டாடாவோட கதையை முடிக்க பிளான்.. ரயிலைபோல் அடுத்தடுத்து ஆறு எலெக்ட்ரிக் கார்களை களமிறக்க போகிறது மாருதி சுஸுகி!

தொடர்வண்டியைப் போல தொடர்ச்சியாக அடுத்தடுத்து என ஒட்டுமொத்தமாக ஆறு எலெக்ட்ரிக் கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் திட்டம் போட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

மாருதி சுஸுகி நிறுவனம் சமீபத்தில் ஆட்டோ எக்ஸ்போ வாயிலாக அதன் முதல் எலெக்ட்ரிக் கார் மாடலை இந்தியாவில் காட்சிப்படுத்தியது. இவிஎக்ஸ் எனும் காரையே நிறுவனம் காட்சிப்படுத்தியது. இது யாரும் எதிர்பார்த்திராத ஓர் வெளியீடு நிகழ்வு ஆகும். மாருதி சுஸுகியின் இந்த செயல் ஒட்டுமொத்த இந்தியர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் வகையில் அமைந்தது. இந்த நிலையிலேயே ஓர் முக்கிய தகவல் நிறுவனம் சார்ந்து வெளியாகி உள்ளது.

மாருதி சுஸுகி

ஆறு புதிய எலெக்ட்ரிக் கார்

மாருதி சுஸுகி நிறுவனம் அடுத்தடுத்ததாக ஆறு புதிய எலெக்ட்ரிக் கார் மாடல்களை உருவாக்க இருப்பதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. அனைத்து எலெக்ட்ரிக் கார் மாடல்களும் 2030 ஆம் ஆண்டிற்குள் உலகளவில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருப்பதையும் அந்த தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. நிறுவனத்தின் முதல் மின்சார கார் வரும் 2025 ஆம் ஆண்டிலேயே விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருக்கின்றது.

முதல் கார் மாடல் எதுவாக இருக்கும்?

அது சமீபத்தில் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சி சந்த இவிஎக்ஸ் -ஆக இருக்கலாம் என யூகிக்கப்படுகின்றது. இதுவே இந்தியாவிற்கான மாருதி சுஸுகியின் முதல் எலெக்ட்ரிக் காராக இருக்க உள்ளது. சுஸுகி நிறுவனம் சமீபத்தில் தன்னுடைய புதிய திட்டங்கள் பற்றிய தகவலை வெளியிட்டது. இதன் வாயிலாகவே நிறுவனம் அடுத்தடுத்து என 20230 ஆம் ஆண்டிற்குள் ஐந்து புதிய எலெக்ட்ரிக் கார்களைக் களமிறக்க இருப்பது உறுதியாகி உள்ளது.

மாருதி சுஸுகி

பெரிய பிளான்ல இருக்காங்க

சமீபத்தில் வெளியாகிய ஆவணங்கள் சிலவும் இதையே உறுதிப்படுத்துகின்றன. இந்த ஆவணத்தின் வாயிலாக நிறுவனம் 60 சதவீதம் ஐசிஇ (சிஎன்ஜி, பயோகேஸ், எத்தனால்) வாகனங்களையும், 25 சதவீதம் ஹைபிரிட் எலெக்ட்ரிக் வாகனங்களையும், 15 சதவீதம் முழு மின்சார கார்களையும் அறிமுகம் செய்ய இருப்பது உறுதியாகி இருக்கின்றது. இவிஎக்ஸ் எனும் புதிய எலெக்ட்ரிக் காரைத் தொடர்ந்து நிறுவனம் அதன் பிரபல மாடல்களையே மின்சார வெர்ஷனாக இந்த உலகில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது.

எந்த கார் மாடலை மின்சார வெர்ஷனில் எதிர்பார்க்கலாம்?

அந்தவகையில், ஜிம்னி, பலேனோ, ஸ்விஃப்ட், வேகன்ஆர் மற்றும் ஃப்ரான்க்ஸ் ஆகிய கார் மாடல்களையே மின்சார வெர்ஷனில் கொண்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதுகுறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் மாருதி சுஸுகி நிறுவனம் வெளியிடவில்லை. கூடிய விரைவில் இதுகுறித்த தகவலை அது வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது, மாருதி சுஸுகி நிறுவனம் இந்தியாவில் ஹைபிரிட் எலெக்ட்ரிக் கார் மற்றும் சிஎன்ஜி வாகனங்களை அறிமுகம் செய்வதில் தீவிரமாக களமிறங்கி இருக்கின்றது.

மாருதி சுஸுகி

இதேபோல் விரைவில் எத்தனாலில் இயங்கும் வாகனங்களையும் அதிகளவில் விற்பனைக்குக் கொண்டு வரும் என தற்போது வெளியாகி இருக்கும் தகவலின் வாயிலாக தெரிய வந்திருக்கின்றது. இந்த அனைத்து விபரங்களும் ஒட்டுமொத்த சுஸுகி கார் பிரியர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் வகையில் அமைந்திருக்கின்றது. குறிப்பாக, இவிஎக்ஸ் 2025க்குள் விற்பனைக்கு வந்துவிடும் என வெளியாகி இருக்கும் தகவல் இந்தியர்களை படுகுஷியில் ஆழ்த்தி உள்ளது. மாருதி சுஸுகி இவிஎக்ஸ் ஓர் மிட்-சைஸ் எஸ்யூவி ரக எலெக்ட்ரிக் கார் ஆகும்.

இவிஎக்ஸ் எலெக்ட்ரிக் காரின் சிறப்புகள்

இந்த காரை மாருதி சுஸுகி நிறுவனம் 4X4 தொழில்நுட்பம் கொண்ட காராகவும் உருவாக்கி உள்ளது. இதுமட்டும் இல்லைங்க சற்று நீளமான வீல் பேஸ் கொண்டதாகவும் இக்காரை மாருதி சுஸுகி வடிவமைத்து இருக்கின்றது. இத்துடன், ஓவர் ஹேங்க்கள் சிறியதாகவும், கிரவுண்ட் கிளியரன்ஸ் சிறப்பாகவும் வழங்கப்பட்டுள்ளது. ஆகையால், மாருதி சுஸுகியின் இந்த தயாரிப்பின் கேபின் அதிக கம்ஃபோர்ட்டான பயண அனுபவத்தை வழங்கும் தெளிவாக தெரிகின்றது. மாருதி சுஸுகி நிறுவனம் இக்காரின் உருவாக்குவதற்காக முற்றிலும் புதிய பிளட்பாரத்தை பயன்படுத்தி இருப்பது குறிப்பிடத்தகுந்தது.

எனவே அந்நிறுவனத்தின் பிற தயாரிப்புகளிடம் இருந்து பல மடங்கு மாறுபட்டு காட்சியளிக்கும். தற்போது டாடா மோட்டார்ஸின் நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் காரே மின்வாகன உலகின் தலைவனாக விளங்கிக் கொண்டிருக்கின்றது. இதன் கோட்டையைக் கை பற்றவே 2025 ஆம் ஆண்டிற்கு விற்பனைக்கு வர உள்ளது இவிஎக்ஸ் எலெக்ட்ரிக் கார். தற்போது இந்த காரின் உருவாக்க பணிகள் அதி வேகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. ஆகையால், கூடிய சீக்கிரமே இவிஎக்ஸ்-இன் உற்பத்திக்கான மாடல் இந்த உலகத்தில் காட்சிப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles
English summary
Maruti suzuki confirms 6 ev s
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X