ரோட்டுல எந்த பக்கம் திரும்பி பார்த்தாலும் இந்த காரை பார்க்க முடியும்! புதிய மைல்கல்லை எட்டி பிடித்த மாருதி!

மாருதி சுஸூகி நிறுவனம் கடந்த 15 ஆண்டுகளில் 25 லட்சம் டிசையர் கார்களை உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது. இந்த கார் இந்தியாவில் 50 சதவீத மார்க்கெட் பங்கு வகித்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுவரை எந்த செடான் கார் விற்பனையும் 10 லட்சம் கார்கள் கூட தயாரிக்கப்படாத நிலையில் இந்த கார் 25 லட்சம் இலக்கை எட்டி பிடித்துள்ளது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் காம்பேக்ட் செட்டான் செக்மென்ட் ஓரளவு பிரபலமான கார்களைக் கொண்ட செக்மென்ட்களாக இருக்கிறது. இந்த செக்மெண்டில் உள்ள கார்கள் நீண்ட ஆண்டுகள் சிறப்பான விற்பனையில் இருக்கிறது. தற்போது டாடா டிகோர், ஹோண்டா அமேஸ், ஹூண்டாய் ஆரா மற்றும் மாருதி சுஸூகி டிசையர் ஆகிய கார்கள் இந்த செக்மெண்டின் விற்பனையாகி வருகிறது. இதில் டிசையர் கார் தான் சிறப்பாக விற்பனையாகும் காராக இருக்கிறது.

maruti suzuki dzire milestone

மாருதி நிறுவனத்தின் சியாஸ் காருக்கு பிறகு இந்த டிசையர் கார் தான் மாருதி நிறுவனம் வெளியிட்ட இரண்டாவது செடான் காராக இருக்கிறது. தற்போது மாருதி நிறுவனம் இந்த டிசையர் காரை தனது அரேனா ஷோரூம்கள் மூலம் இந்தியா முழுவதும் விற்பனை செய்து வருகிறது. ரூபாய் 6.53 லட்சம் முதல் ரூபாய் 9.39 லட்சம் என்ற விலையில் இந்த கார்கள் விற்பனையாகி வருகிறது.

மொத்தம் 7 விதமான கலர் ஆப்ஷன்களில் இந்த காரை விற்பனை செய்து வருகிறது. மேக்மா கிரே, ப்ளூயிஷ் பிளாக், ஆக்ஸ்போர்ட் ப்ளூ, ஆர்டிக் ஒயிட், ஃபோனிக்ஸ் ரேட், ஸ்பிளென்டிட் சில்வர்,மற்றும் ஷேர்வுட் பிரவுன் ஆகிய நிறங்களில் விற்பனையாகி வருகிறது. இந்த கார் முதல் முதலாக அறிமுகம் செய்யப்பட்டு 15 ஆண்டுகள் ஆகிறது. இந்த 15 ஆண்டுகளில் தற்போது டிசையர் கார் தனது 29 லட்சமாவது காரை தயாரித்து விற்பனைக்கு அனுப்பியுள்ளது.

maruti suzuki dzire milestone

இதன் மூலம் மாருதி சுஸூகி நிறுவனம் டிசையர் காரை 15 ஆண்டுகளில் 25 லட்சம் கார்களை தயாரித்து புதிய சாதனை மைல் கல்லை படைத்துள்ளது. இந்த காம்பேக்ட் செடான் காரில் இதுவரை எந்த நிறுவனமும் 10 லட்சம் கார்களை கூட தயாரிக்காத நிலையில் டிசையர் கார் மட்டும் 25 லட்சம் கார்கள் தயாராகி உள்ளன.

இதுகுறித்து அந்நிறுவனத்தின் மார்க்கெட்டிங் மற்றும் விற்பனை பிரிவு அதிகாரி ஷஷன் கூறும் போது "மாருதி நிறுவனம் உலக தரத்திலான தயாரிப்புகளை அனைத்து செக்மெண்டிலும் வழங்குவதில் முளைப்பு காட்டி வருகிறது. எங்கள் தயாரிப்புகளில் புதிய தொழில்நுட்பம் புதிதான அம்சங்கள் கவனத்தை ஈர்க்கும் வகையிலான டிசைன்கள் இருக்கும்.

இது எல்லாம் சேர்ந்தது தான் டிசையர் கார் மாருதி நிறுவனத்தின் சிறந்த தயாரிப்புகளில் ஒன்று. வாடிக்கையாளர்கள் அதிகம் தேர்வு செய்யும் செடான்காராக இது இருக்கிறது. இந்த தருவாயில் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் எங்கள் நன்றியை சமர்ப்பிக்கிறோம். 25 லட்சம் இதயங்களை நாங்கள் சென்றடைந்துள்ளது மகிழ்ச்சியை அளிக்கிறது." என்று கூறினார்.

மாருதி சுஸூகி டிசையர் காரை பொருத்தவரை ஒரு காம்பேக்ட் செடான் காராக அதன் டிசைனிலும் அம்சத்திலும் மார்க்கெட்டில் உள்ள லேட்டஸ்ட் டெக்னாலஜியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரில் ஆட்டோமேட்டிக் எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட், எல்இடி டிஆர்எல் லைட், எல்இடி டெயில் லைட், முன் பக்கம் போல்ட் ஆன கிரில் ஆகிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளது.

இதுபோக இந்த காலில் டூயல் டோன் அலாய் வீல்கள் சிஸ்டம், க்ரூஸ் கண்ட்ரோல், ஆட்டோ போல்டிங் ரியர் மிரர், ஸ்மார்ட் பிளே இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆகி அம்சங்கள் உள்ளது. இந்த காரின் இன்ஜினை பொருத்தவரை 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்படுகிறது. இந்த காரின் பெட்ரோல் இன்ஜினில் சிஎன்ஜி ஆப்ஷனும் இருக்கிறது.

மாருதி நிறுவனம் தனது ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் காரை அப்டேட் செய்ய பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. வரும் 2024 ஆம் ஆண்டு அப்டேட் செய்யப்பட்ட புதிய வடிவமைப்பிலான ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் கார் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிதாக அப்டேட் செய்யப்பட்ட கார் விற்பனைக்கு வரும்போது இதை விற்பனை மேலும் அதிகமாகும் என எதிர்பார்க்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி நிறுவனம் தனது 25 லட்சமாவது டிசையர் காரை தயாரித்துள்ளது நிச்சயம் நிறுவனத்திற்கு ஒரு சாதனை மைல்கல் தான் இந்த கார் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான காராக இருக்கிறது. நீங்கள் சாலையில் செல்லும்போது எங்கு திரும்பினாலும் இந்த டிசையர் காரை பார்த்துவிடலாம் அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் இந்த கார் மீது மோகம் அதிகமாகி உள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, September 15, 2023, 14:12 [IST]
English summary
Maruti suzuki dzire hits 2 5 million sales milestone in india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+