கோடி கோடியா கொட்டி குடுத்தாலும் இந்த காரை உடனே தர மாட்டாங்க! வாடிக்கையாளர்களின் தலையில் இடியை இறக்கிய மாருதி!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த மாருதி சுஸுகி பிரெஸ்ஸா சிஎன்ஜி (Maruti Suzuki Brezza CNG) கார் கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதன் ஆரம்ப விலை (Price) 9.14 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இது எக்ஸ் ஷோரூம் விலையாகும். LXi, VXi மற்றும் ZXi என மொத்தம் 3 வேரியண்ட்களில் (Variants) மாருதி சுஸுகி பிரெஸ்ஸா கார் கிடைக்கும். மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காரானது, சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்தது ஆகும். இந்த செக்மெண்ட்டில், சிஎன்ஜி ஆப்ஷனுடன் கிடைக்கும் முதல் கார் என்ற பெருமையையும் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா பெற்றுள்ளது.

மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காரை தொடர்ந்து இந்த செக்மெண்ட்டில் (Kia Sonet CNG) மற்றும் டாடா நெக்ஸான் சிஎன்ஜி (Tata Nexon CNG) ஆகிய கார்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி சுஸுகி பிரெஸ்ஸா சிஎன்ஜி காரில், மிகவும் பிரபலமான 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது.
இந்த இன்ஜின் அதிகபட்சமாக 87 பிஹெச்பி பவர் மற்றும் 121.5 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது. அதே சமயம் பெட்ரோலில் இயங்கும்போது இந்த இன்ஜின் அதிகபட்சமாக 102 பிஹெச்பி பவர் மற்றும் 136 என்எம் டார்க் திறனை வழங்கும். இந்த இன்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

மாருதி சுஸுகி பிரெஸ்ஸா சிஎன்ஜி காரின் மைலேஜ் (Mileage) ஒரு கிலோவிற்கு 25.51 கிலோ மீட்டர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அராய் (ARAI) அமைப்பு சான்று வழங்கிய மைலேஜ் ஆகும். விற்பனையில் சாதிக்கும் என எதிர்பார்க்கப்படும் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா சிஎன்ஜி காரின் காத்திருப்பு காலம் (Waiting Period) குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
தற்போதைய நிலையில் புக்கிங் (Booking) செய்த நாளில் இருந்து, மாருதி சுஸுகி பிரெஸ்ஸா சிஎன்ஜி காரின் அனைத்து வேரியண்ட்களுக்குமான காத்திருப்பு காலம் 3 முதல் 4 மாதங்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கு பிறகுதான், மாருதி சுஸுகி பிரெஸ்ஸா சிஎன்ஜி கார் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி (Delivery) செய்யப்படும்.
இந்திய சந்தையில் சிஎன்ஜி கார்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்க தொடங்கியுள்ளதன் காரணமாகவே, மாருதி சுஸுகி நிறுவனம் சிஎன்ஜி கார்களை அதிகளவில் விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகிறது. பிரெஸ்ஸா சிஎன்ஜி மாடலுக்கு முன்னதாகவே, இன்னும் பல்வேறு சிஎன்ஜி கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்து விட்டது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக இந்தியாவின் சிஎன்ஜி கார் சந்தையில், மாருதி சுஸுகி நிறுவனம் அசைக்க முடியாத இடத்தை தன்வசப்படுத்தியுள்ளது. அதேபோல் ஹூண்டாய் (Hyundai) மற்றும் டாடா (Tata) போன்ற மற்ற நிறுவனங்களும் கூட இந்தியாவில் ஒரு சில கார்களின் சிஎன்ஜி வெர்ஷன்களை விற்பனை செய்து கொண்டு உள்ளன.


Click it and Unblock the Notifications