31 கிமீ மைலேஜை வாரி வழங்கும் மாருதி காரின் விலை இவ்ளோதானா! எப்புட்றா என மண்டை காயும் போட்டி நிறுவனங்கள்!

இந்திய சந்தையில் நடப்பு 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப்-10 செடான் கார்களின் (Top-10 Sedan Cars) பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இதில், மாருதி சுஸுகி டிசையர் (Maruti Suzuki Dzire) முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளது.

கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் மாருதி சுஸுகி நிறுவனம் இந்திய சந்தையில் 14,456 டிசையர் கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கை, நடப்பு 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் 15,965 ஆக உயர்ந்துள்ளது. இது 10 சதவீத வளர்ச்சி ஆகும்.

Maruti Suzuki Dzire

மாருதி சுஸுகி டிசையர் காரின் இந்த வளர்ச்சிக்கு பின்னால் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. எனினும் விலை (Price) மற்றும் மைலேஜ் (Mileage) ஆகியவைதான் மிகவும் முக்கியமான காரணங்கள் ஆகும். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி டிசையர் காரின் ஆரம்ப விலை (Price) வெறும் 6.51 லட்ச ரூபாய் மட்டுமே.

அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 9.39 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும் (Ex-showroom Price). மாருதி சுஸுகி டிசையர் காரில், பெட்ரோல் (Petrol) மற்றும் சிஎன்ஜி (CNG) இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

Maruti Suzuki Dzire Side Design

இதன் பெட்ரோல் வெர்ஷன்களில் பொருத்தப்பட்டிருப்பது, 1.2 லிட்டர் இன்ஜின் ஆகும். அதிகபட்சமாக 89.7 பிஎஸ் பவர் மற்றும் 113 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் மேனுவல் மற்றும் ஏஜிஎஸ் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.

இதில், மேனுவல் கியர் பாக்ஸ் மாடல் ஒரு லிட்டருக்கு 22.41 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் எனவும், ஏஜிஎஸ் கியர் பாக்ஸ் மாடல் ஒரு லிட்டருக்கு 22.61 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுபக்கம் சிஎன்ஜி வெர்ஷன்களிலும் இதே இன்ஜின்தான் பொருத்தப்பட்டுள்ளது.

ஆனால் சிஎன்ஜி மூலமாக இயங்கும்போது, இந்த இன்ஜின் அதிகபட்சமாக 77.4 பிஎஸ் பவரையும், 98.5 என்எம் டார்க் திறனையும் மட்டுமே உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. பவர் அவுட்புட் சற்று குறைவு என்றாலும் கூட, சிஎன்ஜி மூலமாக இயங்கும்போது, சிறப்பான மைலேஜ் கிடைக்கும்.

மாருதி சுஸுகி டிசையர் காரின் சிஎன்ஜி இன்ஜின் ஒரு கிலோவிற்கு 31.12 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சிஎன்ஜி இன்ஜின் உடன், மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படுகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: குறைவான விலை, நிறைவான மைலேஜ் ஆகிய சிறப்பம்சங்களுடன், பல்வேறு அதிநவீன வசதிகளும் மாருதி சுஸுகி டிசையர் காரில் கொடுக்கப்படுகின்றன. இதன் காரணமாகவே இந்திய சந்தையில் மாருதி சுஸுகி டிசையர் காரின் விற்பனை சக்கை போடு போட்டு வருகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, December 14, 2023, 14:44 [IST]
English summary
Maruti suzuki dzire registers 10 per cent growth in november 2023
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+