36 கிமீ மைலேஜ் தரும் மாருதி கார்! விலை இவ்ளோதானா! டூவீலர் மாதிரி லட்சக்கணக்கான பேர் வாங்கி போட்டுட்டாங்க!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி செலிரியோ (Maruti Suzuki Celerio). இது ஹேட்ச்பேக் (Hatchback) ரகத்தை சேர்ந்த கார் ஆகும்.
மாருதி சுஸுகி செலிரியோ கார் இந்திய சந்தையில் கடந்த 2014ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து, கடந்த 2021ம் ஆண்டு மாருதி சுஸுகி செலிரியோ காரின் 2வது தலைமுறை மாடல் விற்பனைக்கு களமிறக்கப்பட்டது. தற்போது 2வது தலைமுறை மாடல்தான் விற்பனையில் இருந்து வருகிறது.

இந்த சூழலில் மாருதி சுஸுகி செலிரியோ கார் விற்பனையில் புதிய மைல்கல் (Milestone) ஒன்றை தற்போது கடந்துள்ளது. 7 லட்சம் யூனிட்கள் விற்பனை என்பதுதான் அந்த மைல்கல் ஆகும். கிட்டத்தட்ட 9 ஆண்டுகளில், மாருதி சுஸுகி செலிரியோ கார் இந்த விற்பனை மைல்கல்லை கடந்துள்ளது.
LXi, VXi, ZXi மற்றும் ZXi Plus என மாருதி சுஸுகி செலிரியோ கார் மொத்தம் 4 வேரியண்ட்களில் (Variants) விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை (Price) தற்போதைய நிலையில் 5.37 லட்ச ரூபாயாக இருக்கிறது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 7.14 லட்ச ரூபாயாக இருக்கிறது.

இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். செயல்திறனை பொறுத்தவரையில் மாருதி சுஸுகி செலிரியோ காரில் 1.0 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் (Petrol Engine) வழங்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 66 பிஹெச்பி பவர் மற்றும் 89 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.
இந்த இன்ஜின் உடன், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மறுபக்கம் மாருதி சுஸுகி செலிரியோ காரில் சிஎன்ஜி (CNG) இன்ஜின் ஆப்ஷனும் கொடுக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் வெர்ஷன்களில் வழங்கப்படும் அதே 1.0 லிட்டர் இன்ஜின்தான், சிஎன்ஜி வெர்ஷனிலும் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் சிஎன்ஜி மூலமாக இயங்கும்போது இந்த இன்ஜின் அதிகபட்சமாக 57 பிஹெச்பி பவர் மற்றும் 82 என்எம் டார்க் திறனை மட்டுமே உருவாக்கும். எனினும் சிஎன்ஜி மூலம் இயங்கும்போது சிறப்பான மைலேஜ் கிடைக்கும். செலிரியோ சிஎன்ஜி மாடல் ஒரு கிலோவிற்கு 35.60 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என மாருதி சுஸுகி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது உண்மையிலேயே மிகவும் சிறப்பான மைலேஜ் (Mileage) என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. ஆனால் சிஎன்ஜி இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே கொடுக்கப்படுகிறது. மாருதி சுஸுகி செலிரியோ சிஎன்ஜி காரில், 60 லிட்டர் கொள்ளவு கொண்ட டேங்க் வழங்கப்பட்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஒட்டுமொத்தமாக 7 லட்சம் யூனிட்கள் விற்பனை என்ற மைல்கல்லை கடந்திருந்தாலும் கூட, மாருதி சுஸுகி செலிரியோ காரின் விற்பனை, சமீப காலமாக சிறப்பாக இல்லை. மாதத்திற்கு மாதம் மாருதி சுஸுகி செலிரியோ காரின் விற்பனை தொடர்ந்து சரிவடைந்து கொண்டே வருகிறது. இந்தியர்கள் மத்தியில் மாருதி சுஸுகி செலிரியோ மீதான ஆர்வம் குறைந்து கொண்டே வருவதை இது உணர்த்துகிறது.


Click it and Unblock the Notifications








