மாருதி இந்த காரை சோதனை செய்ய தொடங்கிருச்சா!.. ஒத்த படத்தை பார்த்து நடுங்கி கொண்டிருக்கும் போட்டி நிறுவனங்கள்!
மாருதி சுஸுகி நடப்பாண்டு தொடக்கத்தில், அதாவது 2023 ஜனவரி மாதத்தில் இந்தியாவில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ நிகழ்ச்சியில் இ-விஎக்ஸ் எனும் தனது எலெக்ட்ரிக் கான்செப்ட் கார் மாடலை காட்சிப்படுத்தியது. இந்த காரை மாருதி சுஸுகி நிறுவனம் இந்த உலகிற்கு காட்சிப்படுத்தியது அதுவே முதல் முறையாகும்.
இந்த காரையே நிறுவனம் தற்போது சோதனையோட்டம் செய்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை உறுதிப்படுத்தும் விதமாக சோதனையோட்டம் செய்யப்பட்ட இ-விஎக்ஸ் எலெக்ட்ரிக் காரின் புகைப்படங்கள் இணையத்தின் வாயிலாக வெளியாகி உள்ளன. இந்த படத்தை ஆட்டோகேலரியா எனும் தளம் வெளியிட்டு உள்ளது.

இந்த படமே போட்டி நிறுவனங்களின் கலக்கத்திற்கு காரணமாக அமைந்திருக்கின்றது. ஏற்கனவே மாருதி சுஸுகி நிறுவனம் வேகன்ஆர் கார் அடிப்படையிலான மின்சார காரை சோதனையோட்டத்தில் ஈடுபடுத்தி வந்தது குறிப்பிடத்தகுந்தது. இந்த மாதிரியான சூழலிலேயே அதன் வரிசையில் தற்போது இவிஎக்ஸ் எலெக்ட்ரிக் காரையும் மாருதி சுஸுகி இணைத்திருக்கின்றது.
ஆகையால், இந்த இரண்டில் எந்த எலெக்ட்ரிக் கார் முதலில் விற்பனைக்கு வரும் என்பது தெளிவாக தெரியவில்லை. ஆனால், இவிஎக்ஸ் இருக்கும் அழகையும், அதில் வழங்கப்பட்டு இருக்கும் சிறப்பம்சங்களையும் வைத்து பார்க்கையில் இதுவே முதலில் இந்த உலகில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதை உறுதிப்படுத்தும் விதமாகவே நிறுவனமும் அதனை தீவிர சோதனையோட்டத்திற்கு உட்படுத்தத் தொடங்கி இருக்கின்றது. முழுவதுமாக மறைக்கப்பட்ட நிலையிலேயே இந்த கார் சோதனையோட்டம் செய்யப்பட்டு இருக்கின்றது. இந்த சோதனையோட்டம் இந்தியாவில் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. ஐரோப்பிய நாடுகளிலேயே செய்யப்பட்டு இருக்கின்றது. போலந்தில் உள்ள க்ரகோவின் முக்கிய சாலைகளிலேயே இவிஎக்ஸ் தீவிரமான பலபரீட்சையில் ஈடுபட்டு வருகின்றது.
இந்தியாவில் காட்சிப்படுத்தப்பட்ட பின்னர் சாலையில் இந்த கார் தரிசனம் வழங்குவது இதுவே முதல் முறையாகும். இப்போது கிடைத்திருக்கும் தகவல்களின்படி இந்த மாருதி எலெக்ட்ரிக் கார் எப்படியும் 2025 ஆம் ஆண்டிற்குள் விற்பனைக்கு வந்துவிடும் என தெரிகின்றது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வமான வார்த்தைகள் நிறுவனம் தரப்பில் இருந்து கிடைக்கவில்லை.

விரைவில் பல்வேறு முக்கிய தகவல்கள் இவிஎக்ஸ் எலெக்ட்ரிக் கார்குறித்து வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியாவில் காட்சிப்படுத்தப்பட்ட இவிஎக்ஸ் எலெக்ட்ரிக் காருக்கும், தற்போது தரிசனம் வழங்கி இருக்கும் இவிஎக்ஸ் எலெக்ட்ரிக் காருக்கும் இடையில் கணிசமான அளவு வித்தியாசங்கள் உள்ளன. குறிப்பாக, அலாய் வீல்கள் மாற்றப்பட்டு இருக்கின்றன.
இதுதவிர லேசாக தோற்றத்திலும் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதை எங்களால் உணர முடிகின்றது. ஆனால், முழுமையாக அந்த கார் ஸ்டிக்கர்களால் மறைக்கப்பட்டு இருப்பதால் என்ன மாதிரியான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன என்பதை துள்ளியமாக கூற முடியவில்லை. இருப்பினும், அது விரைவில் உற்பத்திக்கு தயாராகும் நிலையில் இருப்பதை எங்களால் உறுதியாக கூற முடிகின்றது.

இப்போது வெளியாகி இருக்கும் தகவல்களும் அதையே உறுதி கூறுகின்றன. மாருதி சுஸுகி நிறுவனம் நகர பயன்பாட்டை கருத்தில் கொண்ட இந்த காரை வடிவமைத்திருக்கின்றது. அதேவேளையில், 4X4 தொழில்நுட்ப வசதியும் இந்த காரில் வழங்கியிருக்கின்றது, மாருதி சுஸுகி. மிக சிறந்த கிரவுண்ட் கிளியரன்ஸ், நீளமான வீல் பேஸ், சிறந்த ஏரோடைனமிக்ஸ் ஆகியவற்றை இவிஎக்ஸ் கொண்டிருக்கின்றது.
இந்த எலெக்ட்ரிக் காரை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 550 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இந்த சூப்பரான ரேஞ்ஜ் திறனைக் கொண்ட வாகனமாக இவிஎக்ஸ் விற்பனைக்கு வர இருக்கின்றது. இதற்காக, இதில் 60 kWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட இருக்கின்றது.

இந்த கார் பற்றிய வேறு எந்த முக்கிய விபரங்களும் வெளியிடப்படவில்லை. ஆனால், பிரத்யேகமாக மின்சார வாகனங்களுக்கு என உருவாக்கப்பட்ட தளத்தில் வைத்து இந்த கார் தயார் செய்யப்பட்டு வருவது தெரிய வந்திருக்கின்றது. ஆகையால், புதுமையான வசதிகள் பலவற்றை இந்த காரில் எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி சுஸுகியின் இந்த இவிஎக்ஸ் எலெக்ட்ரிக் இந்திய சந்தையிலும் விற்பனைக்குக் களமிறக்கப்பட உள்ளது. இது விற்பனைக்கு வரும்பட்சத்தில் டாடா நெக்ஸான் இவிக்கு மிக சிறந்த போட்டியாளனாக அது அமையும். இப்போதைய நிலவரப்படி இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் இவி-யாக நெக்ஸானே இருக்கின்றது. இதன் இடத்தை பிடிக்க கடும் போட்டி இந்திய சந்தையில் நிலவி வருவது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications









