சிஎன்ஜி காரை யூஸ் பண்றதுதான் செலவு கம்மி!! மாருதியில் இருந்துதான் நிறைய பேர் வாங்குறாங்க!
மாருதி சுஸுகி (Maruti Suzuki), இந்தியாவில் சிஎன்ஜி கார்களை அதிகளவில் விற்பனை செய்யக்கூடிய நிறுவனம். நடப்பு 2023 -24ஆம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் மட்டும் 1.18 லட்சத்திற்கும் அதிகமான சிஎன்ஜி கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. வெறும் 3 மாதங்களில் இந்த மைல்கல்லை மாருதி சுஸுகி நிறுவனம் எட்டியிருப்பது மற்ற கார் நிறுவனங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பெட்ரோல், டீசல் வாகனங்கள் வேண்டாம், அதற்கு பதிலாக எலக்ட்ரிக், சிஎன்ஜி மற்றும் ஹைட்ரஜன் வாயுவால் இயங்கக்கூடிய வாகனங்களை பயன்படுத்துமாறு கடந்த சில வருடங்களாகவே மத்திய அரசு கூறி வருகிறது. இதற்கேற்ப, எலக்ட்ரிக், சிஎன்ஜி மற்றும் ஹைட்ரஜன் வாகனங்களை அதிகளவில் உற்பத்தி செய்யுமாறு கார் நிறுவனங்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

இதன் காரணமாகவே, மாருதி சுஸுகி நிறுவனத்தில் இருந்து சமீப காலங்களில் பல்வேறு சிஎன்ஜி கார்கள் வெளிவந்துள்ளன. இந்தியாவின் நம்பர் ஒன் கார் விற்பனை நிறுவனமாக விளங்கும் மாருதி எலக்ட்ரிக், ஹைட்ரஜன் கார்களில் கூட பெரியதாக எந்த கவனமும் செலுத்தவில்லை. அந்த நிறுவனத்தின் முழு கவனமும் சிஎன்ஜி கார்களின் மீதுதான் உள்ளது.
இதற்கு கை மேல் பலனாக, நடைபெற்றுவரும் 2023-24ஆம் நிதியாண்டின் 2ஆம் காலாண்டில் (2023 ஜூலை - செப்டம்பர்) சுமார் 1.18 லட்சத்திற்கும் அதிகமான சிஎன்ஜி கார்களை மாருதி சுஸுகி விற்பனை செய்துள்ளது. அதாவது, வெறும் 3 மாதங்களில் இந்த விற்பனை எண்ணிக்கையை மாருதி சுஸுகி எட்டியுள்ளது. சராசரியாக ஒவ்வொரு மாதத்திலும் கிட்டத்தட்ட 40 ஆயிரம் மாருதி சுஸுகி சிஎன்ஜி கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

ஒரு குறிப்பிட்ட 3 மாதங்களில் இத்தனை சிஎன்ஜி கார்களை இதற்கு முன்னர் எப்போதும் மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்தது இல்லை. அதுமட்டுமின்றி, 2023 ஜூலை -செப்டம்பர் மாதத்தில் மொத்தமாக 5.50 இலட்சத்திற்கும் அதிகமான கார்கள் மாருதி சுஸுகி நிறுவனத்தில் இருந்து விற்பனை செய்யப்பட்டுள்ளன. 3 மாதங்களில் இத்தனை கார்களையும் இதற்கு முன்னர் மாருதி சுஸுகி விற்பனை செய்தது கிடையாது.
தற்சமயம் மாருதி சுஸுகி நிறுவனத்தில் இருந்து ஆல்டோ கே10, ஈக்கோ, எஸ்-பிரெஸ்ஸோ, செலேரியோ, வேகன் ஆர், ஸ்விஃப்ட், டிசைர், பிரெஸ்ஸா, எர்டிகா, எக்ஸ்.எல்6, கிராண்ட் விட்டாரா, பலேனோ மற்றும் ஃப்ரான்க்ஸ் என 13 விதமான கார்கள் சிஎன்ஜி ஆப்ஷனிலும் கிடைக்கின்றன. இவை பல்வேறு விதமான உடலமைப்புகளில், பல்வேறு விதமான விலைகளில் விற்பனை செய்யப்படுகின்றன.

இதற்கிடையில் சுஸுகி நிறுவனம், ஸ்விஃப்ட் கான்செப்ட் மாதிரியை டோக்கியோவில் நடைபெற்ற 2023 ஜப்பான் மொபைலிட்டி கண்காட்சியில் காட்சிப்படுத்தி உள்ளது. இதனை அடிப்படையாக கொண்டே 2024 ஸ்விஃப்ட் கார் உருவாக்கப்படும். 2024 ஸ்விஃப்ட் கார் இந்தியாவிலும் விற்பனைக்கு கொண்டுவரப்படுவதற்கு வாய்ப்புள்ளது. புதிய ஸ்விஃப்ட் தற்போதைய ஸ்விஃப்ட் உடன் ஒப்பிடுகையில் பல்வேறு விதங்களில் மேம்பட்டிருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சிஎன்ஜி கார்கள் என்றவுடன், முற்றிலும் வித்தியாசமான கார் என நினைத்துவிட வேண்டும். இவற்றிலும் பெட்ரோல் என்ஜின் தான் பொருத்தப்படுகிறது. ஆனால், இவை இயங்குவதற்கு பெட்ரோல் நிரப்ப வேண்டியதில்லை, அதற்கு பதிலாக சிஎன்ஜி, அதாவது இயற்கை எரிவாயுவை நிரப்பினாலே போதுமானது.


Click it and Unblock the Notifications









