Maruti Suzuki Baleno-இன் விலையையும் உயர்த்திட்டாங்களா... இந்தியாவின் நம்பர்.01 கார் ஆச்சே!!

இந்தியாவின் நம்பர்.01 கார் நிறுவனமாக விளங்கும் மாருதி சுஸுகி அதன் பிரபலமான கார் மாடலான பலேனோவின் எக்ஸ்-ஷோரூம் விலைகளை அதிகரித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களையும், மாருதி சுஸுகி பலேனோ காரை பற்றியும் முழுமையாக இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

தற்போதைய காலக்கட்டத்தில் ஒவ்வொரு மாதத்திலும் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் கார் என்று பார்த்தால், அதில் மாருதி சுஸுகியின் பலேனோவும் ஒன்றாக இருக்கும். அந்த அளவிற்கு இந்தியர்களின் பிரதான தேர்வுகளுள் ஒன்றாக விளங்கும் பலேனோ கார்களின் விலைகளை தான் தற்போது மாருதி சுஸுகி நிறுவனம் அதிகரித்துள்ளது.

Maruti Suzuki Baleno

பலேனோ, மாருதி சுஸுகியின் பிரீமியம் தரத்திலான ஹேட்ச்பேக் கார் ஆகும். இந்த காரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது என்றவுடன், பெரிய அளவிலான விலை உயர்வாக இருக்குமோ என பதற்றம் அடைய வேண்டாம். ஏனெனில் பலேனோவின் எக்ஸ்-ஷோரூம் விலைகளை வெறும் ரூ.5,000 மட்டுமே மாருதி சுஸுகி நிறுவனம் உயர்த்தியுள்ளது. இதன்படி, பலேனோவின் விலை குறைவான ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலையும் ரூ.5,000 அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் பலேனோவின் பேஸ் வேரியண்ட்டிலும் இஎஸ்பி மற்றும் ஹில் ஹோல்ட் அசிஸ்ட் உள்ளிட்ட வசதிகள் புதியதாக வழங்கப்பட்டுள்ளன. வழுக்கக்கூடிய இடங்களில் காரின் சக்கரங்களை சறுக்காமல் தடுப்பது இஎஸ்பி தொழிற்நுட்பத்தின் முக்கிய பணி ஆகும். ஆதலால் இந்த தொழிற்நுட்பம் மழை & பனி காலங்களில் மிகவும் உதவிக்கரமானதாக விளங்கும். அதுமட்டுமின்றி, இனி பலேனோவின் எந்தவொரு வேரியண்ட்டிலும் ஏறுமுகமான பாதைகளில் எளிதாக பயணிக்க முடியும்.

Maruti Suzuki Baleno interior

இத்தகைய பகுதிகளில் கார் இயங்கும்போது ஓட்டுனர் காரை பிரேக் பெடலில் இருந்து எடுத்துவிட்டாலும், பிரேக்கின் விசை சில வினாடிகளுக்கு இருக்கும். விலை அதிகரிப்புடன் பலேனோவில் இந்த ஒரு புதிய தொழிற்நுட்ப வசதி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. மற்றப்படி என்ஜின் தேர்வுகளில் எந்த மாற்றமும் இல்லை. பலேனோ ஹேட்ச்பேக் காரில் 1.2 லிட்டர், நேச்சுரலி-அஸ்பிரேட்டட், பெட்ரோல் என்ஜின் 12-வோல்ட் மைல்ட்-ஹைப்ரீட் சிஸ்டத்துடன் வழங்கப்படுகிறது.

அதிகப்பட்சமாக 89 பிஎச்பி மற்றும் 113 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த பெட்ரோல் என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 5-ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. மற்ற கார்களை போல், பலேனோவின் பெட்ரோல் என்ஜினும் சமீபத்தில் அமலுக்குவந்த ரியல்-டிரைவ்-எமிஷன் மற்றும் பிஎஸ்6 2ஆம் கட்ட மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு இணக்கமாக மேம்படுத்தப்பட்டுள்ளது. தற்சமயம் பலேனோ காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.6.61 லட்சத்தில் இருந்து துவங்குகின்றன.

Maruti Suzuki Baleno rear

இந்த விலையில் பலேனோ ஹேட்ச்பேக் காரின் சிக்மா வேரியண்ட் கிடைக்கிறது. அதிகப்பட்சமாக பலேனோ காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.9.88 லட்சம் வரையில் உள்ளது. இந்த அதிகப்பட்ச விலையில் டாப் வேரியண்ட்டான ஆல்பா ஏஎம்டி கியர்பாக்ஸ் உடன் கிடைக்கிறது. விற்பனையில் ஜொலிக்கும் அதேநேரம், மாருதி சுஸுகி பலேனோ காருக்கு ஹூண்டாய் ஐ20 மற்றும் டாடா அல்ட்ராஸ் உள்ளிட்டவை நேரெதிர் போட்டி மாடல்களாக விளங்குகின்றன.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து

ஏற்கனவே கூறியதுபோல், மாருதி சுஸுகி நிறுவனம் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யும் கார்களுள் ஒன்றாக விளங்கும் பலேனோவின் விற்பனையை இவ்வாறான சிறிய அளவிலான விலை உயர்வு எந்த விதத்திலும் பாதிக்காது. ஆதலால் இந்த விஷயத்தில் பலேனோவின் பேஸ் வேரியண்ட்டில் அறிமுகப்படுத்தியுள்ள இஎஸ்பி-ஐ தான் ஹைலைட்டாக சுட்டிக்காட்ட வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Saturday, April 8, 2023, 16:56 [IST]
English summary
Maruti suzuki increased baleno hatchback price in india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X