இந்தியாவிற்கு வந்தது மாருதியின் முதல் எலெக்ட்ரிக் கார்! விலை இவ்ளோதானா! சிங்கிள் சார்ஜில் 550 கிமீ போகலாம்!

இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் கார்கள் (Electric Cars) விற்பனை தற்போது வெகுவாக உயர தொடங்கியுள்ளது. எனவே அனைத்து முன்னணி நிறுவனங்களும் தற்போது போட்டி போட்டு கொண்டு எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகின்றன. ஆனால் டாடா மோட்டார்ஸ் நிறுவனம்தான் இந்திய எலெக்ட்ரிக் கார் சந்தையில் தனி ஆவர்த்தனம் செய்து கொண்டுள்ளது.

டாடா மோட்டார்ஸ் தவிர, மஹிந்திரா (Mahindra), ஹூண்டாய் (Hyundai), கியா (Kia) மற்றும் எம்ஜி (MG) உள்ளிட்ட நிறுவனங்களும் இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வருகின்றன. ஆனால் இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி இன்னும் ஒரு எலெக்ட்ரிக் காரை கூட விற்பனைக்கு அறிமுகம் செய்யவில்லை.

Maruti Suzuki eVX

மாருதி சுஸுகி நிறுவனம் முதலில் வேகன் ஆர் எலெக்ட்ரிக் காரை (Maruti Suzuki Wagon R EV) இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. எனினும் மாருதி சுஸுகி நிறுவனத்திடம் இருந்து ஒரு எலெக்ட்ரிக் கார் என்ற இந்திய வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பு கூடிய விரைவில் நிறைவேற போகிறது.

இந்தியாவில் நடப்பு 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ (2023 Auto Expo) வாகன திருவிழாவில், மாருதி சுஸுகி இவிஎக்ஸ் (Maruti Suzuki eVX) என்ற எலெக்ட்ரிக் கார் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து சமீபத்தில் நடைபெற்ற 2023 ஜப்பான் மொபிலிட்டி ஷோ (2023 Japan Mobility Show) வாகன திருவிழாவிலும் இந்த கார் காட்சிக்கு வைக்கப்பட்டது.

Maruti Suzuki eVX Interior Design

இதை தொடர்ந்து இந்திய சாலைகளில் தற்போது மாருதி சுஸுகி இவிஎக்ஸ் எலெக்ட்ரிக் காரின் சோதனை ஓட்டம் தற்போது தொடங்கியுள்ளது. இந்திய சாலைகளில் மாருதி சுஸுகி இவிஎக்ஸ் எலெக்ட்ரிக் கார் சோதனை செய்யப்படுவது இதுவே முதல் முறை ஆகும். எனவே இனி ஆங்காங்கே மாருதி சுஸுகி இவிஎக்ஸ் எலெக்ட்ரிக் காரை நாம் பார்ப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

சோதனை ஓட்டம் தற்போது தொடங்கியுள்ள நிலையில், வரும் 2024ம் ஆண்டின் இறுதிக்குள்ளாக, மாருதி சுஸுகி இவிஎக்ஸ் எலெக்ட்ரிக் கார் இந்திய சந்தையில் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டபோது, இவிஎக்ஸ் எலெக்ட்ரிக் காரில், 60kWh பேட்டரி தொகுப்பு (Battery Pack) இருக்கும் என மாருதி சுஸுகி நிறுவனம் தெரிவித்தது.

இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 550 கிலோ மீட்டர்கள் பயணம் செய்ய முடியும் எனவும் மாருதி சுஸுகி நிறுவனம் தெரிவித்திருந்தது. இது தொலை தூர பயணங்களையும் மேற்கொள்வதற்கு ஏற்ற ரேஞ்ச் (Range)-ஆக இருக்கும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. எனவே இதே பேட்டரி மற்றும் ரேஞ்ச் உடன்தான், மாருதி சுஸுகி இவிஎக்ஸ் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது எலெக்ட்ரிக் எஸ்யூவி (Electric SUV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இந்தியாவில் உள்ள மாருதி சுஸுகி நிறுவனத்தின் நெக்ஸா (Nexa) ஷோரூம்கள் வாயிலாக இந்த எலெக்ட்ரிக் கார் விற்பனை செய்யப்படவுள்ளது. இது பிரீமியம் கார்களை விற்பனை செய்வதற்கான மாருதி சுஸுகி நிறுவனத்தின் பிரத்யேக ஷோரூம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இது பிரீமியம் எலெக்ட்ரிக் காராக இருந்தாலும் கூட, விலை (Price) அனேகமாக 15 அல்லது 20 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது எதிர்பார்க்கப்படும் எக்ஸ் ஷோரூம் விலையாகும். விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்போதுதான் அதிகாரப்பூர்வமான விலை அறிவிக்கப்படும்.

More from DriveSpark

Article Published On: Saturday, November 11, 2023, 15:46 [IST]
English summary
Maruti suzuki evx testing commenced in india all details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+