இதுவரை யாரும் தொடாத உச்சம்... மாருதியே இந்த இடத்துக்கு வரதுக்கு 10 வருசம் ஆகிருக்குது!

மாருதி நிறுவனம் கடந்த 2022ம் ஆண்டு மொத்தம் 3.2 லட்சம் கார்களை ரயில் மூலம் ஏற்றி இந்தியா முழுவதும் விநியோகம் செய்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இதுதான் அதிகமான எண்ணிக்கையாகும். இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் அதிகமான பயணிகள் வாகனத்தைத் தயாரித்து வரும் நிறுவனம் மாருதி, இந்தியாவில் ஓடும் பெரும்பாலான கார்கள் மாருதி நிறுவனத்தின் கார்கள் தான் அந்த அளவிற்கு மாருதி நிறுவனம் தனது வாகன விற்பனையில் பெரும் தடத்தைப் பதித்துத் தொடர்ந்து வெற்றிகரமான விற்பனையைச் செய்து வருகிறது. இந்நிலையில் கடந்த 2022ம் ஆண்டு மாருதி நிறுவனம் தனது வாகன விநியோகத்தில் புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளது.

இதுவரை யாரும் தொடாத உச்சம்... மாருதியே இந்த இடத்துக்கு வரதுக்கு 10 வருசம் ஆகிருக்குது!

இந்தியாவில் ஆட்டோமொபைல் தயாரிப்பார்கள் ஒன்று அல்லது இரண்டு இடத்தில் தான் தனது ஆலையை வைத்து அங்கு தனது தயாரிப்புக்களைத் தயாரித்து அதை இந்தியா முழுவதும் விநியோகம் செய்வார்கள். இப்படியாக ஒரு இடத்தில் தயாரிக்கப்பட்ட வாகனத்தை இந்தியா முழுவதும் கொண்டு செல்வது என்பது மிகப்பெரிய சவாலான விஷயம். ஓரிரு வாகனங்கள் என்றால் பரவாயில்லை, தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இப்படியாகக் கொண்டு செல்ல வேண்டும் என்றால் சிரமம் தான்.

என்னதான் ஷோரூம்களுக்கு லாரிகள் மூலம் கார்கள் வந்திறங்கினாலும் மாருதி, டாடா போன்ற பெரிய நிறுவனங்கள் எல்லாம் நீண்ட தூரம் இருக்கும் ஷோரூம்களுக்கு வெறும் லாரியில் மட்டும் தனது வாகனங்களை அனுப்பி வைக்கவில்லை.மாறாக ரயில் பாதையை கார்களை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குக் கொண்டு செல்ல பயன்படுத்துகின்றனர். மாருதி நிறுவனம் ஆட்டோமொபைல் ஃபிரைட் ரயில் ஆப்ரேட்டருக்கான லைசென்ஸை கடந்த 2013ம் ஆண்டு பெற்றது.

கடந்த 10 ஆண்டுகளாக இந்நிறுவனம் தனது ஆலையில் தயாரிக்கும் வாகனங்களை இப்படியாக ரயில்கள் மூலமும் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குக் கொண்டு செல்ல பயன்படுத்தி வந்தது.இதனால் தூரத்தில் இருக்கும் ஷோரூம்களுக்கான காரை மொத்தமாக ரயிலில் ஏற்றி ஒரு இடத்திற்குக் கொண்டு வந்து பின்னர் அங்கிருந்து லாரியில் ஏற்றி, ஷோரூம்களுக்கு கொண்டு வருகின்றனர். 10 ஆண்டுகளுக்கு முன்பு மாருதி ஆலையில் தயாரான கார்களில் 5 சதவீதமான கார்கள் மட்டுமே இப்படியாக ரயிலில் ஏற்றி செல்லப்பட்ட நிலையில் தற்போது 2022ம் ஆண்டு அது 17 சதவீதமாக உயர்த்தியுள்ளது.

கடந்த 2022ம் ஆண்டு மட்டும் மாருதி நிறுவனம் மொத்தம் 3.2 லட்சம் வாகனங்கள் ரயில் மூலம் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குக் கொண்டு சென்றுள்ளது. இது தான் வரலாற்றிலேயே அதிக எண்ணிக்கையாகும். இப்படியாக ரயில்கள் மூலம் மாருதி நிறுவனம் கார்களை கொண்டு செல்வது மூலம் கடந்தாண்டு மட்டும் 1800 மெட்ரிக் டன் CO2 மாசு ஏற்படுவதைத் தவிர்த்துள்ளது. இது மட்டுமல்ல 5 கோடி லிட்டர் எரிபொருள் செலவாவதையும் தவிர்த்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளைச் சேர்த்துப் பார்க்கும் போது மாருதி நிறுவனம் மொத்தம் தனது 14 லட்சம் வாகனங்களை இப்படியாக ரயிலில் கொண்டு சென்றுள்ளது. இதன் மூலம் 6600 மெட்ரிக் டன் கார்பன் டைஆக்ஸைடு மாசுவை கட்டுப்படுத்தியுள்ளது. இப்படியாக ரயில்களில் மாருதி நிறுவனம் தனது கார்களை எடுத்துச் செல்லவே பிரத்தியேகமாக ரயில் பெட்டிகளை வைத்துள்ளது. ஒவ்வொரு பெட்டியிலும் குறைந்தது 300 கார்களையாவது ஏற்ற முடியும். இதே போல 40 பெட்டிகள் இருக்கிறது. அதாவது ஒரு முறைக்கு 12 ஆயிரம் வாகனங்களை ரயிலில் எடுத்துச் செல்ல முடியும்.

தற்போது மாருதி நிறுவனம் கார்களை ஏற்றுவதற்கு டில்லி என்சிஆர் மற்றும் குஜராத்தில் லோடிங் டெர்மனிலையும், அதை இறக்கி வைப்பதற்காக, பெங்களூரு, நாக்பூர், மும்பை, கவுகாத்தி, முந்த்ரா துறைமுகம், இந்தூர், கொல்கத்தா, சென்னை, ஐதராபாத், ஆமதாபாத், சில்லிகுரி, கோவை, புனே, அகர்தலா, சில்சர், ராஞ்சி, மற்றும் லூதியானா ஆகிய பகுதிகளில் டெர்மினல்களை உருவாக்கியுள்ளது. தற்போது இதுவரை எந்த நிறுவனமும் செய்யாத, ஏன் மாருதியே செய்யாத புதிய சாதனையை அந்நிறுவனம் படைத்துள்ளது. 2023ம் ஆண்டு இது மேலும் அதிகமாகும் என எதிர்பார்க்கலாம். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

Most Read Articles
English summary
Maruti Suzuki dispatches 3 2 lakh cars in 2022 via Indian railways is the highest ever
Story first published: Tuesday, January 17, 2023, 14:16 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X