ஸ்விஃப்ட் கூட கிடையாது... மாருதி சுஸுகியில் அதிக பேர் தேர்வு செய்யும் கார் எது தெரியுமா?

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் மாருதி சுஸுகி (Maruti Suzuki)-இல் இருந்து கடந்த ஏப்ரலில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 கார்கள் குறித்த விபரங்கள் கிடைக்க பெற்றுள்ளன. அவற்றை பற்றிய முழுமையான விபரங்களை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய-ஜப்பானிய கூட்டு நிறுவனமான மாருதி சுஸுகி ஒவ்வொரு மாதத்திலும் இலட்சக்கணக்கில் கார்களை விற்பனை செய்யக்கூடியது என்பது நமக்கு நன்றாகவே தெரியும். கடந்த ஏப்ரல் மாதத்திலும் சுமார் 1,37,320 கார்களை ஒரே மாதத்தில் விற்பனை செய்து அசத்தியுள்ளது. ஆனால் கடந்த ஆண்டு ஏப்ரலில் 1,21,995 கார்களை மட்டுமே மாருதி சுஸுகியால் விற்பனை செய்ய முடிந்தது. கடந்த 2023 மார்ச்சிலும் கூட 1,32,763 மாருதி சுஸுகி கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

maruti suzuki cars sales 2023 april

தற்சமயம் மாருதி சுஸுகி பிராண்டில் இருந்து மொத்தம் 15 கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. கடந்த 2023 மார்ச் உடன் ஒப்பிடுகையில் கடந்த ஏப்ரலில் மாருதி சுஸுகியின் மொத்த கார்கள் விற்பனை ஏறக்குறைய 4,500 யூனிட்கள் அதிகரித்து இருப்பதற்கு சமீபத்திய அறிமுகமான ஃப்ரான்க்ஸ் காரின் விற்பனையை முக்கிய காரணமாக சொல்ல வேண்டும். ஏனெனில், கடந்த 2023 ஜனவரியில் அறிமுகப்படுத்தப்பட்டு, மார்ச் வரையில் விற்பனையை துவங்காமல் இருந்த ஃப்ரான்க்ஸ் கார் கடந்த ஏப்ரலில் ஒரே மாதத்தில் 8,784 யூனிட்கள் விற்பனையாகி உள்ளது.

இருப்பினும் மாருதி சுஸுகி நிறுவனத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனையான கார் என்ற பட்டம் வேகன்ஆர் மற்றும் ஸ்விஃப்ட் மாடல்களிடையே தான் மாறி மாறி சென்று வருகிறது. கடந்த மார்ச் மாத விற்பனையில் இந்த போட்டியில் ஸ்விஃப்ட் முதலிடத்தை பெற்றிருந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாத விற்பனையில் வேகன்ஆர் முதலிடத்தை பிடித்துள்ளது. மாருதி சுஸுகியின் அதிக உயரம் கொண்ட ஹேட்ச்பேக் காரான வேகன்ஆர் கடந்த ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 20,879 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

maruti suzuki cars sales 2023 april

அதுவே 2022 ஏப்ரலில் 17,766 வேகன்ஆர் கார்களும், 2023 மார்ச்சில் 17,305 வேகன்ஆர் கார்களும் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. 2வது இடத்தில் உள்ள ஸ்விஃப்ட் கடந்த மாதத்தில் 18,753 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் கடந்த 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெறும் 8,898 கார்கள் மட்டுமே விற்பனையாகி இருந்தன. ஆனால் கடந்த 2023 மார்ச்சில் 17,559 யூனிட்கள் விற்கப்பட்டு இந்தியாவின் சிறந்த விற்பனை காராக ஸ்விஃப்ட் விளங்கியது.

இதற்கடுத்து 3வது இடத்தில் பலேனோ உள்ளது. மாருதி சுஸுகியின் பிரீமியம் தர ஹேட்ச்பேக் காரான பலேனோ சற்று விலைமிக்கதுதான், இருப்பினும் கடந்த சில வருடங்களாகவே அதிக பேரால் வாங்கப்படும் காராக உள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்திலும் 16,180 பலேனோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த மார்ச் மாதத்திலும் கிட்டத்தட்ட இதே எண்ணிக்கையிலான பலேனோ கார்களே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. 4வது மற்றும் 5வது இடங்களில் பிரெஸ்ஸா மற்றும் ஆல்டோ மாடல்கள் உள்ளன.

maruti suzuki cars sales 2023 april

இவை இரண்டும் கடந்த மாதத்தில் முறையே 11,836 மற்றும் 11,548 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதில் பிரெஸ்ஸா கார்களின் விற்பனை 2023 மார்ச் உடன் ஒப்பிடுகையில் கணிசமாக குறைந்துள்ளது. 6வது மற்றும் 7வது இடங்களை ஈக்கோ மற்றும் டிசைர் கார்கள் தன்வசமாக்கி உள்ளன. இவை இரண்டும் கடந்த மாதத்தில் முறையே 10,504 மற்றும் 10,132 யூனிட்கள் விற்பனையாகி உள்ளன. ஃப்ரான்க்ஸ் கார் இந்த வரிசையில் 8வது இடத்தில் உள்ளது.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: மாருதி சுஸுகியின் கார்கள் ஒவ்வொரு மாதத்திலும் இலட்சக்கணக்கில் விற்பனையாகுவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் இந்த முறை ஃப்ரான்க்ஸ், கிராண்ட் விட்டாரா போன்ற புதிய கார்களை இந்த வரிசையில் பார்க்க முடிகிறது. விரைவில் இந்த வரிசையில் ஜிம்னியும் இணையவுள்ளது. ஆதலால், மாருதி சுஸுகி நிறுவனம் தனது எதிர்கால வணிகத்திற்கு சிறந்த அடித்தளத்தை அமைத்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

Article Published On: Friday, May 12, 2023, 11:25 [IST]
English summary
Maruti suzuki cars sales report 2023 april
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X