மத்தவங்க கண்ணு வைக்கற அளவுக்கு மைலேஜ் தரும் மாருதி கார்! ஷோரூம்களுக்கு போலீஸ் பாதுகாப்புதான் போடணும்!
இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற 2023 ஆட்டோ எக்ஸ்போ (2023 Auto Expo) வாகன கண்காட்சியில், மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் (Maruti Suzuki Fronx) கார் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. முதல் பார்வையிலேயே வாடிக்கையாளர்களை கவரும் வகையில், மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் கார் டிசைன் செய்யப்பட்டுள்ளது.
மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரில், 360 டிகிரி கேமரா, ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, க்ரூஸ் கண்ட்ரோல், லெதர் சுற்றப்பட்ட ஸ்டியரிங் வீல், வயர்லெஸ் ஸ்மார்ட்போன் கனெக்ட்டிவிட்டி உடன் 7.0 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 6 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், ஓடிஏ அப்டேட்கள் மற்றும் சுஸுகி கனெக்டட் கார் தொழில்நுட்பம் என ஏராளமான வசதிகள் (Features) வாரி வழங்கப்பட்டுள்ளன. சிக்மா, டெல்டா, டெல்டா ப்ளஸ், ஜெட்டா மற்றும் ஆல்பா என மொத்தம் 5 வேரியண்ட்களில் (Variants) இந்த கார் கிடைக்கும்.

டர்போ பெட்ரோல் இன்ஜின்லாம் இருக்கா!
1.0 லிட்டர் 3 சிலிண்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் 4 சிலிண்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் என மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரில் மொத்தம் 2 இன்ஜின் (Engine) ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த 2 இன்ஜின்களிலும் சுஸுகி நிறுவனத்தின் மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பம் இடம்பெற்றிருக்கும். இதில் டர்போ பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 100 பிஹெச்பி பவரையும், 148 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. அதே நேரத்தில் நேச்சுரலி அஸ்பிரேட்டட் இன்ஜின் அதிகபட்சமாக 90 பிஹெச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் வழங்க கூடியது.
முன்பதிவு குவிகிறது!
அதே நேரத்தில் 5 ஸ்பீடு மேனுவல், 5 ஸ்பீடு ஏஎம்டி மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் என மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரில் மொத்தம் 3 கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. 8 லட்ச ரூபாய் என்ற ஆரம்ப விலையில் (Price) மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே வாடிக்கையாளர்கள் பலரும் தற்போது மிகுந்த ஆர்வத்துடன் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரை முன்பதிவு செய்து வருகின்றனர்.

சிஎன்ஜி மாடலும் வரப்போகுதா!
இந்த சூழலில் எமிஷன் டெஸ்டிங் டிவைஸ் உடன் ஃப்ரான்க்ஸ் காரை மாருதி சுஸுகி நிறுவனம் தற்போது சாலைகளில் சோதனை செய்து வருகிறது. இது மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரின் சிஎன்ஜி (CNG) மாடலாக இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் கார் சிஎன்ஜி மாடலிலும் கிடைக்க போகிறதா? என்ற எதிர்பார்ப்பு இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
மைலேஜை அள்ளி குடுக்கும்!
ஒருவேளை மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரின் சிஎன்ஜி மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டால், அதில் 1.2 லிட்டர் இன்ஜின் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. சிஎன்ஜி எரிபொருளில் இயங்கும்போது இந்த இன்ஜினின் பவர் அவுட்புட் 76 பிஹெச்பி மற்றும் 98 என்எம்-ஆக இருக்கலாம். பவர் அவுட்புட் சற்று குறைவுதான் என்றாலும் கூட, இந்த மாடல் சிறப்பான மைலேஜை (Mileage) வழங்கும் என நாம் உறுதியாக எதிர்பார்க்கலாம். அதே சமயம் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரின் சிஎன்ஜி மாடலில் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் மட்டுமே வழங்கப்படும் என கூறப்படுகிறது.
எப்ப விற்பனைக்கு வரும்?
மாருதி சுஸுகி நிறுவனத்தின் பல்வேறு கார்களில் தற்போது சிஎன்ஜி மாடல்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. எனவே மாருதி சுஸுகி நிறுவனம் ஃப்ரான்க்ஸ் காரிலும் சிஎன்ஜி மாடலை அறிமுகம் செய்வதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக இருக்கின்றன. மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் கார் இன்னும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவில்லை. வரும் ஏப்ரல் மாதம்தான் விலைகள் அறிவிக்கப்பட்டு முறைப்படி விற்பனைக்கு கொண்டு வரப்படவுள்ளது.
அதே சமயத்தில் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரின் சிஎன்ஜி மாடலும் களமிறக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. சிஎன்ஜி மாடலுடன் சேர்த்து களமிறக்கப்பட்டால், மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரின் விற்பனை அமர்க்களப்படுத்தலாம். ஏனெனில் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் தற்போது சிஎன்ஜி கார்களுக்கு மிகவும் பிரம்மாண்டமான வரவேற்பு கிடைத்து வருகிறது. பெட்ரோல் (Petrol), டீசலின் (Diesel) அதிகப்படியான விலையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பும் வாடிக்கையாளர்களை சிஎன்ஜி கார்களை நோக்கி திருப்பி கொண்டுள்ளன.
களைகட்ட போகும் ஷோரூம்கள்!
மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரின் பெட்ரோல் மாடல் ஏற்கனவே இந்தியாவில் உள்ள ஷோரூம்களுக்கு வர தொடங்கி விட்டது. வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளதை இது உணர்த்துகிறது. இந்த பெட்ரோல் மாடலை பற்றி விசாரிப்பதற்கே ஷோரூம்களுக்கு மக்கள் படையெடுப்பதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரின் சிஎன்ஜி மாடலும் களமிறங்கினால், ஷோரூம்கள் களைகட்டும் என்பதில் சந்தேகமில்லை.


Click it and Unblock the Notifications








