8 லட்ச ரூபாய்க்கு மாருதி காரை வாங்கி, ஓனர் செய்திருக்கும் செயலை பாருங்க!! கார் மொத்தமா மாறிடுச்சு!
விலை குறைவான மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza) கார் ஒன்று விலையுயர்ந்த பிரெஸ்ஸா கார் போன்று கஸ்டமைஸ் செய்யப்பட்டுள்ளது. இதன்படி என்னென்ன அம்சங்கள் இந்த குறிப்பிட்ட பிரெஸ்ஸா காரில் சேர்க்கப்பட்டுள்ளன என்பதையும், மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காரை பற்றியும் இனி இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவில் தற்சமயம் வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலமாக உள்ள சப்-காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் என்று பார்த்தால், அதில் மாருதி சுஸுகியின் பிரெஸ்ஸாவும் ஒன்றாகும். முன்பு விற்பனையில் இருந்த விட்டாரா பிரெஸ்ஸாவுக்கு பதிலாக, கடந்த 2022ஆம் ஆண்டில் பிரெஸ்ஸா காரை மாருதி சுஸுகி நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

எல்.எக்ஸ்.ஐ, வி.எக்ஸ்.ஐ, இசட்.எக்ஸ்.ஐ மற்றும் இசட்.எக்ஸ்.ஐ பிளஸ் என 4 விதமான வேரியண்ட்களில் மாருதி பிரெஸ்ஸா சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. இதில், பெரும்பாலான வாடிக்கையாளர்கள் தேர்வு செய்வது எண்ட்ரீ-லெவல் எல்.எக்ஸ்.ஐ வேரியண்ட் என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. ஏனெனில், இதன் விலை தான் குறைவாக உள்ளது.
ஆனால், விலை குறைவு என்பதினாலேயே பிரெஸ்ஸா எல்.எக்ஸ்.ஐ வேரியண்ட்டில் விலையுயர்ந்த வசதிகளை எதிர்பார்க்க முடியாது. ஆனால் இங்கு, பிரெஸ்ஸா எல்.எக்ஸ்.ஐ கார் உரிமையாளர் ஒருவர் தனது காரை மெருக்கேற்றி உள்ளார். இதனால், இந்த கார் பிரெஸ்ஸாவின் விலையுயர்ந்த இசட்.எக்ஸ்.ஐ பிளஸ் வேரியண்ட்டின் தரத்திற்கு இணையாகி உள்ளது.

இந்த கஸ்டமைசேஷன் பணிகளை நவி மும்பையை சேர்ந்த ஒரு மெக்கானிக் ஷாப் செய்துள்ளது. இந்த மெக்கானிக் ஷாப் இவ்வாறான மாற்றங்களை கார்களில் செய்வதற்காகவே சுற்று வட்டார பகுதிகளில் பிரபலமானதாக உள்ளது. இதன் காரணமாகவே, இந்த குறிப்பிட்ட பிரெஸ்ஸா கார் ஓனர் தனது காரை நாசிக் பகுதியில் இருந்து மெருக்கேற்றுவதற்காக நவி மும்பைக்கு கொண்டுவந்துள்ளார்.
இந்த பிரெஸ்ஸா காரின் உட்பக்க கேபின் முழுவதுமாக மாடிஃபை செய்யப்பட்டுள்ளது. அதாவது, ஓனரின் விருப்பத்திற்கு ஏற்ப உட்பக்க கேபின் முழுவதும் காக்னக் நிற லெதரால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், கேபினில் நிறைய இடங்களில் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், கதவின் உட்பக்க பேனல்களில் கூட விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளதாக இந்த கார் தொடர்பாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், டேஸ்போர்டில் வுட்டன் கார்னிஷ் வழங்கப்பட்டுள்ளது. இந்த காரில் புதியதாக பிளாபுங்க்ட் சாண்டா ரோஸா 985 ஆண்ட்ராய்டு மியுசிக் சிஸ்டம் சேர்க்கப்பட்டுள்ளது. இதன்படி, 4 கதவுகளிலும் சவுண்ட் டேம்பேனிங் வழங்கப்பட்டுள்ளதாக வீடியோவை வெளியிட்டவர்கள் கூற கேட்க முடிகிறது. அத்துடன், சோனி இ.எஸ் சீரிஸ் மியுசிக் சிஸ்டத்தையும் வழங்கியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
காரின் வெளிப்பக்கத்தில், பிரெஸ்ஸாவின் இசட்.எக்ஸ்.ஐ பிளஸ் வேரியண்ட்டில் வழங்கப்படும் டைமண்ட்-கட் அலாய் சக்கரங்கள் இந்த எண்ட்ரீ-லெவல் வேரியண்ட்டில் வழங்கப்பட்டுள்ளன. புது சக்கரங்களுடன், சைடு படிக்கட்டுகள் மற்றும் விண்டோ விஸர்களையும் இந்த குறிப்பிட்ட பிரெஸ்ஸா கார் பெற்றுள்ளது. காரின் முன்பக்கத்தில் ஹலோஜன் ஹெட்லைட்களுக்கு பதிலாக எல்இடி ஹெட்லைட்கள் வழங்கப்பட்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இத்துடன் இந்த லிஸ்ட் நிற்கவில்லை, பம்பர் பாதுகாப்பான் மற்றும் 360-டிகிரி கேமரா என ஏகப்பட்ட அம்சங்கள் இந்த காரில் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலமாக, இந்த விலை குறைவான பிரெஸ்ஸா கார் தோற்றத்திலும், தொழிற்நுட்ப அம்சங்களிலும் மெருக்கேறியுள்ளது. ஆனால், எங்களுக்கு கேட்க தோன்றும் கேள்வி என்னவென்றால், இதற்கு நீங்கள் விலைமிக்க பிரெஸ்ஸா இசட்.எக்ஸ்.ஐ பிளஸ் வேரியண்ட்டையே வாங்கி இருக்கலாமே...!!


Click it and Unblock the Notifications









