃபோர்ஸ், பிரேக் அசிஸ்ட் ஃபங்க்சன், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஹில் ஹோல்டு கன்ட்ரோல், ஹில் டெசன்ட் கன்ட்ரோல், சைடு இம்பேக்ட் டூர் பீம்கள் மற்றும் ரியர் வியூ கேமிரா என எக்கசக்க அம்சங்கள் ஜிம்னியில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இப்போதைய நிலவரப்படி விற்பனையில் மஹிந்திரா தார் சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கின்றது. இந்த காரின் வருகை மஹிந்திரா தார் காரின் விற்பனையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கேற்பவே 5 கதவுகள் கொண்ட வெர்ஷனையே வெறும் 2 லட்ச ரூபாய் கூடுதல் விலையில் அது விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, June 7, 2023, 12:10 [IST]
English summary
Maruti suzuki announced price of jimny starting price 12 74 lakh
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X