மாருதி சுஸுகியால் மட்டும் எப்படி இது முடியுது!! பொம்மை கார்கள் கூட இவ்வளவு விற்பனையாகாது!

மாருதி சுஸுகி (Maruti Suzuki), இந்தியாவின் நம்பர் ஒன் கார் நிறுவனமாக விளங்கும் இது கடந்த அக்டோபர் மாதத்தில் விற்பனை செய்த கார்கள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. அதன்படி பார்க்கும்போது, மாருதி சுஸுகி கார்களின் விற்பனை ஆனது வழக்கத்தை காட்டிலும் 30 ஆயிரத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது.

இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்யும் நிறுவனம், மாருதி சுஸுகி. மாதந்தோறும் இலட்சக்கணக்கில் கார்களை விற்பனை செய்கிறது. குறிப்பாக, இந்த நிறுவனத்தின் 4- 5 கார்கள் எளிதாக 10 ஆயிரம் யூனிட்களுக்கு மேல் மாதத்தோறும் விற்பனையாகுகின்றன. இத்தனைக்கும் மாருதி கார்களில் டீசல் என்ஜின் ஆப்ஷன் வழங்கப்படுவது இல்லை.

maruti suzuki cars sales report

இதனாலேயே இந்தியாவில் அதிகளவில் வாடிக்கையாளர்களால் வாங்கப்பட்ட முதல் 10 கார்கள் என்று எடுத்து பார்த்தால், அதில் நிச்சயம் குறைந்தது 6 மாருதி கார்களாவது இருக்கும். கடந்த 2023 அக்டோபர் மாதத்திலும் சுமார் 1,99,217 வாகனங்களை மாருதி சுஸுகி விற்பனை செய்துள்ளது. இதில் உள்நாட்டில், அதாவது இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டவை 1,77,266 ஆகும்.

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டவை 21,951 ஆகும். கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இந்தியாவில் விற்பனையான மாருதி சுஸுகி வாகனங்கள் எண்ணிக்கை 1,47,072. அந்த மாதத்தில் வழக்கம்போல் 20 ஆயிரத்துக்கும் அதிகமான வாகனங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்திருப்பினும், மாருதி சுஸுகியின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கை 1,67,520 ஆக மட்டுமே பதிவாகி இருந்தது.

maruti suzuki cars sales report

கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட மாருதி சுஸுகியின் காம்பெக்ட் கார்கள் எண்ணிக்கை 95,230 ஆகும். ஆனால், 2022 அக்டோபரில் 98,621 காம்பெக்ட் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த காம்பெக்ட் கார்கள் பிரிவில் மாருதி சுஸுகியின் ஆல்டோ, எஸ்-பிரெஸ்ஸா, பலேனோ, செலேரியோ, டிசைர், இக்னிஸ், ஸ்விஃப்ட், டூர் எஸ், வேகன் ஆர் என பெரும்பான்மையான மக்கள் வாங்கக்கூடிய அளவில்-சிறிய கார்கள் அடங்குகின்றன.

மாருதி சுஸுகியின் ஒரேயொரு மிட்-சைஸ் செடான் காரான சியாஸ் 695 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக பயணிகள் கார்கள் 95,925-ஐ கடந்த அக்டோபரில் மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்துள்ளது. ஆனால், 2022 அக்டோபரில் மாருதி சுஸுகியின் 1 இலட்சத்திற்கும் அதிகமான பயணிகள் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

maruti suzuki cars sales report

இந்த விலை குறைவான கார்களுக்கு (சியாஸை தவிர்த்து) இணையாக, சற்று விலைமிக்க யுடிலிட்டி வாகனங்களும் மாருதி சுஸுகியில் இருந்து ஒவ்வொரு மாதமும் கணிசமான எண்ணிக்கையில் விற்பனையாகுகின்றன. இந்த பிரிவில் பிரெஸ்ஸா, எர்டிகா, ஃப்ரான்க்ஸ், கிராண்ட் விட்டாரா, இன்விக்டோ, ஜிம்னி, எஸ்-கிராஸ் மற்றும் எக்ஸ்.எல்6 உள்ளிட்ட மாருதி சுஸுகி கார்கள் உள்ளன. இவை அனைத்தும் மொத்தமாக கடந்த அக்டோபரில் 59,147 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி சுஸுகி தயாரிப்புகளுக்கு எப்போதுதான் மவுசு குறைந்திருக்கு, எப்போதும் ஹை தான். இருந்தாலும், மாதத்திற்கு இலட்சக்கணக்கில் கார்களை விற்பனை செய்வது எல்லாம் வேற லெவல். கடந்த அக்டோபர் மாதத்தில் ஒருபடி மேலே சென்று கிட்டத்தட்ட 2 இலட்ச வாகனங்களை மாருதி நிறுவனம் ஒரே மாதத்தில் விற்பனை செய்து அசத்தியுள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, November 1, 2023, 23:59 [IST]
English summary
Maruti suzuki cars sales report 2023 october compact cars vans
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X