மாருதியின் புது கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! டொயோட்டா இன்னோவா சாம்ராஜ்யத்துக்கு முடிவு கட்ட போகுது!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று மாருதி சுஸுகி எங்கேஜ் (Maruti Suzuki Engage). இது இந்தியாவில் ஏற்கனவே மிகவும் பிரபலமாக இருந்து வரும் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் (Toyota Innova HyCross) காரின் ரீ-பேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும்.

சுஸுகி மற்றும் டொயோட்டா ஆகிய 2 நிறுவனங்களும் கூட்டணியில் இருப்பதால், கார்களை பரிமாறி கொள்கின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இந்திய சந்தையில் வரும் ஜூலை 5ம் தேதி, மாருதி சுஸுகி எங்கேஜ் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

Toyota Innova HyCross

மாருதி சுஸுகி எங்கேஜ் காரின் உற்பத்தி (Production) பணிகள் தொடங்கப்பட்டு விட்டன என்பதுதான் அந்த தகவல். கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருக்கு அருகே உள்ள பிடதியில் டொயோட்டா நிறுவனத்தின் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்குதான் மாருதி சுஸுகி எங்கேஜ் கார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரிடம் இருந்து வேறுபடுத்தி காட்டும் வகையில், மாருதி சுஸுகி எங்கேஜ் காரின் வெளிப்புற டிசைனில் ஒரு சில மாற்றங்கள் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி முன் பகுதியில் முற்றிலும் புதிய க்ரில் அமைப்பு வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக இருக்கின்றன.

Toyota Innova HyCross Back

இதன் மைய பகுதியில் சுஸுகி லோகோ இடம்பெற்றிருக்கும். முன் பகுதியை பொறுத்தவரையில் மாருதி சுஸுகி டிஎன்ஏ-வை நாம் எதிர்பார்க்கலாம். ஆனால் பின் பகுதியை பொறுத்தவரையில், லோகோ மற்றும் காரின் பெயர் ஆகியவற்றை தவிர, வேறு மாற்றங்கள் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவுதான்.

செயல்திறனை பொறுத்தவரையில், டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரில் வழங்கப்பட்டுள்ள அதே 2.0 லிட்டர் ஸ்ட்ராங் ஹைப்ரிட் மற்றும் 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் (Engine)ஆப்ஷன்கள்தான், மாருதி சுஸுகி எங்கேஜ் காரிலும் கொடுக்கப்படவுள்ளன. இதில் ஸ்ட்ராங் ஹைப்ரிட் இன்ஜின், டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரில், ஒரு லிட்டருக்கு 23.24 கிலோ மீட்டர் மைலேஜை (Mileage) வழங்குகிறது.

இது டொயோட்டா நிறுவனம் தெரிவிக்கும் மைலேஜ் ஆகும். இதே அளவிலான மைலேஜ்தான், மாருதி சுஸுகி எங்கேஜ் காரிலும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்ஜின் ஆப்ஷன்களை போல், மாருதி சுஸுகி எங்கேஜ் காரின் உட்புறத்திலும் எந்தவிதமான மாற்றங்களும் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை. டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரின் வசதிகள் (Features) அப்படியே வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்படி முன் பகுதியில் வென்டிலேட்டட் இருக்கைகள், ஓட்டுனர் இருக்கைக்கு மெமரி வசதி, பனரோமிக் சன்ரூஃப், அடாஸ் தொழில்நுட்பம் மற்றும் பெரிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் என ஏராளமான வசதிகளை, மாருதி சுஸுகி எங்கேஜ் கார் பெற்றிருக்கலாம். இதுபோன்ற காரணங்களால்தான், மாருதி சுஸுகி எங்கேஜ் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி சுஸுகி நிறுவனத்தின் நெக்ஸா ஷோரூம்கள் வாயிலாகதான் எங்கேஜ் கார்கள் விற்பனை செய்யப்படவுள்ளன. டொயோட்டா நிறுவனம் ஒரு மாதத்திற்கு வெறும் 50 எங்கேஜ் கார்களை மட்டுமே மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு வழங்கவுள்ளதாக கூறப்படுகிறது. எனவே மாருதி சுஸுகி எங்கேஜ் காருக்கு நிச்சயமாக அதிக டிமாண்ட் இருக்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

Article Published On: Monday, June 12, 2023, 15:51 [IST]
English summary
Maruti suzuki engage production starts engine mileage features
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+