போச்சு! சொந்த காசில் சூனியம் வைத்து கொண்ட மாருதி சுஸுகி! இப்படி ஆகும்னு கனவுலயும் நெனச்சிருக்க மாட்டாங்க!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno). இது பிரீமியம் ஹேட்ச்பேக் (Premium Hatchback) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இந்த காரின் அடிப்படையில் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் (Maruti Suzuki Fronx) என்ற கார், கடந்த ஏப்ரல் மாத இறுதியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
இது கூபே-எஸ்யூவி (Coupe-SUV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரின் வருகை, மாருதி சுஸுகி பலேனோ காருக்கு விற்பனையில் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கும் தகவல் தற்போது நமக்கு கிடைத்துள்ளது. மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னதாக, மாருதி சுஸுகி பலேனோ காருக்கு தினமும் சுமார் 830 முன்பதிவுகள் (Bookings) குவிந்து வந்தன.

ஆனால் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரின் விலைகள் அறிவிக்கப்பட்ட பிறகு இந்த எண்ணிக்கை 700 ஆக குறைந்துள்ளது. மாருதி சுஸுகி பலேனோ காரை வாங்க திட்டமிட்டிருந்த பலர், மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரின் பக்கம் சாய தொடங்கியிருப்பதுதான் இதற்கு மிக முக்கியமான காரணமாக கூறப்படுகிறது.
தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காருக்கு தினமும் சுமார் 550 முன்பதிவுகள் குவிந்து கொண்டுள்ளன. வரும் மாதங்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரும் வரவேற்பை பெற்று வரும் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரின் ஆரம்ப விலை (Price), 7.46 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 13.13 லட்ச ரூபாயாக இருக்கிறது.

இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரில் மொத்தம் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. அவை 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின்கள் ஆகும். இதில் டர்போ பெட்ரோல் இன்ஜின் உடன், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.
மறுபக்கம் 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்படுகின்றன. அத்துடன் பல்வேறு அதிநவீன வசதிகளும் இந்த காரில் வாரி வழங்கப்பட்டுள்ளன. இதன் காரணமாகவே இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரின் வருகை, மாருதி சுஸுகி பலேனோ காருக்கு மட்டுமல்லாது, சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார்களுக்கும் விற்பனையில் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதில் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza) கார் முக்கியமானது.
இதுதவிர கியா சொனெட் (Kia Sonet), டாடா நெக்ஸான் (Tata Nexon), ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue) மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி 300 (Mahindra XUV 300) ஆகிய கார்களுக்கும், மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் கார் விற்பனையில் நெருக்கடியை ஏற்படுத்த தொடங்கியுள்ளது.


Click it and Unblock the Notifications