மாருதி காருக்கு செலவு பண்றதுக்கு, இதில் ஒரு காரை வாங்கிட்டு போலாம்!! எல்லாம் தரமான தயாரிப்பு...
மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza), இந்தியாவின் பிரபலமான காம்பெக்ட் எஸ்யூவி கார். 2016இல் விட்டாரா பிரெஸ்ஸா என்கிற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த கார் 7 வருடத்திற்கு பிறகு பிரெஸ்ஸா என்கிற பெயரில் தற்சமயம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விற்பனையில் இந்த காருக்கு பல்வேறு டாப் பிராண்ட்களின் கார்கள் போட்டியாக உள்ளன. அவற்றுள் சில...
டாடா நெக்ஸான்: பிரெஸ்ஸாவை போல் இந்தியாவின் பிரபலமான எஸ்யூவி கார் நெக்ஸான் ஆகும். இன்னும் சொல்லப்போனால், சமீப காலமாக இந்தியாவின் நம்பர் ஒன் எஸ்யூவி காராக நெக்ஸான் தான் விளங்குகிறது. ரூ.8.10 லட்சத்தில் இருந்து ரூ.15.50 லட்சம் வரையில் நெக்ஸான் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் உள்ளன. 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் நெக்ஸான் கிடைக்கிறது.

ஹூண்டாய் வென்யூ: ஹூண்டாய் மோட்டார்ஸில் இருந்து இந்தியாவில் விற்பனை செய்யப்படும் காம்பெக்ட் எஸ்யூவி கார் நெக்ஸான் ஆகும். 1.2 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் மற்றும் 1.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என 2 விதமான என்ஜின் தேர்வுகளில் விற்பனைக்கு கிடைக்கும் வென்யூ காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.7.90 லட்சத்தில் இருந்து ரூ.13.48 லட்சம் வரையில் தற்சமயம் உள்ளன.

கியா சொனெட்: தென்கொரியாவை சேர்ந்த கியா நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்யும் விலை குறைவான கார், சொனெட் ஆகும். வென்யூவை போல், 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் மற்றும் 1.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என 2 விதமான என்ஜின் தேர்வுகளில் இந்த கியா கார் கிடைக்கிறது. இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.7.15 லட்சத்தில் இருந்து ரூ.13.09 லட்சம் வரையில் உள்ளன.

மஹிந்திரா எக்ஸ்யூவி300: இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மிகவும் பாதுகாப்பான எஸ்யூவி கார்களுள் ஒன்று எக்ஸ்யூவி300 ஆகும். ஏனெனில், இந்த கார் க்ளோபல் என்சிஏபி கிராஸ் டெஸ்ட்டில் முழு 5 நட்சத்திரங்களை பெற்றுள்ளது. 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் இந்த கார் கிடைக்கிறது. இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.7.99 லட்சத்தில் இருந்து ரூ.14.76 லட்சம் வரையில் தற்சமயம் உள்ளன.

ரெனால்ட் கைகர்: ரெனால்ட் க்விட் ஹேட்ச்பேக் காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட காம்பெக்ட் எஸ்யூவி கார். ரூ.6.50 லட்சம் - ரூ.11.23 லட்சம் வரையில் கைகரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் உள்ளன. 1.0 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் மற்றும் 1.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்பவை கைகரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும்.

நிஸான் மேக்னைட்: ஜப்பானிய ஸ்டைலில் உருவாக்கப்பட்டு இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஒரே காம்பெக்ட் எஸ்யூவி கார். ரூ.6 லட்சத்தில் இருந்து ரூ.11.02 லட்சம் வரையில் மேக்னைட்டின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் உள்ளன. இந்த காரிலும் 1.0 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் மற்றும் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களை பெறலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: எஸ்யூவி கார்கள் மார்க்கெட்டில் மாருதி சுஸுகியின் கொடியை பறக்க விட்ட கார் விட்டாரா பிரெஸ்ஸா என்றால் அதில் சந்தேகமே இல்லை. எஸ்-கிராஸ் போன்ற வேறு சில எஸ்யூவி கார்களை மாருதி சுஸுகி அறிமுகப்படுத்தினாலும், விட்டாரா பிரெஸ்ஸா தான் அதிக வாடிக்கையாளர்களை பெற்று வருகிறது. இருப்பினும், இதற்கு மாற்றாக வேறொரு காம்பெக்ட் எஸ்யூவி காரை வாங்க நினைப்பவர்கள், மேலே உள்ள கார்களில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்யலாம்.


Click it and Unblock the Notifications









