ஏமாத்தீட்டாங்க! வாடிக்கையாளர்கள் தலையில் மண்ணை அள்ளி போட்ட மாருதி சுஸுகி! இந்தியாவே பொக்குனு போயிருச்சு!

இந்திய சந்தையில் பல்வேறு முன்னணி நிறுவனங்களும் தற்போது போட்டி போட்டு கொண்டு எலெக்ட்ரிக் கார்களை (Electric Cars) விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகின்றன. குறிப்பாக சமீப காலமாக மிகவும் விலை (Price) குறைவான எலெக்ட்ரிக் கார்கள் பலவும் இந்திய சந்தையில் விற்பனைக்கு வர தொடங்கியுள்ளன.

முன்பெல்லாம் 10 லட்ச ரூபாய்க்குள், நடைமுறை பயன்பாட்டிற்கு ஏற்ற எலெக்ட்ரிக் கார்கள் கிடைப்பது சவாலான காரியமாக இருந்து வந்தது. ஆனால் தற்போது நிலைமை மாற தொடங்கியுள்ளது. டாடா டியாகோ இவி (Tata Tiago EV) மற்றும் எம்ஜி கோமெட் இவி (MG Comet EV) போன்ற எலெக்ட்ரிக் கார்களை இதற்கு உதாரணமாக சொல்ல முடியும்.

Maruti Suzuki eVX

இந்த எலெக்ட்ரிக் கார்களின் ஆரம்ப விலை 10 லட்ச ரூபாய்க்குள்தான் உள்ளது. வரும் காலங்களில் டாடா பன்ச் இவி (Tata Punch EV) மற்றும் ஹூண்டாய் எக்ஸ்டர் இவி (Hyundai Exter EV) போன்ற பல்வேறு எலெக்ட்ரிக் கார்கள் 10 லட்ச ரூபாய் என்ற விலைக்குள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நேரத்தில் மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்தின் எதிர்கால திட்டங்கள் பற்றிய எதிர்பார்ப்புகளும் வாடிக்கையாளர்கள் மத்தியில் இருந்து வருகின்றன. தற்போதைய நிலையில் மாருதி சுஸுகிதான், இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனம். ஆனால் இன்னும் ஒரு எலெக்ட்ரிக் காரை கூட மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவில்லை.

Maruti Suzuki eVX Side Design

இந்திய கார் சந்தையில் மாருதி சுஸுகி நிறுவனம் நம்பர்-1 இடத்தில் இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. ஓரளவிற்கு குறைவான விலையில் கார்களை விற்பனை செய்வது இதில் மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. எனவே மாருதி சுஸுகி நிறுவனம் எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்தால், அதன் விலை மிகவும் குறைவாக இருக்கும் என வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஆனால் இந்த எதிர்பார்ப்பில் மாருதி சுஸுகி நிறுவனம் தற்போது மண்ணை அள்ளி போட்டுள்ளது. ஆம், மிகவும் குறைவான விலையில் எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் திட்டம் எதுவும் மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு தற்போதைக்கு இல்லை. மாருதி சுஸுகி நிறுவனத்தின் தலைவர் ஆர்சி பார்கவாதான் (RC Bhargava), இந்த தகவலை கூறியுள்ளார்.

மாருதி சுஸுகி நிறுவனம் தனது எலெக்ட்ரிக் கார் பயணத்தின் ஆரம்ப கட்டத்தில், 10 லட்ச ரூபாய்க்கும் குறைவான விலை கொண்ட எலெக்ட்ரிக் கார் எதையும் அறிமுகம் செய்ய போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார். 10 லட்ச ரூபாய்க்கும் குறைவான விலை கொண்ட எலெக்ட்ரிக் கார்களுக்கான சந்தை நிலையாக இருக்காது என்பது அவரது கருத்து.

நடைமுறை பயன்பாடுகளில் நிலவக்கூடிய பிரச்னைதான் இதற்கு காரணமாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். அதாவது 10 லட்ச ரூபாய்க்குள் கிடைக்க கூடிய எலெக்ட்ரிக் கார்களின் ரேஞ்ச் (Range) மிகவும் குறைவாக இருக்கும். எனவே அவற்றை அடிக்கடி சார்ஜ் செய்து கொண்டே இருக்க வேண்டியதிருக்கும்.

எனவே விலை சற்று அதிகமாக இருந்தாலும் கூட பரவாயில்லை என அதிக ரேஞ்ச் வழங்கும் கார்களைதான் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்வார்கள் என தான் கருதுவதாக ஆர்சி பார்கவா கூறியுள்ளார். எனவே ஆரம்ப கட்டத்தில் மாருதி சுஸுகி நிறுவனத்திடம் இருந்து விலை குறைவான எலெக்ட்ரிக் கார்களை நாம் எதிர்பார்க்க முடியாது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சரி, மாருதி சுஸுகி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் எப்போது விற்பனைக்கு வரும்? என்றாவது சொல்லுங்கள் என நீங்கள் கேட்பது புரிகிறது. அனேகமாக வரும் 2025ம் ஆண்டில், மாருதி சுஸுகி நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த எலெக்ட்ரிக் கார், மிட்-சைஸ் எஸ்யூவி செக்மெண்ட்டை சேர்ந்ததாக இருக்கலாம். இதன் ஆரம்ப விலை 20 லட்ச ரூபாய் என்ற அளவில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதை தொடர்ந்து 2031ம் ஆண்டிற்குள் ஒட்டுமொத்தமாக 6 எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு மாருதி சுஸுகி நிறுவனம் திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Article Published On: Sunday, August 27, 2023, 21:33 [IST]
English summary
Maruti suzuki electric car price new details out
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+