ஒன்னு ரெண்டு இல்ல அரேனா ஷோரூம்ல இத்தனை லட்சம் கார் சேல்ஸ் ஆகிடுச்சா? இது வேற லெவல் பா!

மாருதி நிறுவனம் 6 ஆண்டுகளில் தனது அரேனா ஷோரூம்கள் மூலம் 70 லட்சம் கார்களை விற்பனை செய்து மிகப் பெரிய சாதனையை படைத்துள்ளது. இந்த செய்தியை மாருதி நிறுவனம் தனது 6வது ஆண்டு அரேனா ஆண்டு விழாவின்போது தெரிவித்துள்ளது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.

மாருதி நிறுவனம் இரண்டு பிரிவுகளாக தனது ஷோரூம்களை பிரித்து கார்களை விற்பனை செய்து வருகிறது. அரேனா என்ற ஷோரூமில் சுமார் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு துவங்கியது. இதில் மாருதி நிறுவன கார்களில் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் கார்களை விற்பனை செய்து வருகிறஐ பிரீமியம் கார்களை விற்பனை செய்து வருகிறது.

arena anniversary

தற்போது மாருதி நிறுவனம் ஷோரூம் வழியாக தனது ஆல்டோ, வேகன்ஆர், ஸ்விஃப்ட், டிசையர், பிரெஸ்ஸா, எர்டிகா மற்றும் செலிரியோ ஆகிய கார்களை விற்பனை செய்து வருகிறது. இந்தியாவில் விற்பனையாகும் டாப் 10 கார்களில் 6 கார்கள் இந்த அரேனா ஷோரூம் வழியாக தான் விற்பனையாகி வருகிறது. இந்த அரேனா ஷோரும் சுமார் 6 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்டது.

இந்த 6 ஆண்டுகளில் அரேனா ஷோரூம் சுமார் 70 லட்சம் கார்களை இந்தியா முழுவதும் விற்பனை செய்து உள்ளது. தற்போது இந்தியாவில் 2392 நகரங்களில் 2853 ஷோரூம்களை கட்டமைத்து இந்த விற்பனையை மாருதி நிறுவனம் செய்துள்ளது. மாருதி நிறுவனத்தில் இந்த 2023-24 ஆம் ஆண்டில் ஜூலை வரை விற்பனையான ஒட்டுமொத்த கார்களில் 68% அரேனா ஷோரூம் வழியாக தான் விற்பனை ஆகி உள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு தான் மாருதி நிறுவனம் அரேனா ஷோரூமை முதன் முதலில் துவக்கியது. இந்த 6 ஆண்டுகளில் மிகப்பெரிய சாதனையை அரேனா ஷோரூங்கள் மூலம் மாருதி நிறுவனம் படைத்துள்ளது. இந்த ஷோரூம்களில் ஒருவர் கார் வாங்க வேண்டும் என்றால் அவர் 26 விதமான ஸ்டேட்களை பின்பற்ற வேண்டும்,

அதில் 24 ஸ்டெப்புகளை மாருதி நிறுவனம் டிஜிட்டல் மயப்படுத்திவிட்டது. ஒருவர் ஷோரூம் வராமலேயே தனது காரை வாங்கி விட முடியும் என்ற நிலையை மாருதி நிறுவனம் கிட்டத்தட்ட கொண்டு வந்து விட்டது. எதிர்காலத்தில் பலர் இப்படிதான் கார்களை வாங்குவார்கள் என்ற பேச்சு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இது குறித்து மாருதி நிறுவனத்தின் சேல்ஸ் மற்றும் மார்க்கெட்டிங் பிரிவில் உள்ள மூத்த அதிகாரியான ஷஷாங்க் ஸ்ரீவத்சவா கூறும் போது: " இந்த 6 ஆண்டுகளில் மாருதி நிறுவனம் 70 லட்சம் கார்களை விற்பனை செய்து உள்ளது. மாருதி நிறுவனத்தின் மீது வாடிக்கையாளர்கள் வைத்துள்ள நம்பிக்கையையும் உறுதியையும் காட்டுகிறது. இந்த சாதனை எங்களை மேலும் பல்வேறு சாதனைகளைப் படைக்க ஊக்குவிக்கிறது" என்று கூறினார்.

மாருதியின் அரேனா நெட்வொர்க் இந்தியாவில் ஒட்டுமொத்தமாக விற்பனையாகும் கார்களில் 29 சதவீத மார்க்கெட் பங்கை வைத்துள்ளது. இது கடந்த ஜூலை மாத ரிப்போர்ட் ஆகும். இந்த மாதிரி ஷோரூம்களில் மொத்தம் 9 மாடல் கார்கள் வேறு வேறு செக்மெண்ட்களில் வேறு வேறு விலைகளில் விற்பனையாகி வருகிறது. இந்த 6ம் ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் ஷோரூம்களில் ம"பைண்ட் யுவர் மேட்ச்" என்ற புதிய முன்னெடுப்பு கொண்டுவரப்பட்டுள்ளது.

அரேனா டீலர் ஷிப்கள் எல்லாம் தற்போது வாடிக்கையாளர்களுக்கு காரை கஸ்டமைசேஷன் செய்யும் ஆப்ஷனை வழங்குகிறது. அரேனாவெர்ஸ் என்ற தொழில்நுட்பம் மூலம் வாடிக்கையாளர்களுக்கு தாங்கள் தயாரிப்பை டிஜிட்டல் முறையில் எக்ஸ்ப்ளோர் செய்ய வாய்ப்புகளை வழங்கி வருகிறது. மாருதி நிறுவனம் அடுத்த புதிய தலைமுறை ஸ்ஷிஃப்ட் மற்றும் டிசையர் கார்களை அடுத்த ஆண்டு இந்தியாவிற்கு விற்பனைக்கு கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார்கள் வந்தால் மேலும் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒட்டுமொத்தமாக இந்தியாவில் விற்பனையாகும் கார்களில் பெரும்பாலான கார்கள் மாருதி நிறுவனத்தின் கார்களாகவே இருக்கிறது. இது மாருதி நிறுவனத்தின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை காட்டுகிறது. குறிப்பாக அரேனா, நெக்ஸா என மாருதி நிறுவனம் தனது டீலர் ஷிப்புகளை பிரித்த பின்பு மிகப்பெரிய அளவிலான விற்பனை வளர்ச்சியை மாருதி நிறுவனம் சந்தித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, August 31, 2023, 19:45 [IST]
English summary
Maruti suzuki arena celebrates its 6th anniversary with a new campaign
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+