மைலேஜ் மழை பொழியும் மாருதியின் புதிய கார்! 2 குடும்பம் ஒன்னா போக முடியும்! இன்னோவா மார்கெட்டை சரிக்க போகுது!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள கார்களில் ஒன்று டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் (Toyota Innova Hycross). இதன் அடிப்படையில் புதிய எம்பி (MPV) ரக கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்ய மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம் தயாராகி வருகிறது.

மாருதி சுஸுகி மற்றும் டொயோட்டா ஆகிய 2 நிறுவனங்களுக்கும் இடையே கூட்டணி இருப்பதால், கார்கள் பரிமாறி கொள்ளப்படுகின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை மாருதி சுஸுகி நிறுவனத்தின் இந்த புதிய கார் வரும் ஜூலை மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

Toyota Innova Hycross Front

மாருதி சுஸுகி எங்கேஜ் (Maruti Suzuki Engage) என்ற பெயரில் இந்த கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய சந்தையில் ஒரு ஆண்டுக்கு 9,000-10,000 எங்கேஜ் கார்களை விற்பனை செய்வதற்கு மாருதி சுஸுகி நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது விலை உயர்ந்த பிரீமியம் காராக இருக்கும் என்பதால், இந்த அளவிற்கான இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மாருதி சுஸுகி எங்கேஜ் காரில் ஒரே ஒரு இன்ஜின் (Engine) ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது 2.0 லிட்டர் பெட்ரோல் ஹைப்ரிட் இன்ஜின் ஆகும். இந்த இன்ஜினுடன், இ-சிவிடி கியர் பாக்ஸ் ஆப்ஷன் கொடுக்கப்படவுள்ளது.

Toyota Innova Hycross Side

டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரில் இந்த இன்ஜின் ஒரு லிட்டருக்கு 23.24 கிலோ மீட்டர் மைலேஜ் (Mileage) வழங்குகிறது. இது அராய் அமைப்பு சான்று வழங்கிய மைலேஜ் ஆகும். எனவே மாருதி சுஸுகி எங்கேஜ் காரும் இதே அளவிற்கான மைலேஜை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிறைய பேர் பயணிக்க கூடிய ஒரு பெரிய கார், இவ்வளவு மைலேஜ் வழங்குவது சிறப்பான விஷயம்தான்.

அதே நேரத்தில் மாருதி சுஸுகி எங்கேஜ் காரில், அடாஸ், பெரிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 360 டிகிரி கேமரா மற்றும் ட்யூயல் ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல் உள்பட பல்வேறு வசதிகள் (Features) வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதவிர டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரிடம் இருந்து வேறுபடுத்தி காட்டும் வகையில், மாருதி சுஸுகி எங்கேஜ் காரின் டிசைனில் ஒரு சில மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரின் ஆரம்ப விலை (Price) 18.55 லட்ச ரூபாயாக இருக்கிறது. அதே சமயம் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 29.72 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். கிட்டத்தட்ட இதே அளவிலான விலையில்தான் மாருதி சுஸுகி எங்கேஜ் காரும் விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது.

எனவே மாருதி சுஸுகி நிறுவனத்தின் மிகவும் விலை உயர்ந்த கார் என்ற பெருமையை எங்கேஜ் பெறவுள்ளது. இங்கே குறிப்பிட வேண்டிய மற்றொரு விஷயமும் உள்ளது. எங்கேஜ் என்ற பெயருக்கு சமீபத்தில்தான் மாருதி சுஸுகி நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. ஒருவேளை இந்த பெயரை சூட்டுவதில் ஏதேனும் பிரச்னைகள் என்றால், வேறு பெயரில் இந்த கார் விற்பனைக்கு வரும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி சுஸுகி மற்றும் டொயோட்டா ஆகிய 2 நிறுவனங்களும் இன்னும் பல்வேறு கார்களை தங்களுக்குள் பரிமாறி கொள்ளவுள்ளன. எனவே எதிர்காலத்தில் இந்த கூட்டணியிடம் இருந்து இந்திய சந்தையில் இன்னும் பல்வேறு கார்களை நாம் உறுதியாக விற்பனைக்கு எதிர்பார்க்க முடியும்.

More from DriveSpark

Article Published On: Monday, May 1, 2023, 10:30 [IST]
English summary
Maruti suzuki engage annual sales target engine mileage features
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+