கார் வாங்கும் கனவை இந்த ஜூலையில் நிஜமாக்கலாம்!! மாருதி சுஸுகியின் அள்ளி கொடுக்கும் ஆஃப்பர்

மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம் அதன் குறிப்பிட்ட சில கார்களுக்கு 2023 ஜூலை மாதத்திற்கான சலுகைகளை அறிவித்துள்ளது. இதன்படி எந்த மாருதி சுஸுகி கார்களை இந்த ஜூலை மாதத்தில் சலுகைகள் உடன் வாங்கலாம் என்ற விபரங்களை விரிவாக இனி பார்க்கலாம்.

இந்தியாவின் நம்பர் ஒன் கார் பிராண்டாக மாருதி சுஸுகி விளங்குகிறது. இந்திய-ஜப்பானிய கூட்டு நிறுவனமாக பல வருடங்களாக செயல்பட்டு வரும் மாருதி சுஸுகி ஒவ்வொரு மாதத்திலும் இந்திய சந்தையில் இலட்சக்கணக்கில் கார்களை விற்பனை செய்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம், மாருதி சுஸுகி பிராண்டில் இருந்து அதிக எண்ணிக்கையில் கார் மாடல்கள் சந்தைப்படுத்தப் படுகின்றன என்பதாகும்.

maruti suzuki discount offers

அதுமட்டுமின்றி, அவ்வப்போது மாருதி சுஸுகி சார்பில் அதன் கார்களுக்கு சலுகைகள் அறிவிக்கப்படுவதும் வாடிக்கையாளர்கள் பலர் மாருதி சுஸுகி பிராண்டை தேடி வருவதற்கு முக்கிய காரணமாக சொல்ல வேண்டும். இந்த வரிசையில், இந்த ஜூலை மாதத்திற்கான சலுகைகளையும் தனது குறிப்பிட்ட கார்களுக்கு மாருதி சுஸுகி நிறுவனம் அறிவித்துள்ளது.

மாருதி சுஸுகி கார்கள் அரேனா மற்றும் நெக்ஸா டீலர்ஷிப் மையங்களின் வாயிலாக விற்பனை செய்யப்படுகின்றன. அதாவது விலை குறைவான மாருதி சுஸுகி கார்கள் அரேனா டீலர்ஷிப் ஷோரூம்கள் வாயிலாகவும், விலையுயர்ந்த கார்கள் நெக்ஸா டீலர்ஷிப் மையங்களின் வாயிலாகவும் விற்பனை செய்யப்படுகின்றன. இதில் அரேனா டீலர்ஷிப் மையங்கள் வாயிலாக விற்பனை செய்யும் கார்களுக்கே இந்த ஜூலை மாதத்திற்கான சலுகைகளை மாருதி சுஸுகி அறிவித்துள்ளது.

maruti suzuki discount offers

அரேனா டீலர்ஷிப் ஷோரூம் வாயிலாக விற்பனை செய்யப்படும் கார்களில் ஆல்டோ கே10 காருக்கு அதிகப்பட்சமாக ரூ.40,000 வரையிலான பணம் தள்ளுபடிகளும், ரூ.15,000 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் போனஸும், ரூ.4,100 மதிப்பில் கார்ப்பிரேட் தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆக மொத்தத்தில் இந்த ஜூலை மாதத்தில் ஆல்டோ கே10 காரை வாங்குவோர் ரூ.59,100 வரையிலான பணத்தை மிச்சப்படுத்த முடியும்.

ஆல்டோ கே10 காரில் 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது. ஆனால், ஆல்டோவின் பிரபலத்திற்கு அதன் அளவில் சிறிய 800சிசி தான் முக்கிய காரணமாகும். ஆல்டோ 800 என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்டு வந்த 800சிசி என்ஜின் உடனான ஆல்டோ காரின் விற்பனையை சமீபத்தில்தான் மாருதி சுஸுகி நிறுவனம் நிறுத்தியது. இருப்பினும், சில டீலர்ஷிப் ஷோரூம்களில் இப்போதும் கிடைக்கும் ஆல்டோ 800 காரை ரூ.15,000 வரையிலான எக்ஸ்சேஞ்ச் போனஸ் உடன் மட்டும் வாங்க முடியும்.

maruti suzuki discount offers

ஆல்டோ கே10 காரை போன்று மாருதி சுஸுகியின் மற்ற பட்ஜெட் விலை கார்களான செலேரியோ மற்றும் எஸ்-பிரெஸ்ஸோவிற்கும் ரூ.15,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.4,100 கார்ப்பிரேட் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், செலேரியோ காருக்கு ரூ.35,000 வரையிலான பணம் தள்ளுபடியும், எஸ்-பிரேஸ்ஸோ காருக்கு ரூ.39,000 வரையிலான பணம் தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் சிறந்த விற்பனை கார்களுள் ஒன்றாக விளங்கும் வேகன்ஆருக்கு ரூ.30,000 வரையிலான பணம் தள்ளுபடி சலுகைகளும், ரூ.20,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.4,100 கார்ப்பிரேட் தள்ளுபடியும் வழங்கப்பட்டுள்ளது. மாருதி சுஸுகியின் மற்றொரு பிரபலமான ஹேட்ச்பேக் காரான ஸ்விஃப்ட்டிற்கு ரூ.25,000 வரையிலான பணம் தள்ளுபடி, ரூ.20,000 வரையிலான எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.4,100 மதிப்பில் கார்ப்பிரேட் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

maruti suzuki discount offers

ஈக்கோ பயணிகள் வேன் மாடலை இந்த ஜூலை மாதத்தில் வாங்குவோர் ரூ.20,000 வரையிலான பணம் தள்ளுபடி, ரூ.10,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.3,100 கார்ப்பிரேட் தள்ளுபடியை பெறலாம். டிசைர் காம்பெக்ட் செடான் காருக்கு ரூ.15,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அரேனா டீலர்ஷிப் ஷோரூம் வாயிலாக விற்பனை செய்யப்படும் பிரெஸ்ஸா காருக்கு எந்தவொரு சலுகையும் இந்த ஜூலை மாதத்திற்காக அறிவிக்கப்படவில்லை.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: வாகனங்களின் விற்பனையை அதிகரிக்கவும், தொடர்ந்து உச்சத்தில் வைத்திருக்கவும் இவ்வாறான சலுகை அறிவிப்புகள் அவ்வப்போது அறிவிக்கப்பட வேண்டியது அவசியம் ஆகிறது. இதனை நன்கு புரிந்து வைத்துள்ள காரணத்தினாலேயே மாருதி சுஸுகி நிறுவனம் ஒவ்வொரு மாதத்திலும் சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளது.

Article Published On: Tuesday, July 11, 2023, 15:44 [IST]
English summary
Maruti suzuki discount offers for arena cars
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X