35 கிமீ மைலேஜ் தரும் விலை குறைவான மாருதி காரை வாங்க ஆள் இல்ல! வெளியான தகவலால் கடும் அதிர்ச்சி!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள கார்களில் ஒன்று மாருதி சுஸுகி செலிரியோ (Maruti Suzuki Celerio). இது ஹேட்ச்பேக் (Hatchback) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். அதிக மைலேஜ் (Mileage) வழங்க கூடிய காராக இருந்தாலும் கூட, கடந்த செப்டம்பர் மாதம் மாருதி சுஸுகி செலிரியோ காரின் விற்பனை கடுமையாக சரிவடைந்துள்ளது.
மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5,390 செலிரியோ கார்களை விற்பனை செய்திருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கை நடப்பு 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3,246 ஆக சரிந்துள்ளது. இது 40 சதவீத வீழ்ச்சி ஆகும். முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதமும் மாருதி சுஸுகி செலிரியோ விற்பனையில் வீழ்ச்சியைதான் சந்தித்திருந்தது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாருதி சுஸுகி நிறுவனம் 5,852 செலிரியோ கார்களை விற்பனை செய்திருந்தது. ஆனால் நடப்பு 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த எண்ணிக்கை 4,038 ஆக குறைந்து விட்டது. இது 31 சதவீத வீழ்ச்சியாகும். ஆகஸ்ட்டை தொடர்ந்து வந்த செப்டம்பர் மாதத்தில் மாருதி சுஸுகி செலிரியோ காரின் விற்பனை, இதை விட அதிகமாக சரிவடைந்துள்ளது.
மாருதி சுஸுகி செலிரியோ வாடிக்கையாளர்கள் மத்தியில் செல்வாக்கை இழந்து வருவதை இந்த புள்ளி விபரங்கள் உறுதி செய்கின்றன. இத்தனைக்கும் மாருதி சுஸுகி செலிரியோ ஓரளவிற்கு குறைவான விலையில் (Price) கிடைக்க கூடிய மற்றும் அதிக மைலேஜ் கொடுக்க கூடிய கார் ஆகும்.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி செலிரியோ காரின் ஆரம்ப விலை வெறும் 5.37 லட்ச ரூபாய் மட்டுமே. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 7.14 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும்.
மாருதி சுஸுகி செலிரியோ கார் பெட்ரோல் (Petrol) மற்றும் சிஎன்ஜி (CNG) இன்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் பெட்ரோல் வேரியண்ட்களில் (Variants) 1.0 லிட்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் (Gear Box) ஆப்ஷன்கள் கொடுக்கப்படுகின்றன.
மறுபக்கம் இந்த காரின் சிஎன்ஜி வெர்ஷனிலும் 1.0 லிட்டர் இன்ஜின்தான் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் சிஎன்ஜி இன்ஜின் உடன் மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே கிடைக்கும். இந்த சிஎன்ஜி வெர்ஷன், ஒரு கிலோவிற்கு 34.43 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என மாருதி சுஸுகி நிறுவனம் தெரிவிக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: விற்பனை சரிவடைந்து கொண்டே வருவதால், மாருதி சுஸுகி செலிரியோ காருக்கு தற்போது தள்ளுபடி உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சலுகைகள், மாருதி சுஸுகி செலிரியோ காரின் விற்பனையை அதிகரிக்க உதவுமா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








