7, 8 பேர் போற மாருதி கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! டொயோட்டா இன்னோவாவை இனி யாரும் திரும்பி கூட பாக்க மாட்டாங்க!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள கார்களில் ஒன்று டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் (Toyota Innova Hycross). இதன் ரீ-பேட்ஜ் (Re-badge) செய்யப்பட்ட வெர்ஷனை, மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. டொயோட்டா-சுஸுகி இடையே கூட்டணி இருப்பதால், இந்த 2 நிறுவனங்களுக்கும் இடையே கார்கள் பரிமாறி கொள்ளப்படுகின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரின் மாருதி சுஸுகி வெர்ஷன் வரும் ஜூலை மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரீமியம் மாடல் என்பதால், மாருதி சுஸுகி நிறுவனத்தின் நெக்ஸா (Nexa) ஷோரூம்கள் வாயிலாக, இந்த கார் விற்பனை செய்யப்படவுள்ளது.

டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரின் மாருதி சுஸுகி வெர்ஷனில், 2.0 லிட்டர் ஸ்ட்ராங் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படவுள்ளது. டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரில் இந்த இன்ஜின் ஒரு லிட்டருக்கு 21.1 கிலோ மீட்டர் மைலேஜ் (Mileage) வழங்குகிறது. மாருதி சுஸுகி வெர்ஷனிலும் இதே அளவிலான மைலேஜை நாம் எதிர்பார்க்கலாம்.
அதேபோல் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரில் வழங்கப்பட்டுள்ள பல்வேறு வசதிகள் அப்படியே மாருதி சுஸுகி வெர்ஷனிலும் வழங்கப்படவுள்ளன. ஆனால் டிசைனில் மாற்றங்கள் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி மாருதி சுஸுகி வெர்ஷனில், புதிய க்ரில் மற்றும் புதிய அலாய் வீல்கள் ஆகியவை வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இந்த டிசைன் மாற்றங்கள், டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரிடம் இருந்து, மாருதி சுஸுகி வெர்ஷனை வேறுபடுத்தி காட்ட உதவும். இந்த சூழலில் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரின் மாருதி சுஸுகி வெர்ஷனின் பெயர் என்னவாக இருக்கும்? என்ற தகவல் தற்போது நமக்கு கிடைத்துள்ளது.
மாருதி சுஸுகி எங்கேஜ் (Maruti Suzuki Engage) என்ற பெயரை பதிவு செய்வதற்கு மாருதி சுஸுகி நிறுவனம் தற்போது விண்ணப்பித்துள்ளது. எனவே டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரின் ரீ-பேட்ஜ் செய்யப்பட்ட மாருதி சுஸுகி வெர்ஷனுக்கு, எங்கேஜ் என்ற பெயர் சூட்டப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் எங்கேஜ் என்ற பெயருக்கு மாருதி சுஸுகி நிறுவனம் இன்னும் அனுமதியை பெறவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருவேளை இந்த பெயருக்கு எதிர்ப்புகள் எழுந்தாலோ அல்லது அனுமதி மறுக்கப்பட்டாலோ, டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரின் ரீ-பேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷனுக்கு மாருதி சுஸுகி நிறுவனம் வேறு ஒரு பெயரை பரிசீலனை செய்யலாம்.
டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் கார் தற்போதைய நிலையில் 7 சீட்டர் மற்றும் 8 சீட்டர் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனவே பெரிய குடும்பங்களுக்கு இது ஏற்றது. இதன் காரணமாக அதிக உறுப்பினர்களை கொண்ட குடும்பத்தினர் மத்தியில், டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரின் மாருதி சுஸுகி வெர்ஷன் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் கார் அதிகம் பேர் செல்ல கூடியதாக இருந்தாலும், ஸ்ட்ராங் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டிருப்பதால், சிறப்பான மைலேஜை வழங்கும். அத்துடன் இதில் அதிநவீன வசதிகளுக்கும் பஞ்சமில்லை. அப்படிப்பட்ட ஒரு காரை மாருதி சுஸுகி நிறுவனம் ரீ-பேட்ஜ் செய்து விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது சிறப்பான ஒரு விஷயம்தான்.


Click it and Unblock the Notifications








