7 பேர் போலாம்! 27 கிமீ மைலேஜ் தரும் மாருதி காரின் விலை இவ்ளோதானா! அதான் வாங்கறதுக்கு மக்கள் வரிசைல நிக்கறாங்க!

இந்திய சந்தையில் நடப்பு 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட 7 சீட்டர் கார்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) கார் முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் 9,299 மாருதி சுஸுகி எர்டிகா கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன.

இந்த எண்ணிக்கையானது நடப்பு 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13,528 ஆக உயர்ந்துள்ளது. இது 45 சதவீத வளர்ச்சியாகும். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி எர்டிகா காரின் ஆரம்ப விலை (Price) 8.64 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 13.08 லட்ச ரூபாயாக இருக்கிறது.

Maruti Suzuki Ertiga

இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். பெட்ரோல் (Petrol) இன்ஜின் ஆப்ஷனுடன் மட்டுமல்லாது, சிஎன்ஜி (CNG) இன்ஜின் ஆப்ஷனிலும் விற்பனைக்கு கிடைப்பது மாருதி சுஸுகி எர்டிகா காரின் மிகப்பெரிய பலம் ஆகும். இதில் சிஎன்ஜி இன்ஜின் ஒரு கிலோவிற்கு 26.11 கிலோ மீட்டர் மைலேஜ் (Mileage) வழங்கும் என மாருதி சுஸுகி நிறுவனம் தெரிவித்துள்ளது.

7 சீட்டர் காராக இருப்பதுடன், அதிக மைலேஜையும் வழங்குவதால், மாருதி சுஸுகி எர்டிகா காரின் விற்பனை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. அதிக மைலேஜ் கிடைக்க வேண்டும் மற்றும் அதிகம் பேர் பயணம் செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பவர்களுக்கு, மாருதி சுஸுகி எர்டிகா மிகச்சிறந்த ஆப்ஷனாக இருக்கும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.

Toyota Rumion

மாருதி சுஸுகி எர்டிகா காரின் அடிப்படையில் தற்போது டொயோட்டா ரூமியான் (Toyota Rumion) என்ற புதிய கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில்தான் டொயோட்டா ரூமியான் கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

மாருதி சுஸுகி எர்டிகா காரை போலவே, டொயோட்டா ரூமியான் காரிலும் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. ஆனால் மாருதி சுஸுகி எர்டிகா காரை விட, டொயோட்டா ரூமியான் காரின் விலை அதிகம் என்பது இங்கே கண்டிப்பாக குறிப்பிட வேண்டிய விஷயம் ஆகும்.

தற்போதைய நிலையில் டொயோட்டா ரூமியான் காரின் ஆரம்ப விலை 10.29 லட்ச ரூபாயாக இருக்கிறது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 13.68 லட்ச ரூபாயாக உள்ளது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். டொயோட்டா ரூமியான் காரின் டெலிவரி தொடங்கப்பட்டு விட்டாலும் கூட, நடப்பு 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப்-10, 7 சீட்டர் கார்களின் பட்டியலில் டொயோட்டா ரூமியான் இல்லை.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி எர்டிகா மற்றும் டொயோட்டா ரூமியான் ஆகிய 2 கார்களும் கிட்டத்தட்ட ஒன்றுதான். ஆனால் டொயோட்டா ரூமியான் காரின் வருகை, மாருதி சுஸுகி எர்டிகா காரின் விற்பனையில் பெரிய அளவிலான தாக்கம் எதையும் ஏற்படுத்தவில்லை. டொயோட்டா ரூமியான் காரின் விலை சற்று அதிகமாக இருப்பது இதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, October 14, 2023, 19:20 [IST]
English summary
Maruti suzuki ertiga registers 45 per cent growth in september 2023 all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+