புக் செய்ததும் உடனே எல்லாம் வாங்கி முடியாது!! மாருதி சுஸுகி ஈக்கோ வேனுக்கு அதிகரிக்கும் வெயிட்டிங் பிரீயட்!

மாருதி சுஸுகி ஈக்கோ (Maruti Suzuki Eeco) வேனை முன்பதிவு செய்த பின் வாடிக்கையாளர்கள் காத்திருக்க வேண்டிய கால அளவானது சுமார் 8 வாரங்கள் வரையில் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்தும், மாருதி சுஸுகி ஈக்கோ வேன் குறித்தும் முழுமையாக இனி பார்க்கலாம்.

மாருதி சுஸுகி வாகனங்கள் எப்போதுமே இந்திய சந்தையில் அதிகமாக விற்பனையாகக் கூடியவை என்பது நமக்கு தெரிந்த விஷயமே. அவ்வாறு, சந்தையில் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகக்கூடிய வாகனங்களுள் ஒன்று மாருதி சுஸுகி ஈக்கோ வேன் ஆகும். வேன் மாடலான இது, பயணிகள் கார்கள் பிரிவின் கீழ்தான் வருகிறது. ஈக்கோ வேனை மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த 2022 நவம்பர் மாதத்தில் அப்டேட் செய்தது.

maruti suzuki eeco waiting period

எந்தவொரு வாகனத்திற்கும் அறிமுகமான புதியதில் அதிக வரவேற்புகளும், புக்கிங்குகளும் கிடைப்பது வழக்கமே. ஆனால், அறிமுகமாகி கிட்டத்தட்ட 9 மாதங்கள் ஆன போதிலும், ஈக்கோ வேனுக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது. இதன் காரணமாக, மாருதி சுஸுகி ஈக்கோ வேனை முன்பதிவு செய்த பின், 6 வாரங்களில் இருந்து 8 வாரங்கள் வரையில், அதாவது 2 மாதங்கள் வரையில் கஸ்டமர்ஸ் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது.

இந்த காத்திருப்பு காலம் ஆனது ஈக்கோ வேனை எந்த மாநிலத்தில் முன்பதிவு செய்கிறோம் என்பதை பொறுத்து சிறிது மாறுப்படும். அதுமட்டுமின்றி, வேனின் நிறம், வேரியண்ட், டீலர்ஷிப் ஷோரூம் உள்பட சில காரணிகளை பொறுத்தும் வேறுப்படக்கூடும். ஈக்கோ வேனை பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி தேர்வுகளில் மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்கிறது. இதில் பெட்ரோல் வேரியண்ட்களில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது.

maruti suzuki eeco waiting period

சிஎன்ஜி வேரியண்ட்களிலும் இதே பெட்ரோல் என்ஜின் தான் பொருத்தப்படுகிறது என்றாலும், பெட்ரோல் வேரியண்ட்களில் அதிகப்பட்சமாக 80 பிஎச்பி மற்றும் 104.4 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலையும், சிஎன்ஜி வேரியண்ட்களில் அதிகப்பட்சமாக 71 பிஎச்பி மற்றும் 95 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலையும் இந்த என்ஜின் வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

பெட்ரோல் & சிஎன்ஜி என்ற இரு விதமான வேரியண்ட்களிலும் ஒரே மாதிரியான 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. ஆனால், பெட்ரோல் வேரியண்ட்களில் 19.71kmpl வரையிலான மைலேஜும், சிஎன்ஜி வேரியண்ட்களில் 26.78kmpkg வரையிலான மைலேஜும் கிடைக்கிறது. மாருதி சுஸுகி ஈக்கோ வேனை பேசஞ்சர்ஸ் வெர்சன் & கமர்ஷியல் வெர்சன் என 2 விதமான வெர்சன்களில் பெறலாம்.

maruti suzuki eeco waiting period

தொழிற்நுட்ப அம்சங்களாக, ஈக்கோவின் உட்பக்கத்தில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், காற்று சுத்திகரிப்பான், புதிய ஸ்டேரிங் சக்கரம், மேனுவல் ஏசி-க்கு ரோட்டரி கண்ட்ரோல்கள், சாய்க்கக்கூடிய முன் இருக்கைகள், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், ஒளிரக்கூடிய ஹசார்ட் ஸ்விட்ச் மற்றும் தள்ளக்கூடிய பின் கதவுகள் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

முதன்முதலாக மாருதி சுஸுகி ஈக்கோ வேன் 2010ஆம் ஆண்டில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. கிட்டத்தட்ட 13 வருடங்களுக்கு பிறகு, கடந்த 2023 பிப்ரவரி மாதத்தில் ஈக்கோ வேன்கள் விற்பனையில் 10 இலட்சம் என்ற இமாலய மைல்கல்லை மாருதி சுஸுகி கடந்தது. இந்திய சந்தையில் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் காம்பெக்ட் வேன் ஈக்கோ ஆகும். எந்த அளவிற்கு என்றால், சிறிய அளவிலான வேனை வாங்க விரும்புவோரில் சுமார் 94 சதவீதத்தினர் ஈக்கோவையே முன்பதிவு செய்கின்றனர்.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: தற்சமயம் மாருதி சுஸுகியின் மிகுந்த நம்பிக்கைக்குரிய தயாரிப்புகளுள் ஒன்றாக ஈக்கோ விளங்குகிறது. மாருதி சுஸுகிக்கு இந்தியாவில் 2 உற்பத்தி தொழிற்சாலைகள் உள்ளன. இருப்பினும், ஈக்கோ வேனை புக் செய்பவர்கள் 2 மாதங்கள் வரையில் காத்திருக்க வேண்டிய நிலை இருப்பது சற்று அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இருப்பினும், அருகில் உள்ள டீலர்ஷிப் மையத்தில் ஈக்கோ வேனின் வெயிட்டிங் பிரீயட் குறித்து கேட்டறிவது நல்லது.

More from DriveSpark

Article Published On: Monday, July 31, 2023, 22:01 [IST]
English summary
Maruti suzuki eeco waiting period up to 8 weeks
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X