ஷோரூம்களுக்கு வர தொடங்கிய மாருதியின் விலை குறைவான கார்! திருவிழா மாதிரி பொதுமக்கள் கூட்டம் கூடுதாம்!

இந்தியாவின் மிகப்பெரிய வாகன திருவிழாவான 2023 ஆட்டோ எக்ஸ்போ (2023 Auto Expo) சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. இதில், மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் (Maruti Suzuki Fronx) என்ற புதிய கார் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இது கூபே (Coupe SUV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும்.

ஏற்கனவே விற்பனையில் உள்ள மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno) காரின் அடிப்படையில், ஃப்ரான்க்ஸ் கார் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய காருக்கு முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகள் ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டு விட்டன. விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள் 11 ஆயிரம் ரூபாயை முன்பணமாக செலுத்தி, மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரை புக்கிங் செய்து கொள்ளலாம். வாடிக்கையாளர்கள் பலரும் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரை ஆர்வத்துடன் புக்கிங் செய்து வருகின்றனர்.

ஷோரூம்களுக்கு வர தொடங்கிய மாருதியின் விலை குறைவான கார்! திருவிழா மாதிரி பொதுமக்கள் கூட்டம் கூடுதாம்!

ஷோரூம்களில் தரிசனம்!

ஆனால் மாருதி சுஸுகி நிறுவனம் ஃப்ரான்க்ஸ் காரின் விலையை (Price) இன்னும் அறிவிக்கவில்லை. வரும் ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் இந்த காரின் விலைகள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னதாக தற்போதே மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் கார் இந்தியாவில் உள்ள டீலர்ஷிப்களுக்கு வர தொடங்கியுள்ளது. எனவே மாருதி சுஸுகி நிறுவனம் ஏப்ரல் மாதத்திற்கு முன்னதாகவே விலைகளை அறிவித்து, இந்த காரை முறைப்படி விற்பனைக்கு கொண்டு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஆளை மயக்கும் அழகு!

தற்போது ஷோரூம்களுக்கு வர தொடங்கியிருப்பது, மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரின் விலை குறைவான பேஸ் வேரியண்ட் ஆகும். இதன் முன் பகுதியில் எல்இடி பகல் நேர விளக்குகளும், ஹாலோஜன் ஹெட்லேம்ப்களும் வழங்கப்பட்டுள்ளன. இதுதவிர கருப்பு நிற டோர் ஹேண்டில்கள் மற்றும் ஓஆர்விம்களும் இடம்பெற்றுள்ளன. அத்துடன் சில்வர் ரூஃப் ரெயில்களும் கொடுக்கப்பட்டுள்ளன. பின் பகுதியை பொறுத்தவரையில், எல்இடி டெயில்லைட்கள், ஸ்டாப் லேம்ப் உடன் ஒருங்கிணைந்த ஸ்பாய்லர், சுறா துடுப்பு ஆன்டெனா ஆகிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. எனவே இதன் டிசைன் அனைவரையும் கவரக்கூடிய வகையில் இருக்கிறது. அத்துடன் ஸ்கிட் பிளேட்களும் இந்த காருக்கு கூடுதல் கவர்ச்சியை சேர்க்கின்றன.

ஷோரூம்களுக்கு வர தொடங்கிய மாருதியின் விலை குறைவான கார்! திருவிழா மாதிரி பொதுமக்கள் கூட்டம் கூடுதாம்!

மதிப்பு வாய்ந்த தேர்வு!

தற்போது ஷோரூம்களுக்கு வர தொடங்கியுள்ள பேஸ் வேரியண்ட்டின் உட்பகுதியை பொறுத்தவரையில், தட்டையான அடிப்பாகம் கொண்ட ஸ்டியரிங் வீல் வழங்கப்பட்டுள்ளது. இதில் டில்ட் அட்ஜெஸ்ட் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர மேனுவல் ஏசி, கியர் ஷிஃப்ட் இன்டிகேட்டர் மற்றும் ஏர்பேக்குகள் ஆகிய வசதிகளையும் மாருதி சுஸுகி நிறுவனம் இந்த காரில் வழங்கியுள்ளது. எனவே வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு இது மதிப்பு வாய்ந்த தேர்வாக இருக்கும்.

டாப் வேரியண்ட்களில் எக்கசக்கமான வசதிகள் இருக்கு!

ஆனால் இது பேஸ் வேரியண்ட் என்பதால், க்ரூஸ் கண்ட்ரோல், 360 டிகிரி கேமரா, ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, 9 இன்ச் ஸ்மார்ட்ப்ளே ப்ரோ ப்ளஸ் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், சுஸுகி கனெக்ட் மற்றும் வயர்லெஸ் செல்போன் சார்ஜர் ஆகிய வசதிகள் இடம்பெறவில்லை. ஆனால் இந்த காரின் டாப் வேரியண்ட்களில் இந்த வசதிகள் இடம்பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்ஜின், கியர் பாக்ஸ்!

மாருதி சுஸுகி நிறுவனம் புதிய ஃப்ரான்க்ஸ் காரில், வாடிக்கையாளர்களுக்கு 2 இன்ஜின் ஆப்ஷன்களை வழங்கியுள்ளது. அவை 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்கள் ஆகும். அதே சமயம் இந்த காரில் 3 கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் இடம்பெற்றுள்ளன. அவை 5 ஸ்பீடு மேனுவல், ஏஎம்டி மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் ஆகும்.

போட்டி கார்கள்!

கியா சொனெட் (Kia Sonet), ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue), டாடா நெக்ஸான் (Tata Nexon), மஹிந்திரா எக்ஸ்யூவி300 (Mahindra XUV300) போன்ற கார்களுக்கு போட்டியாக மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. அத்துடன் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza) காருக்கும், புதிய மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் சிறந்த மாற்றாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

Image Courtesy: Real Gaadi

Most Read Articles
English summary
Maruti suzuki fronx arrives at dealerships check details here
Story first published: Friday, January 27, 2023, 10:26 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X