மாருதி ஆல்டோ காரை வாங்குவதற்கு இதைவிட ஒரு நல்ல சான்ஸ் கிடைக்காது!! ரூ.40,000 வரை மிச்சப்படுத்தலாம்...

மாருதி சுஸுகி நிறுவனம் அதன் அரேனா கார்களுக்கு இந்த ஜூன் மாதத்தை முன்னிட்டு சலுகைகளை அறிவித்துள்ளது. இதன்படி சலுகைகளை பெறும் மாருதி சுஸுகி கார்கள் எவை? அவற்றிற்கு அறிவிக்கப்பட்டுள்ள சலுகைகள் எவ்வளவு என்பதை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

கார் தயாரிப்பு நிறுவனங்கள் அவற்றின் விற்பனையை அதிகரிக்கும் விதமாக அவ்வப்போது சலுகைகளை அறிவிப்பது வழக்கமான ஒன்றே. அந்த வகையிலேயே தற்போது இந்தியாவின் நம்பர் ஒன் கார் பிராண்டாக விளங்கும் மாருதி சுஸுகியும் நடப்பு ஜூன் மாதத்தை முன்னிட்டு சலுகையை அறிவித்துள்ளது.

maruti suzuki arena cars discount

ஆனால் இந்த சலுகைகள் அனைத்து மாருதி சுஸுகி கார்களிலும் பெற முடியாது. மாருதி சுஸுகி நிறுவனம் தனது கார்களை அரேனா மற்றும் நெக்ஸா டீலர்ஷிப் மையங்கள் மூலமாக விற்பனை செய்கிறது. இதில் அரேனா டீலர்ஷிப் மூலமாக விற்பனை செய்யப்படும் ஆல்டோ கே10, செலேரியோ, எஸ்-பிரெஸ்ஸோ, வேகன்ஆர் மற்றும் ஸ்விஃப்ட் கார்களுக்கும், ஈக்கோ வேனுக்கும் தான் தற்போது ஜூன் மாதத்திற்கான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஆனால் அரேனா பிராண்டின் கீழ் விற்பனை செய்யப்படும் பிரெஸ்ஸா காருக்கு எந்த சலுகையும் அறிவிக்கப்படவில்லை. ஆல்டோ ஹேட்ச்பேக் கார் கடந்த 2022ஆம் ஆண்டில்தான் ஆல்டோ கே10 என்ற பெயரில் கே10 பெட்ரோல் என்ஜின் உடன் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த காரை இந்த ஜூன் மாதத்தில் ரூ.40,000 வரையிலான பணம் தள்ளுபடி உடன் வாங்க முடியும். அதேநேரம் ஆல்டோ கே10 காருக்கு ரூ.15,000 எக்ஸ்சேஞ்ச் போனஸும், ரூ.4,000 கார்ப்பிரேட் போனஸும் அறிவிக்கப்பட்டுள்ளன.

maruti suzuki arena cars discount

ஆல்டோ கே10 காரை அறிமுகப்படுத்திய கையோடு மாருதி சுஸுகி நிறுவனம் ஆல்டோ 800 காரின் உற்பத்தியை சில மாதங்களுக்கு நிறுத்தியது. இதனால் பல டீலர்ஷிப் மையங்களில் ஆல்டோ 800 கார் விற்பனைக்கு கிடைக்காத நிலை உள்ள நிலையில், ஸ்டாக்கில் இருக்கும் ஆல்டோ 800 கார்களை ரூ.15,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.3,100 கார்ப்பிரேட் போனஸ் உடன் வாங்க முடியும்.

ஆல்டோ கே10 காரை போன்று செலேரியோ, எஸ்-பிரெஸ்ஸோ மற்றும் வேகன்ஆர் கார்களிலும் இந்த ஜூன் மாதத்தில் ரூ.15,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.4,000 கார்ப்பிரேட் தள்ளுபடியை பெறலாம். ஆனால் செலேரியோ காரில் ரூ.35,000 வரையிலும், எஸ்-பிரெஸ்ஸோ காரில் ரூ.39,000 வரையிலும், வேகன்ஆர் காரில் ரூ.25,000 வரையிலும் மட்டுமே பணம் தள்ளுபடி கிடைக்கும் என மாருதி சுஸுகி அறிவித்துள்ளது.

Arena Discounts Cash Discount Exchange Bonus + Corporate Discounts
Alto K10 Upto ₹40,000 ₹15,000 + ₹4,000
Alto 800 - ₹15,000 + ₹3,100
Celerio Upto ₹35,000 ₹15,000 + ₹4,000
S-Presso Upto ₹39,000 ₹15,000 + ₹4,000
WagonR Upto ₹25,000 ₹15,000 + ₹4,000
Swift Upto ₹25,000 ₹15,000 + ₹5,000
Dzire - ₹10,000
Brezza - -
Eeco ₹15,000 ₹10,000 + ₹3,100
maruti suzuki arena cars discount

ஸ்விஃப்ட் காரை பொறுத்தவரையில், இந்த காருக்கு ரூ.25,000 வரையில் பணம் தள்ளுபடி சலுகையும், ரூ.15,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.5,000 கார்ப்பிரேட் போனஸும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஈக்கோ வேனை ரூ.15,000 பணம் தள்ளுபடி, ரூ.10,000 மதிப்பிலான எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.3,100 கார்ப்பிரேட் தள்ளுபடி உடன் இந்த ஜூன் மாதத்தில் வாங்கலாம். டிசைர் செடான் காருக்கு ரூ.10,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: கார்களின் விற்பனையை அதிகரிக்க இவ்வாறான சலுகைகள் பல்வேறு கார் நிறுவனங்கள் அறிவித்து இதற்குமுன் நாம் பார்த்துள்ளோம். ஆனால் மாருதி சுஸுகி இவ்வாறு சலுகைகளை அறிவிப்பது கொஞ்சம் அரிதான ஒன்றே. ஏனெனில் ஏற்கனவே மாருதி சுஸுகி கார்கள் ஒவ்வொரு மாதத்திலும் இலட்சக்கணக்கில் விற்பனையாகுகின்றன. இருப்பினும், சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளதால், கார்கள் விற்பனையை அதிகரிக்கும் முனைப்பில் இந்த இந்திய-ஜப்பானிய கூட்டு நிறுவனம் தீவிரமாக உள்ளதை அறிய முடிகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, June 6, 2023, 20:59 [IST]
English summary
Maruti suzuki arena cars discount 2023 june
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X