மாருதியின் முதல் எலெக்ட்ரிக் கார் விலை இவ்ளோதானா! டாடாவுக்கு இப்பவே தொடை நடுங்க ஆரம்பிச்சிருக்கும்!

இந்தியாவில் பல்வேறு முன்னணி நிறுவனங்களும் எலெக்ட்ரிக் கார் (Electric Car) ரேஸில் ஒன்றை ஒன்று முந்தி சென்று கொண்டுள்ளன. தற்போதைய நிலையில் டாடா (Tata), எம்ஜி (MG), ஹூண்டாய் (Hyundai) மற்றும் கியா (Kia) உள்பட பல்வேறு நிறுவனங்கள் இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வருகின்றன.

இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனமும் கூடிய விரைவில், எலெக்ட்ரிக் கார் ரேஸில் நுழையவுள்ளது. ஆம், மாருதி சுஸுகி இவிஎக்ஸ் (Maruti Suzuki eVX) எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

Maruti Suzuki eVX

இதுதான் இந்தியாவில் மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ள முதல் எலெக்ட்ரிக் கார் ஆகும். மாருதி சுஸுகி இவிஎக்ஸ் எலெக்ட்ரிக் கார் இந்திய சாலைகளில் தற்போது தீவிரமாக சோதனை செய்யப்பட்டு வருகிறது. எஸ்யூவி (SUV) ரகத்தை சேர்ந்த இந்த கார், வெகு விரைவில் விற்பனைக்கு வரப்போகிறது என்பதையே இது உணர்த்துகிறது.

அதற்கு முன்பாக மாருதி சுஸுகி இவிஎக்ஸ் எலெக்ட்ரிக் கார் குறித்த பல்வேறு புதிய தகவல்கள் (New Details) தற்போது வெளியாகியுள்ளன. இதன்படி மாருதி சுஸுகி இவிஎக்ஸ் எலெக்ட்ரிக் காரில், இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட்ட பேட்டரி (Battery) மற்றும் மோட்டார்கள் (Motors) பயன்படுத்தப்படவுள்ளன.

Maruti Suzuki eVX Side Design

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டால், செலவு அதிகம் ஆகும். இதன் காரணமாக அதிக விலை (Price) நிர்ணயம் செய்ய வேண்டிய சூழல் உருவாகும். இதை தவிர்ப்பதற்காகவே, மாருதி சுஸுகி நிறுவனம் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட்ட பேட்டரி மற்றும் மோட்டார்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.

இதன் மூலம் மாருதி சுஸுகி இவிஎக்ஸ் எலெக்ட்ரிக் காரை குறைவான விலையில் விற்பனை செய்ய முடியும். டாடா நெக்ஸான் இவி (Tata Nexon EV) எலெக்ட்ரிக் கார்தான், மாருதி சுஸுகி இவிஎக்ஸ் எலெக்ட்ரிக் காரின் மிக முக்கியமான போட்டி மாடல் ஆகும். தற்போதைய நிலையில் டாடா நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 14.74 லட்ச ரூபாயாக உள்ளது.

அதே நேரத்தில் இந்த எலெக்ட்ரிக் காரின் டாப் வேரியண்ட்டின் விலை 19.94 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ் ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். கிட்டத்தட்ட இதே விலையில்தான் மாருதி சுஸுகி இவிஎக்ஸ் எலெக்ட்ரிக் காரும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதாவது மாருதி சுஸுகி இவிஎக்ஸ் எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை சுமார் 15 லட்ச ரூபாய் என்ற அளவிலும், டாப் வேரியண்ட்டின் விலை சுமார் 20 லட்ச ரூபாய் என்ற அளவிலும் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த தகவல் மாருதி சுஸுகி இவிஎக்ஸ் எலெக்ட்ரிக் கார் மீதான ஆவலை வாடிக்கையாளர்கள் மத்தியில் மேலும் அதிகரித்துள்ளது.

ஏனெனில் முன்பு மாருதி சுஸுகி இவிஎக்ஸ் எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலையே சுமார் 20 லட்ச ரூபாய் என்ற அளவில் இருக்கும் என கூறப்பட்டது. அதே நேரத்தில் டாப் வேரியண்ட்டின் விலை சுமார் 25 லட்ச ரூபாய் என்ற அளவில் இருக்கலாம் என தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனால் தற்போது வெளியாகியுள்ள தகவல்கள், மாருதி சுஸுகி இவிஎக்ஸ் குறைவான விலையில் வரப்போவதை உறுதி செய்வது போல் உள்ளன.

மாருதி சுஸுகி இவிஎக்ஸ் எலெக்ட்ரிக் காரில், 48 kWh பேட்டரி தொகுப்பு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இதனை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 400 கிலோ மீட்டர் வரை பயணிக்க முடியும் என தெரிகிறது. இது ரியல் வேர்ல்டு ரேஞ்ச் (Real-world Range) ஆகும். எனவே மாருதி சுஸுகி இவிஎக்ஸ் எலெக்ட்ரிக் கார், தொலை தூர பயணங்களுக்கும் ஏற்றதாக இருக்கும்.

மாருதி சுஸுகி இவிஎக்ஸ் எலெக்ட்ரிக் காரை பற்றி வெளியாகியுள்ள மற்றொரு தகவல் என்னவென்றால், இந்த எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படவுள்ளது என்பதுதான். வரும் 2024ம் ஆண்டின் இறுதியில், மாருதி சுஸுகி இவிஎக்ஸ் எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படலாம்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டாடா நெக்ஸான் இவி மட்டுமல்லாது, எம்ஜி இஸட்எஸ் இவி (MG ZS EV) மற்றும் ஹூண்டாய் க்ரெட்டா இவி (Hyundai Creta EV) ஆகிய எலெக்ட்ரிக் கார்களுடனும், மாருதி சுஸுகி இவிஎக்ஸ் போட்டியிடும். இதில் எம்ஜி இஸட்எஸ் இவி தற்போது இந்தியாவில் விற்பனையில் உள்ளது. மறுபக்கம் ஹூண்டாய் க்ரெட்டா இவி எலெக்ட்ரிக் காரானது வரும் 2024ம் ஆண்டின் இறுதியில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, November 23, 2023, 17:13 [IST]
English summary
Maruti suzuki evx price battery range fresh details out
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+