இந்தியர்களின் ரொம்ப நாள் எதிர்பார்ப்பை நிறைவேத்த போகும் மாருதி! மைலேஜை வாரி வழங்கும் காரால் டாடா கலக்கம்!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள கார்களில் ஒன்று மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza). இது சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். டாடா நெக்ஸான் (Tata Nexon) கார்தான், இதன் மிக முக்கியமான போட்டியாளராக உள்ளது.
இதுதவிர ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue) மற்றும் கியா சொனெட் (Kia Sonet) ஆகிய கார்களுக்கும், மாருதி சுஸுகி பிரெஸ்ஸா விற்பனையில் மிக கடுமையான சவாலை அளித்து வருகிறது. இத்தனைக்கும் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா கார் தற்போதைய நிலையில் பெட்ரோல் (Petrol) இன்ஜின் ஆப்ஷனுடன் மட்டுமே கிடைக்கிறது. இந்த காரில் டீசல் (Diesel) இன்ஜின் ஆப்ஷன் இல்லை. ஆனால் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காரில், சிஎன்ஜி (CNG) ஆப்ஷன் வழங்கப்படலாம் என நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

நீண்ட நாள் தவம்!
கடந்த 2021ம் ஆண்டில் இருந்தே மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காரின் சிஎன்ஜி வெர்ஷன் குறித்த செய்திகள் சிறகடித்து பறந்து வருகின்றன. இடையில் நிறைய கார்களின் சிஎன்ஜி மாடல்களை அறிமுகப்படுத்தினாலும், பிரெஸ்ஸா காரில் மட்டும் மாருதி சுஸுகி நிறுவனம் இன்னும் சிஎன்ஜி ஆப்ஷனை கொண்டு வராமல் உள்ளது. இந்த சூழலில், மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காரின் சிஎன்ஜி வெர்ஷன் வருகைக்காக காத்து கொண்டிருப்பவர்களுக்கு தற்போது மிகவும் மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
தரிசனம் தந்தது பிரெஸ்ஸா சிஎன்ஜி!
பிரெஸ்ஸா சிஎன்ஜி காரின் மீது மூடப்பட்டிருந்த திரைகளை மாருதி சுஸுகி நிறுவனம் தற்போது விலக்கியுள்ளது. ஆம், இந்தியாவில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் 2023 ஆட்டோ எக்ஸ்போ (2023 Auto Expo) திருவிழாவில், மாருதி சுஸுகி பிரெஸ்ஸா சிஎன்ஜி கார் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. வெளிப்புறத்தை பொறுத்தவரை, பெட்ரோல் வெர்ஷனை போலவேதான், மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காரின் சிஎன்ஜி வெர்ஷனும் உள்ளது. ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த காரில், மேட் ப்ளூ பெயிண்ட் வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அத்துடன் ட்யூயல் டோன் அலாய் வீல்களையும் காண முடிந்தது.

இன்ஜின்!
ஆனால் காரின் வெளிப்புறத்தில் எங்குமே சிஎன்ஜி பேட்ஜ்களை காண முடியவில்லை. எனினும் காரின் பின்னால் உள்ள பூட் பகுதியில் சிஎன்ஜி டேங்க் பொருத்தப்பட்டிருந்தது. மாருதி சுஸுகி பிரெஸ்ஸா சிஎன்ஜி காரில், சிஎன்ஜி எரிபொருளிலும் இயங்க கூடிய வகையிலான 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பெட்ரோலில் இயங்கும்போது இந்த இன்ஜின் அதிகபட்சமாக 104 பிஹெச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும். ஆனால் சிஎன்ஜி எரிபொருளில் இயங்கும்போது, இதன் பவர் அவுட்புட் சற்று குறைவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
மைலேஜ் தாராளமா கிடைக்கும்!
மாருதி சுஸுகி நிறுவனத்தின் சிஎன்ஜி கார்கள் மைலேஜை வாரி வழங்குவதற்கு பெயர் பெற்றவை. இந்த பெயரை மாருதி சுஸுகி பிரெஸ்ஸா சிஎன்ஜி காரும் காப்பாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது மாருதி சுஸுகி பிரெஸ்ஸா சிஎன்ஜி காரும் மைலேஜை வாரி வழங்க கூடியதாக இருக்கலாம். ஆனால் இந்த காரின் அதிகாரப்பூர்வமான மைலேஜ் எவ்வளவு? என்ற விபரத்தை மாருதி சுஸுகி நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை. அதே நேரத்தில் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா சிஎன்ஜி காரில், 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

என்னென்ன வசதிகள் இருக்கும்?
மாருதி சுஸுகி பிரெஸ்ஸா சிஎன்ஜி காரில், 9 இன்ச் ஸ்மார்ட்ப்ளே ப்ரோ ப்ளஸ் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 360 டிகிரி கேமரா, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், ஆம்பியண்ட் லைட்டிங், வயர்லெஸ் சார்ஜர் மற்றும் ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே போன்ற பல்வேறு வசதிகள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி சுஸுகி நிறுவனம் சிஎன்ஜி கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வதில் தற்போது அதிக ஆர்வம் காட்டி வருகிறது.
விரைவில் விற்பனைக்கு வருகிறது!
எனவே பிரெஸ்ஸா காரின் சிஎன்ஜி வெர்ஷனை மாருதி சுஸுகி நிறுவனம் இந்திய சந்தையில் கூடிய விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காரின் சிஎன்ஜி மாடல் வருகை, டாடா நெக்ஸான், கியா சொனெட் மற்றும் ஹூண்டாய் வெனியூ போன்ற போட்டி கார்களுக்கு மிகவும் கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.


Click it and Unblock the Notifications








