ஆளை மயக்குது! அழகில் வசியம் பண்ணும் மாருதி காரின் விலை இவ்ளோதானா! இதுல போனா ஊரே உங்களைதான் பாக்கும்!
இந்திய வாடிக்கையாளர்கள் தற்போது எஸ்யூவி (SUV) ரக கார்களை வாங்குவதற்கு அதிக ஆர்வம் காட்டுகின்றனர். எனவே அனைத்து நிறுவனங்களும் போட்டி போட்டு கொண்டு எஸ்யூவி ரக கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகின்றன. மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனமும் இதற்கு விதிவிலக்கு அல்ல.
தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza) மற்றும் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara) போன்ற எஸ்யூவி கார்களை அந்நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இந்த சூழலில் தற்போது நடைபெற்று வரும் 2023 ஆட்டோ எக்ஸ்போ (2023 Auto Expo) திருவிழாவின் மூலம் தனது எஸ்யூவி கார்களின் எண்ணிக்கையை மாருதி சுஸுகி நிறுவனம் அதிகப்படுத்தியுள்ளது.

ஆளை மயக்கும் ஃப்ரான்க்ஸ்!
2023 ஆட்டோ எக்ஸ்போ திருவிழாவில், ஃப்ரான்க்ஸ் என்ற பெயரில் மாருதி சுஸுகி நிறுவனம் (Maruti Suzuki Fronx), புதிய கார் ஒன்றை பொது பார்வைக்கு கொண்டு வந்துள்ளது. இது எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். மாருதி சுஸுகி நிறுவனத்தின் நெக்ஸா (Nexa) ஷோரூம்கள் வாயிலாக, ஃப்ரான்க்ஸ் கார் விற்பனை செய்யப்படவுள்ளது. மாருதி சுஸுகி நிறுவனம் அரேனா (Arena) மற்றும் நெக்ஸா என்ற 2 விதமான ஷோரூம்கள் மூலம் கார்களை விற்பனை செய்து வருகிறது.
இதில் பிரீமியம் கார்கள் எல்லாம் நெக்ஸா ஷோரூம்கள் வாயிலாக விற்பனை செய்யப்படுகின்றன. புதிய ஃப்ரான்க்ஸ் கார், பிரீமியமான மாடல் என்பதால், நெக்ஸா ஷோரூம்கள் மூலம் விற்பனை செய்யப்படவுள்ளது. இந்த புதிய காரின் டிசைன், ஆளை மயக்கும் வகையில் மிகவும் கவர்ச்சிகரமாக உள்ளது. மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காருக்கு முன்பதிவுகளை ஏற்கும் பணிகள் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டு விட்டன. ஆனால் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. வரும் மாதங்களில் அதிகாரப்பூர்வமாக விலை அறிவிக்கப்பட்டு, முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எக்கசக்கமான வசதிகள்!
மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரில், ட்யூயல் டோன் இன்டீரியர் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் 9 இன்ச் ஸ்மார்ட்ப்ளே ப்ரோ ப்ளஸ் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், தட்டையான அடிப்பாகம் கொண்ட 3 ஸ்போக் ஸ்டியரிங் வீல், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, 360 டிகிரி கேமரா மற்றும் செவ்வக வடிவ ஏர் வெண்ட்கள் ஆகிய வசதிகளும் இடம்பெற்றுள்ளன.
இதுதவிர சுஸுகி கனெக்ட் வசதியும் இந்த காரில் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 40க்கும் மேற்பட்ட கனெக்டட் கார் தொழில்நுட்ப வசதிகளை வாடிக்கையாளர்கள் பெற முடியும். அதே சமயம் இந்த காரில் பாதுகாப்பு வசதிகளுக்கும் பஞ்சமில்லை. இதில், 6 ஏர் பேக்குகள், இஎஸ்பி, ஹில் ஹோல்டு அஸிஸ்ட், ரோல் ஓவர் மிட்டிகேஷன், இபிடி உடன் ஏபிஎஸ் மற்றும் பிரேக் அஸிஸ்ட் போன்ற வசதிகள் குறிப்பிடத்தகுந்தவை.

சூப்பரான இன்ஜின்கள்!
விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் கார், 2 பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் கிடைக்கும். இதில், 1.2 லிட்டர், கே-சீரிஸ், ட்யூயல் ஜெட் ட்யூயல் விவிடி இன்ஜின் ஒன்றாகும். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 6,000 ஆர்பிஎம்மில் 89 பிஹெச்பி பவரையும், 4,400 ஆர்பிஎம்மில் 113 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள், இந்த இன்ஜினுடன் வழங்கப்படும்.
இதுதவிர மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரில், 1.0 லிட்டர், கே-சீரிஸ் இன்ஜின் ஆப்ஷனும் வழங்கப்படவுள்ளது. இது டர்போ இன்ஜின் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 5,500 ஆர்பிஎம்மில் 99 பிஹெச்பி பவரையும், 2,000-4,500 ஆர்பிஎம்மில் 148 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படும்.
இத்தனை கார்களுக்கு செக் வைக்க போறாங்களா!
இந்திய சந்தையில் டாடா நெக்ஸான் (Tata Nexon), கியா சொனெட் (Kia Sonet) மற்றும் ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue) போன்ற கார்களுக்கு, மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் கார் விற்பனையில் கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரின் ஆரம்ப விலை (Price) 8 லட்ச ரூபாய் என்ற அளவில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் நாளில்தான் அதிகாரப்பூர்வமான விலை அறிவிக்கப்படும்.


Click it and Unblock the Notifications








