இந்த மாருதி காரில் மைலேஜ் இவ்வளவு குறையும் என்று எதிர்பார்க்கல!! காரில் இந்த டெக்னாலஜி இருக்கானு செக் பண்ணுங்க

கார் நிறுவனங்கள் தங்களது கார்களின் மைலேஜை அதிகரிக்க பல்வேறு வழிகளில் முயற்சித்து வரும் சூழலில், மாருதி சுஸுகி நிறுவனம் செய்துள்ள ஒரு காரியத்தால், அதன் பிரபலமான கார் ஒன்றின் மைலேஜ் வெகுவாக குறைந்துள்ளது. இதுகுறித்து நமக்கு கிடைக்கப் பெற்றுள்ள விபரங்களையும், மைலேஜ் குறைந்துள்ள அந்த மாருதி சுஸுகி காரை பற்றியும் இனி பார்க்கலாம்.

இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் இலட்சக்கணக்கில் கார்களை விற்பனை செய்யும் ஒரே கார் நிறுவனம் மாருதி சுஸுகி ஆகும். இந்திய-ஜப்பானிய கூட்டு நிறுவனமான மாருதி சுஸுகி சந்தையில் தனது ஆதிக்கத்தை தொடரும் முயற்சியாக அவ்வப்போது பழைய கார்களுக்கு பதிலாக புதிய புதிய கார்களை விற்பனைக்கு கொண்டு வந்து கொண்டிருக்கிறது. உதாரணத்திற்கு, ஃப்ரான்க்ஸ், இன்விக்டோ.

maruti brezza manual mileage reduced

அதேபோன்று கார்களின் தரத்தை மேம்படுத்தும் விதமாக அவ்வப்போது புதிய புதிய தொழிற்நுட்பங்களையும் கண்டுப்பிடித்து தனது கார்களில் கொண்டுவர மாருதி சுஸுகி மறப்பது இல்லை. இதற்காகவே, ஆராய்ச்சி & கண்டுப்பிடிப்பு மையங்களை பல்வேறு இடங்களில் இந்த நிறுவனம் கொண்டுள்ளது. அவ்வாறு கண்டுப்பிடிக்கப்பட்டு, மாருதி கார்கள் பலவற்றில் கொண்டுவரப்பட்ட தொழிற்நுட்பம், ஸ்மார்ட் ஹைப்ரீட் வைகல் சிஸ்டம் (SHVS) ஆகும்.

காரின் எரிபொருள் திறனையும், செயல்படுதிறனையும் மேம்படுத்தும் விதமாக இந்த தொழிற்நுட்பம் கண்டுப்பிடிக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. இந்த நிலையில், சில தினங்களுக்கு முன் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா எஸ்யூவி காரின் மேனுவல் வேரியண்ட்களில் ஸ்மார்ட் ஹைப்ரீட் வைகல் சிஸ்டம் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டது. அதாவது, பிரெஸ்ஸா காரின் தொழிற்நுட்ப அம்சங்கள் லிஸ்ட்டில் இருந்து SHVS-இன் பெயர் நீக்கப்பட்டது.

maruti brezza manual mileage reduced

இதன் விளைவாக, மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காரின் மைலேஜ் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்த்ததை போல் பிரெஸ்ஸா மேனுவல் காரின் மைலேஜ் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. பிரெஸ்ஸா எஸ்யூவி காரில் மேனுவல் கியர்பாக்ஸை LXi, VXi, ZXi மற்றும் ZXi+ வேரியண்ட்களில் பெற முடியும். இதில் LXi மற்றும் VXi வேரியண்ட்களில் முன்பு 20.15kmpl வரையிலான மைலேஜும், ZXi மற்றும் ZXi+ வேரியண்ட்களில் 19.89kmpl வரையிலான மைலேஜும் கிடைத்து வந்தன.

ஆனால் SHVS தொழிற்நுட்பம் நீக்கப்பட்டதால், பிரெஸ்ஸா மேனுவல் காரின் மேற்கூறப்பட்ட அனைத்து வேரியண்ட்களிலும் 17.38kmpl வரையிலான மைலேஜை மட்டுமே பெற முடிவதாக காரை பயன்படுத்தியவர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது, பிரெஸ்ஸா மேனுவல் காரின் மைலேஜ் அளவானது கிட்டத்தட்ட 2.77kmpl வரையில் குறைந்துள்ளது.

maruti brezza manual mileage reduced

மறுப்பக்கம், பிரெஸ்ஸா ஆட்டோமேட்டிக் வேரியண்ட்களில் மைல்ட்-ஹைப்ரீட் தொழிற்நுட்பம் தொடர்ந்து வழங்கப்படுகிறது. பொதுவாக, எந்தவொரு காரிலும் ஆட்டோமேட்டிக் வேரியண்ட்களை காட்டிலும் மேனுவல் வேரியண்ட்களில் அதிக மைலேஜை பெறலாம் என கூறுவர். ஆனால் பிரெஸ்ஸாவில் மேனுவல் வேரியண்ட்களை விட ஆட்டோமேட்டிக் வேரியண்ட்களில் சற்று அதிகமாக 19.80kmpl வரையிலான மைலேஜை பெறலாம்.

மாருதி சுஸுகி பிரெஸ்ஸா எஸ்யூவி சிஎன்ஜி தேர்விலும் கிடைக்கிறது. LXi, VXi மற்றும் ZXi வேரியண்ட்களில் கிடைக்கும் பிரெஸ்ஸா சிஎன்ஜி காரில் சுமார் 25.51kmpkg வரையிலான மைலேஜை பெறலாம். பிரெஸ்ஸா சிஎன்ஜி கார்களில் இருந்தும் எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிரோம் (ESP) மற்றும் ஹில்-ஹோல்ட் அசிஸ்ட் வசதிகளை மாருதி சுஸுகி நிறுவனம் சமீபத்தில் நீக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: பொதுவாகவே ஒரு வாகனத்தின் மைலேஜ் அளவானது பல்வேறு காரணிகளால் வேறுப்படக்கூடியது. அதாவது, டிரைவிங் ஸ்டைல், வாகனம் இயங்கும் சாலையின் தரம் மற்றும் வாகனத்தை சுற்றி நிலவும் பயணச் சூழல் உள்ளிட்டவற்றை சார்ந்து மைலேஜ் கிடைக்கும். ஆதலால், மேற்கூறப்பட்ட மைலேஜை பிரெஸ்ஸா காரில் சிலரால் பெற முடியாமல் போகலாம். ஆனால் SHVS தொழிற்நுட்பம் நீக்கப்பட்டதால், காரின் மைலேஜ் கணிசமாக குறைந்துள்ளதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Monday, July 24, 2023, 23:24 [IST]
English summary
Maruti suzuki brezza manual mileage reduced significantly
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X