மாருதி கார்கள் விற்பனையை அணை போட்டாலும் தடுக்க முடியாது போலயே!! கஸ்டமர்ஸ் குவியுறாங்க - ஆகஸ்ட் மாத விற்பனை!!

மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம் கடந்த 2023 ஆகஸ்ட் மாதத்தில் விற்பனை செய்த கார்கள் குறித்த விபரங்கள், அவற்றின் கடந்த மாத விற்பனை எண்ணிக்கைகள் உடன் வெளியாகியுள்ளன. கடந்த 2023 ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் மாருதி கார்களின் விற்பனை எந்த அளவிற்கு மாறியுள்ளன என்பதை பற்றி இனி இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி, கார்கள் விற்பனையில் நம்பர் ஒன் இடத்தில் உள்ளது. எந்த அளவிற்கு என்றால், கடந்த 2023 ஆகஸ்ட் மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 கார்களில் கிட்டத்தட்ட 8 கார்கள் மாருதி சுஸுகி நிறுவனத்துடையது ஆகும். இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால், முதல் 4 இடங்களை மாருதி சுஸுகி கார்களே பிடித்துள்ளன.

maruti suzuki cars sales report

அவையாவன, மாருதி சுஸுகி ஸ்விஃப்ட், பலேனோ, வேகன்ஆர் மற்றும் பிரெஸ்ஸா ஆகும். மாருதி சுஸுகி நிறுவனத்தில் தற்சமயம் 17 மாடல்களில் கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. மொத்தமாக, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 1,56,114 கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்துள்ளது. ஆனால், 2022 ஆகஸ்ட்டில் மாருதி சுஸுகி விற்பனை செய்த கார்கள் எண்ணிக்கை 1,34,166 மட்டுமே ஆகும்.

இந்த வகையில் இந்தியாவின் நம்பர் ஒன் கார் பிராண்டான மாருதி சுஸுகியின் கார்கள் விற்பனை கிட்டத்தட்ட 16.36% அதிகரித்துள்ளது. மாருதி சுஸுகி நிறுவனத்தில் மட்டுமின்றி, மொத்தமாகவே கடந்த ஆகஸ்ட்டில் இந்தியாவில் அதிகளவில் விற்பனை செய்யப்பட்ட காராக முதலிடத்தை பிடித்துள்ள ஸ்விஃப்ட் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 18,653 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது. ஆனால், 2022 ஆகஸ்ட் மாதத்தில் வெறும் 11,275 ஸ்விஃப்ட் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

maruti suzuki cars sales report

இந்த வகையில் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார்களின் விற்பனை ஆனது 65.44% அதிகரித்துள்ளது. இதற்கடுத்து 2வது இடத்தில், மாருதி சுஸுகியின் பலேனோ உள்ளது. மாருதி சுஸுகியின் பிரீமியம் தரத்திலான ஹேட்ச்பேக் காரான பலேனோ, ஸ்விஃப்ட்டை விட வெறும் 137 யூனிட்கள் மட்டுமே குறைவாக விற்பனை செய்யப்பட்டு உள்ளது. ஏனெனில், கடந்த ஆகஸ்ட்டில் விற்பனை செய்யப்பட்ட பலேனோ கார்களின் எண்ணிக்கை 18,516 ஆகும்.

2022 ஆகஸ்ட் மாதத்திலும் கிட்டத்தட்ட இதே எண்ணிக்கையிலான பலேனோ கார்களே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இருப்பினும், துல்லியமாக பார்த்தால், 2022 ஆகஸ்ட்டை விட கடந்த ஆகஸ்ட்டில் 98 பலேனோ கார்கள் கூடுதலாக விற்பனை செய்யப்பட்டு உள்ளன. பலேனோவுக்கு அடுத்து 3வது இடத்தில் வேகன்ஆர் 15,578 யூனிட்கள் விற்பனை உடன் உள்ளது. ஆனால், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 18,398 வேகன்ஆர் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

maruti suzuki cars sales report

இதன்படி பார்க்கும்போது, வேகன்ஆர் கார்களின் விற்பனை ஆனது 15.33% குறைந்துள்ளது. அதேபோன்று, 4வது இடத்தில் உள்ள பிரெஸ்ஸா கார்களின் விற்பனையும் 4.09% குறைந்துள்ளது. ஏனெனில், 2023 ஆகஸ்ட்டில் 15,193 பிரெஸ்ஸா கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், கட்ந்த ஆகஸ்ட் மாதத்தில் சற்று குறைவாக 14,572 பிரெஸ்ஸா கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு உள்ளன.

5வது இடத்தில் மாருதி சுஸுகியின் காம்பெக்ட் செடான் காரும், இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் 10 ஆயிரம் யூனிட்களுக்கு மேல் விற்பனையாகும் ஒரே செடான் காரான டிசைர் உள்ளது. ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக் காரின் செடான் வெர்சனான இது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 13,293 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது. இது 2022 ஆகஸ்ட்டை காட்டிலும் 12.01% அதிகமாகும். 6வது மற்றும் 7வது இடங்களில் முறையே எர்டிகா மற்றும் ஃப்ரான்க்ஸ் கார்கள் உள்ளன.

maruti suzuki cars sales report

இவை இரண்டின் கடந்த ஆகஸ்ட் மாத விற்பனை எண்ணிக்கை முறையே 12,315 மற்றும் 12,164 ஆகும். இதில் எர்டிகா கார் கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் வெறும் 9,314 யூனிட்கள் மட்டுமே விற்பனையாகி இருந்த நிலையில், ஃப்ரான்க்ஸ் கார் அந்த சமயத்தில் விற்பனையில் இல்லை. இதற்கடுத்து 8வது மற்றும் 9வது இடங்களில் ஈக்கோ (11,859) மற்றும் கிராண்ட் விட்டாரா (11,818) கார்கள் உள்ளன

More from DriveSpark

Article Published On: Tuesday, September 12, 2023, 10:30 [IST]
English summary
Goodyear 125th anniversary launches 4 new tyres
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X