இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்! பிரெஸ்ஸா இருக்கும் போது அதே மாதிரி ஃப்ரான்க்ஸ் எதுக்கு?

மாருதி நிறுவனம் சப் -4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்டில் தற்போது ஃப்ரான்க்ஸ் காரை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில் இதே செக்மெண்டில் பிரெஸ்ஸா காரையும் இந்நிறுவனம் விற்பனை செய்து வருகிறது ஒரே செக்மெண்டில் இரண்டு கார்கள் இருந்தாலும் இரண்டிற்கும் என்ன வித்தியாசம் எனக் காணலாம் வாருங்கள்.

மாருதி நிறுவனம் இந்த ஆட்டோ எக்ஸ்போ 2023-ல் மக்கள் அதிகம் எதிர்பார்த்த பலேனோ கிராஸ் ஓவர் காரை ஃப்ரான்க்ஸ் என்ற பெயரில் அறிமுகம் செய்திருந்தது. முன்னரே இந்த காரை அந்நிறுவனம் ஒய்டிபி என்ற கோட் பெயருடன் வைத்து டெஸ்ட்டி செய்து வந்த நிலையில் இதை ஒரு எஸ்யூவி காராக அறிமுகம் செய்துள்ளது. இந்த கார் சப் 4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி காராகும். இதே ரகத்தில்தான் மாருதியில் பிரெஸ்ஸா கார் இருக்கிறது. ஒரு ரக ரகத்தில் மாருத இரண்டு கார்களை வெளியிட்டிருக்கும் இந்த இரண்டு கார்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது எனக் கேட்டால் ஏகப்பட்ட வித்தியாசம் இருக்கிறது. அதைத் தான் இங்கே காணப்போகிறோம்.

இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்! பிரெஸ்ஸா இருக்கும் போது அதே மாதிரி ஃப்ரான்க்ஸ் எதுக்கு?

சப் 4 மீட்டர்

மாருதி நிறுவனம் பிரெஸ்ஸா காரையும் இந்த ஃப்ரான்க்ஸ் காரையும் சப் 4 மீட்டர் கம்பேக்ட் எஸ்யூவி காராகவே வடிவமைத்துள்ளது. ஆனால் இந்த இரண்டு கார்களும் வேறு வேறு விதமான வாடிக்கையாளர்களுக்காக வடிவமைத்துள்ளது. பிரெஸ்ஸா கார் முழுவதுமாக ஒரு எஸ்யூவி காரை விரும்பும் வாடிக்கையாளர்களுக்காக வடிவமைத்துள்ளது. அதன் வடிவமைப்பில் ஆங்குலர் டிசைன் அதிகம் இருக்கிறது. அதுவே ஃப்ரான்க்ஸ் கார் புதிய கார் விரும்பிகளையும், கூபே வடிவ டிசைனை விரும்புபவர்களையும் கவர் செய்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் டிசைன் அதிக கர்வியாக இருக்கிறது. இந்த கார் பிரெஸ்ஸாவை விட அதிக ஏரோடைனமிக் அம்சங்களைக் கொண்டது.

உள்கட்டமைப்பு

காருக்குள் இட வசதியைப் பொருத்தவரை அதிக ஹெட்ரூம், அதிக சோல்டர் ரூம் உடன் பிரெஸ்ஸா கார் தான் ஃப்ரான்க்ஸ் காரை விட அதிக இட வசதியைக் கொண்ட காராக இருக்கிறது. அதே போல பிரெஸ்ஸா காரில் தான் எஸ்யூவி ஸ்டைல் டிரைவிங் விஷன் இருக்கிறது. டிரைவருக்க சாலை தெளிவாகத் தெரிவது, பானட் முழுவதுமாக தெரிவது எனச் சிறப்பாக இருக்கிறது. ஃப்ரான்க்ஸ் காரில் எர்கோனாமிக்ஸ் மற்றும் லோயர் சீட்டிங் போசிஷன் இருக்கிறது. இது ஒரு வகையில் அதிக வேகமாகச் செல்லும் போது குறைவாக பாடிரோலை கொடுக்கிறது. காருக்குள் உள்ள அம்சங்களைப் பொருத்தவரை பிரெஸ்ஸா காரில் ஃப்ரான்க்ஸ் காரில் உள்ள அம்சங்கள் அனைத்தும் இருக்கிறது. ஏன் அதை விடக் கூடுதல் அம்சங்களா சன்ரூஃப் உள்ளிட்ட அம்சங்களும் பிரெஸ்ஸாவில் இருக்கிறது.

இன்ஜின் ஆப்ஷன்கள்

இந்த இரண்டு காம்பேக்ட் எஸ்யூவி கார்களும் இன்ஜின் விஷயத்திலும் வித்தியாகப்படுகின்றனர். பிரெஸ்ஸா காரில் 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பயர்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 103 பிஎஸ் பவரையும், 136 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. ஃப்ரான்க்ஸ் காரில் இரண்டு விதமான இன்ஜின்கள் இருக்கிறது இரண்டும் பிரெஸ்ஸாவை விட சிறிய இன்ஜின் தான். இதன் லோயர் வேரியன்டில் 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பயர்டு பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 90 பிஎஸ் பவர் மற்றும் 113 என்எம் டார்க் தறினை வெளிப்படுத்தும், பெரிய வேரியன்டில் 1.0 லிட்டர் டர்போ சார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 100 பிஎஸ் பவரையும் 147 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்

கியரை பொருத்தவரை பிரெஸ்ஸா மற்றும் ஃப்ரான்க்ஸ் டர்போது இன்ஜின் கார்கள் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர் ஆப்ஷன்களும், ஃப்ரான்க்ஸ் நேச்சுரலி அஸ்பர்டு இன்ஜின் காரில் 5 ஸ்பீடு மேனுவல், 5 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் உடனும் பொருத்தப்பட்டுள்ளது.

டீலர் நெட்வோர்க்

மாருதி நிறுவனம் அரேனா, நெக்ஸா ஆகிய இரண்டு டீலர் நெட்வோர்க் முறையில் கார்களை விற்பனை செய்து வருகிறது. இதன் படி மாருதி நிறுவனம் தனது பிரெஸ்ஸா காரை அரேனா அவுட்லெட்கள் மூலம் விற்பனை செய்கிறது. புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஃப்ரான்க்ஸ் காரை அந்நிறுவனத்தின் பிரிமியம் கார்களின் அவுட்லெட்டான நெக்ஸா பிராண்ட் மூலம் விற்பனை செய்கிறது. தற்போது ஃப்ரான்க்ஸ் காரின் புக்கிங இந்தியாவில் உள்ள நெக்ஸா டீலர்களிடம் துவங்கிவிட்டது. இந்த இரண்டில் உங்களுக்குப் பிடித்த கார் எது? கமெண்டில் சொல்லுங்கள்!

More from DriveSpark

Article Published On: Saturday, January 14, 2023, 19:00 [IST]
English summary
Maruti suzuki compact SUVs brezza and fornx what is the different
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+