ஒரு லிட்டருக்கு 35 கிமீ மைலேஜ் தரும் மாருதி கார்! பைக் வாங்கறதுக்கு பதிலா இந்த காரை வாங்கீரலாம்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள கார்களில் ஒன்று மாருதி சுஸுகி டிசையர் (Maruti Suzuki Dzire). இது காம்பேக்ட் செடான் (Compact Sedan) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். ஆனால் போட்டி அதிகரித்து கொண்டே வருவதால், இதன் புதிய தலைமுறை மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்ய மாருதி சுஸுகி நிறுவனம் தயாராகி வருகிறது.

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள புதிய தலைமுறை மாருதி சுஸுகி டிசையர் கார், வரும் 2024ம் ஆண்டின் முதல் பாதியில் விற்பனைக்கு வரவுள்ளது. விற்பனைக்கு வந்த பின்பு, ஹூண்டாய் அவ்ரா மற்றும் ஹோண்டா அமேஸ் போன்ற கார்களுக்கு மிக கடுமையான நெருக்கடியை இது ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு லிட்டருக்கு 35 கிமீ மைலேஜ் தரும் மாருதி கார்! பைக் வாங்கறதுக்கு பதிலா இந்த காரை வாங்கீரலாம்!

புதிய தலைமுறை மாருதி சுஸுகி டிசையர் காரில், ஸ்ட்ராங் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படவுள்ளது. இந்த பெருமையை பெறும் மாருதி சுஸுகி நிறுவனத்தின் முதல் காம்பேக்ட் செடான் டிசையர்தான் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இதன் மூலம் இந்தியாவில் அதிக மைலேஜ் (Mileage) வழங்க கூடிய கார்களில் ஒன்றாக புதிய தலைமுறை டிசையர் இருக்கும்.

1.2 லிட்டர் ஸ்ட்ராங் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின், 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.2 லிட்டர் சிஎன்ஜி இன்ஜின் என புதிய தலைமுறை மாருதி சுஸுகி டிசையர் காரில் மொத்தம் 3 இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் நேச்சுரலி அஸ்பிரேட்டட் மற்றும் சிஎன்ஜி இன்ஜின்களும் நல்ல மைலேஜ் வழங்க கூடியவையாக இருக்கலாம் என எதிர்பார்க்கலாம்.

ஒரு லிட்டருக்கு 35 கிமீ மைலேஜ் தரும் மாருதி கார்! பைக் வாங்கறதுக்கு பதிலா இந்த காரை வாங்கீரலாம்!

புதிய தலைமுறை மாருதி சுஸுகி டிசையர் காரின் ஸ்ட்ராங் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் ஒரு லிட்டருக்கு 35 கிலோ மீட்டருக்கும் அதிகமான மைலேஜ் வழங்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல்தான் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதுதவிர புதிய தலைமுறை மாருதி சுஸுகி டிசையர் காரில் டிசைன் மாற்றங்களும் செய்யப்படவுள்ளன.

இதன்படி புதிய தலைமுறை மாருதி சுஸுகி டிசையர் காரின் முன் பகுதியில் புதிய பம்பர், பெரிய க்ரில் அமைப்பு, ப்ரொஜெக்டர் எல்இடி ஹெட்லைட்கள் மற்றும் மெஷின் கட் அலாய் வீல்கள் ஆகியவை வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இதுதவிர புதிய கலர் ஆப்ஷன்களும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. உட்புறத்தை பொறுத்தவரை விசாலமான கேபினை வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கலாம்.

வசதிகளை (Features) பொறுத்தவரையில், பெரிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் மற்றும் புஷ் பட்டன் ஸ்டார்ட் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கலாம். அத்துடன் புதிய சுஸுகி கனெக்ட் தொழில்நுட்ப வசதியும் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

புதிய தலைமுறை டிசையர் தவிர, புதிய தலைமுறை ஸ்விஃப்ட் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளையும் மாருதி சுஸுகி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. புதிய தலைமுறை டிசையர் காரின் அதே இன்ஜின் ஆப்ஷன்கள்தான், புதிய தலைமுறை ஸ்விஃப்ட் காரிலும் வழங்கப்படவுள்ளன. எனவே இதுவும் மைலேஜை வாரி வழங்க கூடியதாக இருக்கும் என நாம் எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Saturday, March 4, 2023, 10:45 [IST]
English summary
Maruti suzuki dzire new gen india launch details mileage features
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+