27 கிமீ மைலேஜ் தரும் 7 சீட்டர் காரின் விலை இவ்ளோதானா! மாருதி ஷோரூம்ல மக்கள் ராப்பகலா தவம் கெடக்கறாங்க!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga). இது எம்பிவி (MPV) ரகத்தை சேர்ந்த 7 சீட்டர் கார் ஆகும். பெட்ரோல் (Petrol) மற்றும் சிஎன்ஜி (CNG) இன்ஜின் ஆப்ஷன்களில், மாருதி சுஸுகி எர்டிகா விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதன் பெட்ரோல் வேரியண்ட்களில் (Variants) பொருத்தப்பட்டிருப்பது, 1.5 லிட்டர் இன்ஜின் ஆகும். அதிகபட்சமாக 102 பிஹெச்பி பவர் மற்றும் 137 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ள இந்த இன்ஜின் உடன், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் (Gear Box) ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.

மறுபக்கம் இதன் சிஎன்ஜி வேரியண்ட்களிலும் இதே இன்ஜின்தான் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் சிஎன்ஜி மூலமாக இயங்கும்போது இந்த இன்ஜினின் பவர் அவுட்புட் அதிகபட்சமாக 87 பிஹெச்பி மற்றும் 121 என்எம் ஆக மட்டுமே இருக்கும். எனினும் சிஎன்ஜி மூலமாக இயங்கும்போது சிறப்பான மைலேஜ் (Mileage) கிடைக்கும்.
மாருதி சுஸுகி எர்டிகா காரின் சிஎன்ஜி வேரியண்ட்கள் ஒரு கிலோவிற்கு 26.11 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பெட்ரோல் வேரியண்ட்களை போல், சிஎன்ஜி வேரியண்ட்களில் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன் இல்லை. 5 ஸ்பீடு மேனுவல் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படுகிறது.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி எர்டிகா காரின் ஆரம்ப விலை (Price) வெறும் 8.64 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 13.08 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இவை எக்ஸ் ஷோரூம் விலை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
ஓரளவிற்கு குறைவான விலையில் கிடைப்பதாலும், அதிக மைலேஜ் வழங்குவதாலும், அதிகம் பேர் பயணம் செய்ய முடியும் என்பதாலும் மாருதி சுஸுகி எர்டிகா காருக்கான டிமாண்ட் மிகப்பெரிய அளவில் உள்ளது. தற்போது வெளியாகியுள்ள ஒரு தகவலின் மூலம், மாருதி சுஸுகி எர்டிகா காருக்கான டிமாண்ட் உறுதி செய்யப்பட்டுள்ளது.
நடப்பு 2023ம் ஆண்டு டிசம்பர் மாத நிலவரப்படி, மாருதி சுஸுகி எர்டிகா காரை டெலிவரி பெறுவதற்காக 67 ஆயிரம் பேர் காத்து கொண்டிருப்பதாக தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே வரும் காலங்களில் இந்திய சாலைகளில் இன்னும் நிறைய மாருதி சுஸுகி எர்டிகா கார்களை நம்மால் பார்க்க முடியும்.
இதுதவிர பெட்ரோல் வேரியண்ட்களை காட்டிலும், சிஎன்ஜி வேரியண்ட்களுக்குதான் டிமாண்ட் மிக அதிக அளவில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிஎன்ஜி வேரியண்ட்கள் அதிக மைலேஜ் வழங்குவதுதான் இதற்கு முக்கியமான காரணமாக கருதப்படுகிறது. இந்திய சந்தையில் கியா கேரன்ஸ் (Kia Carens) உள்ளிட்ட கார்களுடன், மாருதி சுஸுகி எர்டிகா போட்டியிட்டு வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி எர்டிகா காரின் டெலிவரிக்காக 67 ஆயிரம் பேர் காத்து கொண்டுள்ளனர் என்பது உண்மையிலேயே ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. மாருதி சுஸுகி எர்டிகா காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள டொயோட்டா ரூமியான் (Toyota Rumion) காருக்கும், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








