முனிவர்களை போல தவமிருந்தாதான் மாருதியின் இந்த கார்கள் கைகளுக்கு வரும் போல! லட்ச கணக்குல காத்திருக்காங்க!

ஒரு பக்கம் அளவு கடந்த புக்கிங், மற்றொரு பக்கம் விநியோக சங்கிலியில் பாதிப்பு ஆகிய இரண்டால் மாருதி சுஸுகி (Maruti Suzuki) மிகப் பெரிய சிக்கலைச் சந்திக்க தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியர்களின் பிரியமான எம்பிவி ரக கார் மாடலாக எக்ஸ்எல் 6 (XL6) மற்றும் எர்டிகா (Ertiga) ஆகியவை இருக்கின்றன. இந்த இரண்டுமே மாருதி சுஸுகி (Maruti Suzuki)யின் முக்கிய தயாரிப்புகள் ஆகும். மேலும், இந்த இரண்டு கார்களுக்கும் இந்தியாவில் நல்ல டிமாண்ட் நிலவி வருகின்றது.

Maruti suzuki xl6 front view

இதன் காரணமாக தொடர்ச்சியாக இரு கார் மாடல்களுக்கும் புக்கிங் குவிந்த வண்ணமே இருக்கின்றது. அதேவேளையில், இந்த இரு கார் மாடல்களையும் புக்கிங் செய்தவர்களுக்கு காரை டெலிவரி கொடுக்க முடியாமல் மாருதி சுஸுகி நிறுவனம் திணறிக் கொண்டிருக்கின்றது. இதற்கு கார் கட்டுமான பொருட்களின் விநியோக சங்கிலியில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பே முக்கிய காரணம் ஆகும்.

இதன் விளைவாகவே, எர்டிகா மற்றும் எக்ஸ்எல் 6 இவ்விரு கார்களுக்கும் 1 லட்சத்திற்கும் அதிகமான ஆர்டர்கள் பெண்டிங் ஆகியிருக்கின்றது. இது ஒட்டுமொத்த இந்தியாவையும் ஆச்சரியத்தில் மூழ்க செய்திருக்கின்றது. கடந்த மேத மாத நிலவரப்படி மாருதி சுஸுகி நிறுவனம் 10,528 யூனிட்டுகள் எர்டிகாவையும், 3,577 யூனிட்டுகள் எக்ஸ்எல்6-யும் விற்பனைச் செய்திருக்கின்றது.

Maruti suzuki xl6 back view

இந்த எண்கள் மிக சூப்பரான விற்பனை எண்கள் ஆகும். இந்த அளவிற்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்ற சூழலிலேயே மாருதி சுஸுகி விநியோக சங்கிலி பாதிப்பில் சிக்கி இருக்கின்றது. ஒட்டுமொத்த பெண்டிங் ஆர்டர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 21 ஆயிரத்திற்கும் அதிகம் ஆகும்.

இதில் எர்டிகாவிற்கு மட்டும் 68 ஆயிரம் பெண்டிங் ஆர்டர்கள் உள்ளன. அதுவும் சிஎன்ஜி எர்டிகாவிற்கே நிறைய ஆர்டர்கள் நிலுவையில் உள்ளன. ஆகையால், சிஎன்ஜி எர்டிகாவை புக் செய்த வாடிக்கையாளர்கள் அதனைக் கைகளில் பெற முனிவர்களைப் போல தவமிருக்க வேண்டும் என்கிற சூழல் உருவாகி இருக்கின்றது.

Maruti suzuki ertiga front view

தோராயமாக 10 மாதம் வரை காத்திருப்பு காலம் நிலவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரத்தில் மாருதி சுஸுகி எக்ஸ்எல் 6-க்கு 4-5 மாதங்கள் வரை காத்திருப்பு காலம் நிலவுகின்றது. இந்தியாவில் எம்பிவி கார்கள் பிரிவில் பெரியளவில் போட்டியில்லாத சூழலே மாருதி சுஸுகிக்கு உள்ளது.

ஏனெனில், இந்த பிரிவில் இருந்து டாடா மோட்டார் மற்றும் மஹிந்திரா போன்ற முன்னணி நிறுவனங்கள் விலகி நிற்கின்றன. இதேபோல், ரெனால்ட் நிறுவனத்தின் மலிவு விலை எம்பிவி ரக கார் ட்ரைபரும் தற்போது விற்பனையில் இல்லாத நிலை தென்படுகின்றது. இதுமாதிரியான சூழலால் ஏற்கனவே விற்பனையில் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருந்த எர்டிகா மற்றும் எக்ஸ்எல்6 ஆகியவை தற்போது இன்னும் பலமடங்கு அதிக உத்வேகத்துடன் விற்பனையில் வெற்றி நடைப்போட்டுக் கொண்டிருக்கின்றன.

Maruti suzuki ertiga rear

இத்தகைய அமோக வரவேற்பினாலேயே தற்போது அதிக புக்கிங்கை அவை பெற்றிருக்கின்றன. இந்த சூழலும், விநியோக சங்கிலி பாதிப்பும் இணைந்தே தற்போது ஒரு லட்சம் ஆர்டர்களை பெண்டிங் ஆர்டர்களாக மாற்ற செய்திருக்கின்றன. விரைவில் இந்த நிலையை மாற்றி மாருதி சுஸுகி மீண்டும் கம்பேக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எஸ்யூவி ரக கார்களைப் போலவே எம்பிவி ரக கார்களுக்கும் கணிசமான அளவு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த பிரிவில் சற்று விலை குறைவாகவும், அதிக வசதிகளைக் கொண்ட வாகனங்களையும் மாருதி சுஸுகியே விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. ஆகையால், வரும் காலங்களிலும் இந்த கார்களுக்கான டிமாண்ட் அதிகரிக்கவே செய்யும் என எங்களால் யூகிக்க முடிகின்றது.

Article Published On: Friday, June 16, 2023, 15:15 [IST]
English summary
Maruti suzuki ertiga and xl6 have more than 1 lakh pending orders
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X