இந்தியாவிற்கு பெருமை தேடி தந்த மாருதி சுஸுகி! கேலி, கிண்டல்களுக்கு எல்லாம் தரமான பதிலடி குடுத்துட்டாங்க!
இந்தியாவின் கார் சந்தையில் யாராலும் அசைக்க முடியாத இடத்தில் உள்ள ஒரு நிறுவனம் மாருதி சுஸுகி (Maruti Suzuki). ஹூண்டாய் (Hyundai), டாடா (Tata), மஹிந்திரா (Mahindra) மற்றும் கியா (Kia) என போட்டி நிறுவனங்கள் அனைத்தும் மாருதி சுஸுகி நிறுவனத்தை கனவில் கூட நெருங்க முடியாத வகையில், வெகு தொலைவில் பின்னால் இருக்கின்றன.
இந்திய சந்தையில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னால் உள்ள காரணங்களை அடுக்கி கொண்டே போக முடியும். குறைவான விலை (Price), அதிக மைலேஜ் (Mileage) மற்றும் கவர்ச்சிகரமான டிசைன் (Design) ஆகியவற்றை இதற்கு மிக முக்கியமான காரணங்களாக கூறலாம்.

இதுதவிர நாடு முழுவதும் சர்வீஸ் சென்டர்கள் (Service Centers) தாராளமாக இருப்பதும், மாருதி சுஸுகி நிறுவனத்தின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக உள்ளது. இதே காரணங்களால், இந்தியாவில் மட்டுமல்லாது, வெளிநாடுகளிலும் கூட மாருதி சுஸுகி நிறுவனம் வெற்றிக்கொடி நாட்டி வருகிறது.
இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு கார்களை ஏற்றுமதி (Export) செய்யும் பணிகளை மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த 1986-87ம் நிதியாண்டில் தொடங்கியது. முதற்கட்டமாக வங்கதேசம் மற்றும் நேபாளம் போன்ற நாடுகளுக்கு மாருதி சுஸுகி நிறுவனம் கார்களை ஏற்றுமதி செய்தது. தற்போது கிட்டத்தட்ட 100 நாடுகளுக்கு மாருதி சுஸுகி கார்கள் ஏற்றுமதியாகி வருகின்றன.

மத்திய கிழக்கு, ஆசியா, லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆப்ரிக்கா போன்ற சந்தைகள், மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு மிகவும் முக்கியமானவையாக மாறியுள்ளன. நிறைய நாடுகளுக்கு கார்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் தற்போது புதிய மைல்கல் (Milestone) ஒன்றை மாருதி சுஸுகி நிறுவனம் கடந்துள்ளது.
கடந்த 1986-87ம் நிதியாண்டில் இருந்து மாருதி சுஸுகி நிறுவனம் ஏற்றுமதி செய்த கார்களின் எண்ணிக்கை 2.50 மில்லியன் என்ற எண்ணிக்கையை கடந்திருப்பதுதான் அந்த மைல்கல். 2.50 மில்லியன் என்பது 25 லட்சம் கார்கள் ஆகும். எனவே இது மிகப்பெரிய சாதனை என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.
அத்துடன் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இத்தனை கார்கள், வெளிநாடுகளில் ஓடி கொண்டிருப்பது நாம் அனைவரும் பெருமை கொள்ள வேண்டிய விஷயங்களில் ஒன்றாகும். இந்திய சந்தையை பொறுத்தவரையில் மாருதி சுஸுகி நிறுவனம் 2 புத்தம் புதிய கார்களை வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.
அவை மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் (Maruti Suzuki Fronx) மற்றும் மாருதி சுஸுகி ஜிம்னி (Maruti Suzuki Jimny) ஆகும். இந்த 2 கார்களுக்கும் ஒன்றாக சேர்த்து கிட்டத்தட்ட 40 ஆயிரம் முன்பதிவுகள் (Bookings) குவிந்துள்ளன. எனவே இந்த 2 கார்களும் விற்பனையில் சாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் என்ன நினைக்கிறது?
இந்தியாவில் இருந்து 25 லட்சம் கார்கள் ஏற்றுமதி என்ற மைல்கல்லை கடந்திருப்பது மாருதி சுஸுகி நிறுவனத்தின் உழைப்பு மற்றும் விடாமுயற்சியை எடுத்துக்காட்டுகிறது. அத்துடன் மத்திய அரசின் 'மேக் இன் இந்தியா' (Make In India) திட்டத்திற்கும் இந்த முயற்சி உறுதுணையாக இருக்கும்.


Click it and Unblock the Notifications