மாருதி சொல்றத நம்புறதா? வேண்டாமா?.. இந்த காரை இப்பவே பத்து லட்சம் பேரு வாங்கிட்டாங்களா!!
மாருதி சுஸுகி நிறுவனத்தை இந்தியாவில் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்திருப்பதாக நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
மாருதி சுஸுகி நிறுவனத்தின் முன்னணி தயாரிப்புகளில் ஒன்றாக ஈகோ இருக்கின்றது. இது ஓர் வேன் ரக கார் ஆகும். பட்ஜெட் விலையில் குடும்பத்துடன் பயணிக்க ஏதுவான காராக இது விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதையே இந்தியாவில் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

10 லட்சம் யூனிட் விற்பனை
இன்னும் தெளிவாகக் கூற வேண்டும் என்றால் இதுவரை 10 லட்சம் யூனிட் ஈகோ விற்பனையாகி இருக்கின்றது. மாருதி சுஸுகி நிறுவனம் இந்த வாகனத்தை கடந்த 2010 ஆம் ஆண்டிலேயே முதல் முறையாக இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இந்த நிலையிலேயே இவ்வளவு விரைவாக பத்து லட்சம் யூனிட் விற்பனையை ஈகோ எட்டி இருக்கின்றது.
இத்தன விதமான ஆப்ஷனா?
மாருதி சுஸுகி ஈகோவை பள்ள வாகனம், பார்சல் வாகனம் மற்றும் லோடு வாகனம் பல்வேறு பிரிவுகளில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. 5 சீட்டர், 7 சீட்டர், கார்கோ, டூரர் மற்றும் ஆம்புலன்ஸ் என பன்முக ரகத்தில் அது விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதுமாதிரியான பன்முக தேர்வைக் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே 13 க்கும் குறைவான ஆண்டுகளுக்குள் சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்களை அதனால் பெற முடிந்திருக்கின்றது.

டாப் செல்லிங் மினி வேன்
இந்த பிரமாண்ட எண்ணிக்கையின் வாயிலாக இந்தியாவின் டாப் செல்லிங் மினி வேன் என்கிற மகுடத்தை ஈகோ சூடியிருக்கின்றது. இந்தியாவின் ஒட்டுமொத்த மினி வேன் வாகன சந்தையில் 94 சதவீத பங்களிப்பை ஈகோவே வழங்கிக் கொண்டிருக்கின்றது. ஈகோ மினி வேனிற்குக் கிடைத்திருக்கும் இந்த பிரமாண்ட வரவேற்பு ஒட்டுமொத்த இந்திய வாகன சந்தைக்கும் பெருத்த ஆச்சரியத்தில் மூழ்க செய்திருக்கின்றது.
மைலேஜ் மிக மிக அதிகம்
பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி என இரு விதமான ஆப்ஷன்களில் மாருதி சுஸுகி ஈகோ விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. பெட்ரோல் ஆப்ஷனில் ஒரு லிட்டருக்கு 20.20 கிமீ மைலேஜையும், சிஎன்ஜி ஆப்ஷனில் ஒரு கிலோவிற்கு 27.05 கிமீ மைலேஜையும் பெற்றுக் கொள்ள முடியும். ஈகோ காரில் 1.2 லிட்டர் டூயல் ஜெட் பெட்ரோல் மோட்டாரே பயன்படுத்தப்பட்டுள்ளது.

திறன் வெளிப்பாட்டில் கொஞ்சம் வித்தியாசம் இருக்கும்
இந்த மோட்டாரே டிசையர், ஸ்விஃப்ட், பலினோ உள்ளிட்ட முன்னணி கார் மாடல்களில் பயன்படுத்தப்படுகின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த மோட்டார் பெட்ரோலில் இயக்கும்போது 80.76 பிஎஸ் பவரையும், 104.4 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். அதேவேளையில் சிஎன்ஜியில் இயங்கும்போது சற்று குறைவான பவரை வெளியேற்றும். 71.65 பிஎஸ் பவரையும், 95 என்எம் டார்க்கை மட்டுமே வெளியேற்றும்.
வசதிகள் மிக அதிகம்
சாய்ந்துக் கொள்ளும் வசதிக் கொண்ட இருக்கை (முன் பக்கத்தில்), ஏர் ஃபில்டர், மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தும் லைட்டுகள், புதிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், ஸ்டியரிங் வீல், ரோட்டரி கன்ட்ரோல்கள், ஏசி மற்றும் ஹீட்டர் உள்ளிட்ட அம்சங்கள் என எக்கசக்க அம்சங்கள் மாருதி ஈகோ காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

விலையும் குறைவு
இத்துடன், எஞ்ஜின் இம்மொபிலைசர், இலுமினேட்டட் ஹசார்டு ஸ்விட்ச், டூயல் ஏர்பேக்குகள், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், சைல்டு லாக் சிஸ்டம் மற்றும் ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் போன்ற அம்சங்களையும் ஈகோவில் மாருதி சுஸுகி வழங்கி இருக்கின்றது. ரூ. 5.20 லட்சத்திற்கும் குறைவான விலையில் இந்த வாகனம் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இத்தகைய மிகக் குறைவான விலை காரணத்தினாலேயே ஈகோவை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் மிக வேகமாக உயர்ந்த வண்ணம் இருக்கின்றது.


Click it and Unblock the Notifications
